உதய் கோடக் போட்ட ட்வீட்.. மெட்டா பங்குகள் வீழ்ச்சி.. அமேசான் முதலீட்டாளர்கள் கவலை.. இனி என்னவாகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா பிளார்ட்பார்ம்ஸ் இன்க் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த வியாழக்கிழமையன்று 25% சரிவினைக் கண்டது.

தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சரிவினைக் கண்டுள்ள மெட்டா நிறுவனம், தொடர்ந்து விளம்பர வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் மெட்டா நிறுவனத்தின் பங்கு விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

முன்னதாக பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் பொறுமையாக காத்திருங்கள் என கூறியிருந்தது கைகொடுக்கவில்லை எனலாம்.

பேஸ்புக் முடிவால் 160 ஊழியர்கள் பணிநீக்கம்.. மார்க் ஜூக்கர்பெர்க் பதில் என்ன..? பேஸ்புக் முடிவால் 160 ஊழியர்கள் பணிநீக்கம்.. மார்க் ஜூக்கர்பெர்க் பதில் என்ன..?

வருவாய் சரிவு

வருவாய் சரிவு

இது பிரபல வீடியோ ஆப்பான டிக்டாக்கின் போட்டிக்கு மத்தியில் பேஸ்புக்கிற்கு போட்டி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இதன் முக்கிய வருவாய் ஆதாரமான இருந்த விளம்பர வருவாய் பெரும் சரிவினைக் கண்டுள்ளது.

மேலும் பலவீனமான காலாண்டு முடிவுக்கு மத்தியில் ஆண்டுக்கு மெட்டாவெர்ஸ்- காக ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டுள்ளது சாத்தியமாகுமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

உதய் கோடக் கருத்து

உதய் கோடக் கருத்து

கோடக் மகேந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரியான உதய் கோடக், மெட்டா பங்குகள் வியாழக்கிழமையன்று 25% சரிவினைக் கண்டுள்ளதை அடுத்து, அமேசான் பங்குகள் இன்று சரிவடையலாம் என கூறியுள்ளார்.

பங்கு சந்தை சரியான விலையை கண்டுபிடிப்பதற்கான தளமா? பொருளாதாரத்திற்கு மூலதனம் வழங்குபவரா? அல்லது சூதாட்டமா? என்ற கேள்வியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளார்.

 பிப்ரவரி மாதத்திலும் சரிவு

பிப்ரவரி மாதத்திலும் சரிவு

கடந்த பிப்ரவரி 2022ல் மெட்டா பங்குகள் ஒரே நாளில் 24.5% என்ற அளவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியினை சந்தித்தன. அந்த சமயத்தில் ஒரே நாளில் அதன் சந்தை மதிப்பானது 23,000 கோடி ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டது.

பேஸ்புக்கின் அடுத்த கட்டமாக மெட்டாவெர்ஸ் என்ற மெய்நிகர் உலகமாக வளர்த்தெடுக்க, மார்க் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றார். ஆனால் இதனால் எந்தளவுக்கு பயன் இருக்கும் என்ற கேள்விகள் பல தரப்பில் இருந்தும் இருந்து வருகின்றது.

இனி வாய்ப்பில்லை ராஜா?

இனி வாய்ப்பில்லை ராஜா?


மார்க் முதலீட்டாளர்களை பொறுமையுடன் காத்திருங்கள் என்றும் கூறியிருந்தாலும், மார்க்கின் இந்த கோரிக்கை இந்த சமயத்தில் கைகொடுக்கவில்லை என்றே கூறலாம்.

இதற்கிடையில் மற்றொரு தரப்பு பேஸ்புக் நிறுவனம் வளர்ந்துகொண்டே உள்ளது. இனி வளர்வதற்கு வாய்ப்பில்லை என்ற கட்டத்தை அடைந்துவிட்டது. இன்ஸ்டாகிராம், டிக்டாக் வளர்ச்சிக்குப் பிறகு சுருங்கவும் செய்கிறது. தொடர்ந்து பேஸ்புக் அதன் பயனாளர்களை இழந்து வருகின்றது என்று கூறுகின்றது.

ஜூக்கர்பெர்க்கின் நம்பிக்கை

ஜூக்கர்பெர்க்கின் நம்பிக்கை

எனினும் சமூகவலைதளங்களின் அடுத்த தலைமுறை மெட்டா என்று ஜூக்கர்பெர்க் நம்புகிறார். அதற்காக பல கோடிகளைச் செலவிடவும் தயாராக உள்ளார். ஜூக்கர்பெர்க் நினைக்கும் அளவுக்கு வருமானம் வருமா என்பது தான் தற்போது முதலீட்டாளார்களின் கேள்வியே.

தடை விதிக்கப்பட்டால்?

தடை விதிக்கப்பட்டால்?

இந்த நிலையில் ஜூக்கர்பெர்க்கின் திட்டத்திற்கு எதிராக அமெரிக்க அரசு, கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினால் இது மேற்கொண்டு பிரச்சினையாக மாறலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஏற்கனவே மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகளை அரசு வெவ்வேறு விதமாக விசாரனை செய்து வருகின்றது.

செப்டம்பர் காலாண்டில் சரிவு

செப்டம்பர் காலாண்டில் சரிவு

இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக செப்டம்பர் காலாண்டில் மெட்டா நிறுவனத்தின் வருவாயும், லாபமும் சரிவினைக் கண்டுள்ளது. செப்டம்பர் காலாண்டில் மெட்டா நிறுவனம் 440 கோடி டாலர் அல்லது ஒரு பங்குக்கு 164 டாலர் லாபம் ஈட்டியுள்ளது. எனினும் இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 52% சரிவினைக் கண்டூள்ளது. கடந்த ஆண்டில் 919 கோடி டாலர் அல்லது ஒரு பங்குக்கு 322 டாலர் லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இனி எப்படியிருக்கும்?

இனி எப்படியிருக்கும்?

தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் 4வது காலாண்டிலும் சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆக இதன் பங்குகள் மேற்கொண்டு சரிவினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4வது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 30 பில்லியன் டாலர் முதல் 32.5 பில்லியன் டாலர்கள் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

meta shares falls nearly 25%, Uday kotak says amazon shares also may follow suit

Kotak Mahindra Bank Chief Executive Officer Uday Kotak said Amazon shares could fall today after Meta shares saw a 25% decline on Thursday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X