எங்கள நம்பி காசு போட்ட மக்களுக்கு ரூ.9000 கோடி நஷ்டமா? நாங்க வேணும்ன்னு பண்ணலயா கதறும் Jet Airways!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Jet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் நிறுவனத்தை எப்படி இயக்குவது என முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ வங்கி. மற்றொரு பக்கம் Jet Airways நிறுவனத்தின் ஊழியர்கள் நான்கு மாத சம்பளம் இல்லாமல் அடுத்த வேலையைத் தேடி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள நம்பி காசு போட்ட மக்களுக்கு ரூ.9000 கோடி நஷ்டமா? நாங்க வேணும்ன்னு பண்ணலயா கதறும் Jet Airways!

கடந்த ஜனவரி 2018 முதல் ஜெட் ஏர்வேல் நிறுவனத்தின் நிதி நெருக்கடி பிரச்னைகள் வொவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. முதலில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கி இருந்த 8,500 கோடி ரூபாய் கடன் செலுத்தவில்லை எனத் தொடங்கிய பிரச்னை படிப்படியாக இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கிறது.

சம்பளப் பிரச்னை, விமான எரிபொருளுக்கு கடன் பாக்கி, ஹெச் எஸ் பி சி (HSBC) வங்கியிடம் வாங்கிய 140 மில்லியன் டாலர் வெளிநாட்டு கரன்ஸி கடன் பாக்கி, விமானங்களுக்கான குத்தகைத் தொகை பாக்கி, பயணிகளுக்கான ரீஃபண்ட் தொகை பாக்கி என நொந்து கொண்டிருக்கிறார்கள் Jet Airways நிறுவனத்தினர்கள்.

ஒரு பக்கம் இந்த சம்பவங்களுக்கு அனைவரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் இந்திய விமான சேவை நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை ஷார்ப்பாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு பாகமாக Jet Airways-ன் விமானிகள் தொடங்கி லாபகரமான விமான வழித் தடங்கள் வரை இண்டிகோவும், ஸ்பைஸ் ஜெட்டும் போட்டி போட்டுக் கொண்டு வளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரி நம் நஷ்ட கணக்குக்கு வருவோம். கடந்த 2018 ஜனவரி 05 அன்று Jet Airways நிறுவன பங்கின் விலை 870 ரூபாயில் வர்த்தகமானது. அதன் பிறகு தான் ஒவ்வொரு நெகட்டிவ் செய்தியாக வரத் டொடங்கியது. இப்போது அதே Jet Airways நிறுவன பங்கி விலை வெரும் 38.50 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

கடந்த ஜனவரி 2018-ல் Jet Airways நிறுவனத்தின் மொத்த 11.35 கோடி பங்குகளையும் 870 ரூபாய்க்கு விற்றிருந்தால் சுமார் 9,875 கோடி ரூபாய் பணம் கிடைத்திருக்கும். இதைத் தான் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் எனச் சொல்வோம்.

ஆனால் இப்போது அதே 11.35 கோடி பங்குகளை இன்றைய Jet Airways நிறுவன பங்கு விலையான 38.50 ரூபாய்க்கு விற்றால் 450 கோடி ரூபாய் கூட கிடைக்காது. ஆக இந்த Jet Airways நிறுவன பங்குகளை நம்பி முதலீடு செய்த மக்களுக்கு சுமார் 9425 கோடி ரூபாய் பலத்த நஷ்டத்தை பங்குச் சந்தையில் நம்பி முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் கொடுத்திருக்கிறது Jet Airways.

ஆக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தர வேண்டிய கடன் தொகை சுமார் 8500 கோடி ரூபாயை விட, முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஏற்பட்ட 9425 கோடி ரூபாய் நஷ்டம் மிகப் பெரியதாக இருப்பதைப் பார்த்து பாமர மக்களும் கொஞ்சம் அதிர்ந்து தான் போய் இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

jet airways share gave approx 9000 crore market cap loss from its all time high

jet airways share gave approx 9000 crore market cap loss from its all time high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X