இந்த பங்கினை வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்.. மோதிலால் நிறுவனம் பரிந்துரை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனமாகும். இது கோல்டு லோன், சிறு நிதி கடன், என பல வகையான கடன்களை கொடுத்து வருகின்றது.

இந்த பங்கினை பற்றி பார்க்கும் முன்பு, ஏன் இந்த பங்கினை வாங்கலாம்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பங்கு சந்தையில் லாபம் சம்பாதித்தவர்களை விட, நஷ்டம் கண்டவர்கள் தான் அதிகம்.

பங்கினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்

பங்கினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்

ஏனெனில் பங்கு சந்தையினை பற்றி ஆராய்ந்து தெரிந்து கொண்டு வாங்கியவர்களை விட, அதனை பற்றி தெரியாமல், நண்பர்கள் கூறினார்கள், நிபுணர்கள் கூறினார்கள் என கூறி வாங்கி நஷ்டம் காண்பதை விட, ஒரு பங்கினை வாங்குவதற்கு முன்பு? ஏன் இந்த பங்கினை வாங்குகிறோம். இந்த பங்கு எந்த துறையை சார்ந்தது. இது என்ன துறையை சேர்ந்தது. இதன் எதிர்காலம் எப்படியிருக்கும்? தேவை எப்படியிருக்கும். போட்டி நிலவரம் என்ன? இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எப்படி? கடன் விகிதம் போன்ற பல விஷயங்களை தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட்

மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட்

மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் இன்று வங்கி அல்லாத நிதி நிறுவன சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனம் இதன் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது.

Array

Array

அதில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 8.8% குறைந்து 369.88 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ், கடந்த ஆண்டில் 405.44 கோடி ரூபாய் லாபத்தினை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் assets under management 5.7% அதிகரித்து, 28,421.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கோல்டு லோன் வளர்ச்சி

கோல்டு லோன் வளர்ச்சி

இதன் கோல்டு லோன் போர்ட்போலியோவில் 13.2% வளர்ச்சி கண்டு, 18,719.53 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 16,539.51 கோடி ரூபாயாக இருந்தது. இது நடப்பு காலாண்டில் நல்ல வளர்ச்சியினை கண்டு இருந்தாலும், லாபத்தில் சரிவினைக் கண்டுள்ளது. எனினும் தொடர்ந்து கண்டு வரும் வலுவான வளர்ச்சிக்கு மத்தியில், சந்தையானது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

லைவ் கோல்டு லோன் வாடிக்கையாளர்கள் விகிதமானது 24.1 லட்சத்தில் இருந்து, 25.1 லட்சமாக அதிகரித்துள்ளனர். நகைக் கடன், மைக்ரோ கடன் அல்லது வீடு மற்றும் வாகன கடன், வணிக கடன் உள்ளிட்டவற்றில் நல்ல வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளதாகவும், இது இனி அடுத்து வரவிருக்கும் காலாண்டுகளிலும் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?


மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-ல் சற்று அதிகரித்து, 189.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இதே பி.எஸ்.இ-ல் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 189.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இதன் இன்றைய உச்சம் 192.50 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 187.10 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 224.40 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 139 ரூபாயாகும். இந்த பங்கின் இலக்கினை தான் 230 ரூபாயாக மோதிலால் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Motilal Oswal recommended Manappuram finance: target of Rs.230

Motilal Oswal recommended Manappuram finance: target of Rs.230
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X