IRCTC பங்குகளை தள்ளுபடி உடன் விற்கும் மத்திய அரசு.. வாங்குவது எப்படி ..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வியாழக்கிழமை ஐஆர்சிடிசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு அதிக லாபத்தை அளித்த வெகு சில நிறுவனங்களில் IRCTC ஒன்று.

 

அக்டோபர் 2021 க்கு பின்பு தொடர் சரிவை சந்தித்து வரும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் IRCTC தனது பொலிவை இழந்தது. இந்த நிலையில் ஒன்றிய அரசு ஐஆர்சிடிசி பங்குகளை அதன் அடிப்படை விலையான 680 ரூபாய்க்கு OFS பிரிவில் விற்பனை செய்ய உள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தனது கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு நிறுவனங்களின் சொத்துக்களைப் படிப்படியாகக் குறைத்து வருகிறது. ஜனவரி மாதம் IDBI வங்கியின் தனியார்மயமாக்கல் செய்ய விருப்ப விண்ணப்பத்தை ஜனவரி மாதம் வரையில் பெற உள்ளது.

எல்ஐசி நிறுவனத்திற்குத் தனியார் தலைவர்.. மோடி அரசு திடீர் முடிவு..?! எல்ஐசி நிறுவனத்திற்குத் தனியார் தலைவர்.. மோடி அரசு திடீர் முடிவு..?!

4 கோடி பங்குகள் விற்பனை

4 கோடி பங்குகள் விற்பனை

ஒன்றிய அரசு OFS திட்டத்தின் கீழ் முதலில் 2 கோடி IRCTC பங்குகள் அதாவது 2.5 சதவீத பங்குகள் அடங்கிய தொகுப்பை விற்பனை செய்ய உள்ளது. மேலும் ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷன் கீழ் மற்றொரு 2.5 சதவீத பங்குகளை அதாவது மொத்தம் 4 கோடி பங்குகள் 2 பிரிவுகளாக விற்பனை செய்ய உள்ளது.

2,700 கோடி ரூபாய்

2,700 கோடி ரூபாய்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.680 என்ற விலையில் சுமார் 4 கோடி பங்குகளை விற்பனை செய்வது மூலம் ஒன்றிய அரசின் கஜானாவிற்குச் சுமார் 2,700 கோடி ரூபாய் அளவிலான நிதி கிடைக்கும்.

மும்பை பங்குச்சந்தை
 

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில் ஐஆர்சிடிசி-யின் பங்குகள் புதன்கிழமை வர்த்தக முடிவில் 734.70 ரூபாய்க்கு முடிவடைந்த நிலையில், 7.4 சதவீதம் தள்ளுபடியில் இன்றைய 4 கோடி பங்குகளின் Floor Price நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

வியாழன், வெள்ளி

வியாழன், வெள்ளி

ஒன்றிய அரசின் இந்தப் பங்கு விற்பனையில் வியாழக்கிழமைகளில் நிறுவன முதலீட்டாளர்களுக்கும், வெள்ளிக்கிழமை சில்லறை முதலீட்டாளர்களுக்கும் OFS திறக்கப்படும். இதனால் சிறு முதலீட்டாளர்கள் IRCTC பங்குகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டால் வெள்ளிக்கிழமை OFS கதவுகள் திறக்க உள்ளது.

OFS கீழ் IRCTC பங்குகளை வாங்குவது எப்படி?

OFS கீழ் IRCTC பங்குகளை வாங்குவது எப்படி?

ஐபிஓ முதலீடு செய்வது போலவே பங்கு வர்த்தகம் செய்யும் தளத்தில் OFS முறையில் விற்பனைக்கு வரும் அனைத்து பங்குகளையும் ரீடைல் முதலீட்டாளர்கள் வாங்க முடியும். ஆனால் OFS கீழ் எந்தொரு ஆவணமும் இல்லாமல் பங்குகளை வாங்க முடியும் என்பது முக்கிய வித்தியாசம்.

disinvestment டார்கெட்

disinvestment டார்கெட்

ஐஆர்சிடிசி நிறுவனத்தின் 5 சதவீதம் பங்குகள் அதாவது 4 கோடி பங்குகளை விற்பனை செய்வது மூலம் கிடைக்கும் வருமானம் மத்திய அரசின் பங்கு விற்பனையில் பிரிவில் (disinvestment) சேரும். ஒன்றிய அரசு நடப்பு நிதியாண்டில் அரசு சொத்துக்களை விற்பனை செய்வது (disinvestment) மூலம் சுமார் 65,000 கோடி ரூபாய் திரட்ட வேண்டும் எனப் பட்ஜெட் அறிக்கையில் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

பங்கு விற்பனை

பங்கு விற்பனை

இந்த நிலையில் ஒன்றிய அரசு இதுவரை மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.28,383 கோடியை திரட்டியுள்ளது. எஞ்சியுள்ள இலக்கை அடைய முடியுமா என்றால் சந்தேகம் தான், ஆனால் அரசு நிறுவனங்களையும், பங்கு விற்பனைகளைச் செய்யும் திட்டங்களும் ஒன்றிய அரசு தயாராக வைத்துள்ளது.65,000 கோடி ரூபாய் என்ற இலக்கை அடைய முடியுமா என்றால் சந்தேகமே.

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி

ஒன்றிய அரசும் எல்ஐசி நிறுவனமும் இணைந்து ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீதத்தை விற்க முடிவு செய்துள்ளது. இந்தப் பங்குகளை வாங்க விரும்புவோர் ஏல தொகையை விண்ணப்பிக்கலாம் என அக்டோபர் மாதம் அறிவித்தது. இந்த நிலையில் விருப்ப விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசித் தேதி டிசம்பர் 16 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில், இதை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆக நீட்டித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IRCTC shares up for sale; Modi Govt disinvest 5% IRCTC stake today, How to buy?

IRCTC shares up for sale; Modi Govt disinvest 5% IRCTC stake today, How to buy?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X