ரூ.2,275 கோடி மதிப்பிலான பைபேக் திட்டம்.. என்டிபிசி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி மின்சார உற்பத்தி நிறுவனமான என்டிபிசி நிறுவனம் சுமார் 19.78 கோடி பங்குகளைச் சுமாப் 115 ரூபாய் விலைக்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கும் 2,275 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தப் பைபேக் திட்டம் ஜனவரி 2021க்குள் முழுமையாக முடிக்க என்டிபிசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

என்டிபிசி நிறுவனத்தில் நடந்த பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தின் முடிவாக நவம்பர் 2ஆம் தேதி நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 2,275 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,275 கோடி மதிப்பிலான பைபேக் திட்டம்.. என்டிபிசி அறிவிப்பு..!

இந்தப் பைபேக் திட்டத்தில் என்டிபிசி நிறுவனம் வாங்கும் அனைத்துப் பங்குகளுக்கு முழுமையாகப் பணத்தைச் செலுத்தி தனது பங்குதாரர்களிடம் இருந்து நேரடியாக வாங்குகிறது. மேலும் ஒவ்வொரு பங்குகளும் 10 ரூபாய் முக மதிப்பு கொண்டுள்ளது.

தற்போது அறிவித்துள்ள 115 ரூபாய் விலை சுமார் 28 சதவீதம் ப்ரீமியம் மதிப்பைக் கொண்டது என்பதால் ரீடைல் சந்தையில் முதலீட்டாளர்கள் என்டிபிசி பங்குகளுக்கு அதிகளவிலான டிமாண்ட் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நவம்பர் 13ஆம் தேதி பேக்பேக் செய்யப்படும் பங்குகளின் உரிமையாளர்களின் தகுதிகளைச் சரிபார்க்கத் திட்டமிட்டுள்ளது என்டிபிசி நிர்வாகம்.

அலிபாபா 3 வருட ரகசியத் திட்டம்.. அதிர்ந்துபோன சீன டெக்ஸ்டைல் துறை..!அலிபாபா 3 வருட ரகசியத் திட்டம்.. அதிர்ந்துபோன சீன டெக்ஸ்டைல் துறை..!

திங்கட்கிழமை வெளியான என்டிபிசி நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் இந்நிறுவனத்தின் லாப 3,504 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டு அளவீட்டை ஒப்பிடுகையில் கிட்டதட்ட 7 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவன லாப அளவு 3,262 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் என்டிபிசி நிறுவனத்தின் வருவாய் இக்காலகட்டத்தில் 8 சதவீதம் உயர்ந்து 24,677 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு தடைகளைத் தாண்டி பைபேக் திட்டத்திற்குச் செபி ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், Nabinagar Power Generating Company Ltd மற்றும் Kanti Bijlee Utpadan Nigam Ltd ஆகிய நிறுவனங்களை என்டிபிசி நிறுவனங்களுடன் சேர்க்கவே தற்போது என்டிபிசி தனது பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது.

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் என்டிபிசி குழும நிறுவனங்கள் மொத்தமாகச் சுமார் 67.67 பில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் என்டிபிசி நிறுவனப் பங்குகளின் மதிப்பு 2.23 சதவீதம் உயர்ந்து 89.55 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NTPC Board approves ₹2,275 cr buyback plan at 28% premium price

NTPC Board approves ₹2,275 cr buyback plan at 28% premium price
Story first published: Monday, November 2, 2020, 21:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X