பங்குச் சந்தையில் என்ன ஆச்சு! விலை, வால்யூம் அடிப்படையில் பங்குகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று சென்செக்ஸ் ஒரே நாளில் 465 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. கொரோனா வீழ்ச்சிக்குப் பின் (மார்ச் 2020), சென்செக்ஸ் 36,487 புள்ளிகளில் நிறைவடைவது இதுவே முதல் முறை. அதே நிஃப்டி 156 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,763 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு நிஃப்டி 10,763 புள்ளிகளில் நிறைவடைவது இதுவே முதல் முறை.

 

இன்று இந்தியாவின் டாப் 200 பங்குகளில் கோத்ரேஜ் அக்ரோ - 14.14 %, பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடெட் 12.29 %, மஹிந்திரா & மஹிந்திரா 7.39 %, பஜாஜ் ஃபைனான்ஸ் 6.46 %, எஸ் ஆர் எஃப் 6.36 %, அசோக் லேலண்ட் 5.91 %, ஹிண்டால்கோ 5.67 %, டாடா மோட்டார்ஸ் 5.36 %, ஆதித்யா பிர்லா ஃபேஷன் 5.31 % ஏற்றம் கண்டு இருக்கின்றன.

பங்குச் சந்தையில் என்ன ஆச்சு!  விலை, வால்யூம் அடிப்படையில் பங்குகள் விவரம்!

ஃப்யூச்சர் ரீடெயில், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஃப்யூச்சர் கன்ஸ்யூமர், ரிலையன்ஸ் பவர், எடல்வீஸ், ஐ டி சி, லுபின், டிஷ் டிவி, டாரண்ட் பார்மா, ஐடியா, மெரிகோ, பஜாஜ் ஆட்டோ, முத்தூட் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் விலை சுமாராக 1 - 5 சதவிகிதம் வரை விலை சரிந்து இருக்கின்றன.

பி ஹெச் இ எல், ஐடியா, டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், செயில், பி இ எல், எஸ் பி ஐ, இந்தியா புல்ஸ் ஹவுசிங், பி என் பி, ஐ டி சி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

கடந்த 3 நாள் சராசரி வால்யூமை விட அதிக வால்யூம்களில் வர்த்தகமான பங்குகள் பட்டியல் இதோ. ரிலையன்ஸ் பவர், பி எஃப் சி, அதானி பவர், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், எஸ்கார்ட்ஸ், கான்கார், லுபின், ஏ யூ பேங்க், ப்ரஸ்டீஜ், சன் பார்மா, அப்பல்லோ டயர்ஸ், பிரிட்டானியா போன்ற பங்குகளில் வழக்கத்தை விட கூடுதல் வால்யூம்களில் வர்த்தகம் நடந்து இருக்கிறது.

 

இந்தியாவின் டாப் 200 பங்குகளில் ஏ யூ பேங்க், Varroc Engineering Ltd, ஐ டி பி ஐ, பி ஹெச் இ எல் போன்ற பங்குகள் தான் அப்பர் சர்க்யூட் தொட்டு வர்த்தகமாகி இருக்கின்றன.

நாளை வர்த்தகத்தின் போது இவைகளை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு வர்த்தகத்தை மேற்கொள்ளவும்.

நாம் சனிக்கிழமை, "அனல் பறக்கும் அனில் அம்பானி பங்குகள்" என்கிற தலைப்பில், எப்போது வேண்டுமானாலும் ரிலையன்ஸ் இன்ஃப்ரா மற்றும் ரிலையன்ஸ் பவர் பங்குகள் வீழ்ச்சி காணலாம் எனச் சொல்லி இருந்தோம். உஷாராக டிரேட் செய்யுமாறும் அறிவுறுத்தி இருந்தோம். சொன்ன படி இன்று வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

market snapshot based on price volume of shares 06 July 2020

market snapshot based on price volume of shares 06 July 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X