இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவும் பங்கு சந்தையில் நுழைந்து வருகின்றன. அப்படி பங்கு சந்தையில் நுழைந்த நிறுவனங்களில் நைகா மற்றும் சோமேட்டோ, பேடிஎம் நிறுவனங்கள் என பலவும் அடங்கும்.
கடந்த ஆண்டில் இருந்தே இந்திய சந்தையிலும் அதிகளவில் ஏற்ற இறக்கம் என்பது இருந்து வருகின்றது.
இது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றத்தின் மத்தியிலும், பல பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. எனினும் ஒரு சில பங்குகள் சரிவினையே கண்டன.

எவ்வளவு சரிவு?
அந்த வகையில் பேஷன் ஸ்டார்ட் அப் நிறுவனமான நைகா, கடந்த 1 ஆண்டில் 62 சதவீதம் சரிந்தும்,சோமேட்டோ மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் முறையே 55% மற்றும் 43% சரிவினைக் கண்டுள்ளன.
நைகா நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் 5350 கோடி ரூபாய் நிதியினை பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டியது. இதில் 82 மடங்கு சந்தாவினை பெற்றது. இதே சோமேட்டோ மற்றும் பேடிஎம் நிறுவனங்களும் முறையே 38 மடங்கு மற்றும் 1.89 மடங்கு சந்தாவினையும் பெற்றன.

பட்டியலின் போது எப்படி இருந்தது தெரியுமா?
இந்த பங்குகள் பட்டியலில் நைகா நிறுவனத்தின் பங்கானது 80% பிரீமியத்திலும், இதே சோமேட்டோ நிறுவனம் 53% பிரீமியத்திலும், பேடிஎம் நிறுவனம் 9% தள்ளுபடி விலையிலும் பட்டியலிடப்பட்டது.
எனினும் இந்த பங்குகள் நீண்டகால நோக்கில் பெரும் லாபம் ஈட்டியதா என்றால் இல்லை. மாறாக வாங்கிய விலைக்கு வந்தாலே போதும் விற்பனை செய்து விடலாம் என நினைக்கும் முதலீட்டாளர்களே அதிகம். ஏனெனில் அந்தளவுக்கு சில பங்குகள் நஷ்டத்தினை கொடுத்துள்ளன.

திரும்ப அதிகரிக்குமா?
இதில் சில பங்குகள் திரும்ப ஏற்றம் காணுமா? வாங்கிய விலைக்கேனும் திரும்புமா? என்ற சந்தேகமும் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக நிறுவனங்கள் பட்டியலிட்ட விலையில் இருந்து பெரியளவில் சரிவினைக் கண்டுள்ளன. சொல்லப்போனால் இந்த பங்குகள் அதன் ஆல் டைம் லோவின் அருகில் வர்த்தகமாகி வருகின்றன. இந்த பங்குகளின் லாக் இன் காலம் முடிவடைந்துள்ள நிலையில், இனி இந்த பங்குகளின் விலை அதிகரிக்குமா? இந்த இடத்தில் வாங்கலாமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம்.

முதலீட்டாளர்கள் கவலை
இதில் பேஷன் மற்றும் பியூட்டி நிறுவனமான நைகா நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானத சற்றே அழுத்தத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக இதன் பியூட்டி மற்றும் பர்சனல் கேர் பொருட்கள் ஆர்டரானது குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லாக் இன் காலம் முடியும் தருணத்தில் 5:1 என்ற அளவுக்கு போனஸ் கவலையடைய செய்துள்ளது. இதற்கிடையில் நைகா நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து 35% சரிவினைக் கண்டுள்ளது.

விலை அதிகரிக்கலாம்
எப்படியிருப்பினும் இனி இந்த பங்கு விலை அதிகரிக்கலாம் என தரகு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நைகா நிறுவன பங்கினை அப்கிரேட் செய்துள்ளது. இது முன்னதாக இதன் இலக்கு விலையை 175 ரூபாயில் இருந்து, 145 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. புதிய இலக்கு விலைகள் பங்குக்கு 16% ஏற்றத்தினை சுட்டிக் காட்டுகின்றது. இதன் நீண்டகால வளர்ச்சி அதிகரிக்கலாம் என சுட்டுக் காட்டியுள்ளது. தற்போது இப்பங்கு அதன் பங்கு விலை 52 வார உச்சத்தில் இருந்து, 62% சரிவில் காணப்படுகின்றது.

எபிட்டா அதிகரிக்கலாம்
எனினும் இது இந்தியாவின் மிகப்பெரிய பியூட்டி அன்ட் பர்சனல் கேர் நிறுவனமாகும். நல்ல லாபத்தில் உள்ள ஒரு நிறுவனம். ஆன்லைன் ஆப்லைன் என இரண்டிலும் வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றது. இதன் வளர்ச்சி விகிதமானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது FY23 - 24ம் ஆண்டில் இதன் எபிட்டா 3% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற தரகு நிறுவனங்கள் கணிப்பு
நைகா பங்கு அதிகரிக்கலாம் என ஹெச்.எஸ்.பி.சி கணிப்பும் கணித்துள்ளது. எனினும் ஹெச். டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் இப்பங்கின் விலையானது குறையலாம் என்றும் கணித்துள்ளது. இதற்கிடையில் இதன் காலாண்டு முடிவுகள் இதனை எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.