நய்கா முதலீட்டாளர்களுக்கு சரியான சான்ஸ்.. ஒரே நாளில் 19% ஏற்றம்.. ஏன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நய்கா நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த வியாழக்கிழமையன்று 52 வார குறைந்தபட்ச விலையான 162.50 ரூபாயினை எட்டியது. பேஷன் நிறுவனமான நய்கா நிறுவனம் வலுவான வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ள நிலையில், நய்கா நிறுவனத்தின் பங்கு விலையானது ஒரு பங்குக்கு என் எஸ் இ-யில் இன்ட்ராடே உச்சமான 224.45 ரூபாயினை எட்டியுள்ளது. இது கடந்த அமர்வின் முடிவு விலையில் இருந்து 19% மேலாக அதிகரித்துள்ளது.

இது கடந்த அமர்வில் ஒரு பங்குக்கு 188.25 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

எப்படியிருப்பினும் பங்கு சந்தை நிபுணர்கள் நய்கா நிறுவனத்தின் வலுவான அடிப்படையினைக் கொண்டுள்ளது. முக்கிய ஆங்கர் முதலீட்டாளார்களை கொண்டுள்ளது.

ரூ.1.3 லட்சம் கோடி நஷ்டம்.. கதறும் பேடிஎம், நய்கா, சோமேட்டோ, PB பின்டெக் முதலீட்டாளர்கள்!ரூ.1.3 லட்சம் கோடி நஷ்டம்.. கதறும் பேடிஎம், நய்கா, சோமேட்டோ, PB பின்டெக் முதலீட்டாளர்கள்!

முதலீடுகள் வெளியேறலாம்

முதலீடுகள் வெளியேறலாம்

இந்த ஆங்கர் முதலீட்டாளர்களின் லாக் இன் காலம் முடிவடையும் நிலையில், இந்த பங்குகள் விலை சரியலாம் என்றாலும், புதிய முதலீட்டாளர்களும் இந்த பங்கினில் முதலீடு செய்யலாம். அதேசமயம் நய்கா முதலீட்டாளர்கள் இப்பங்கின் விலை மீண்டும் பவுன்ஸ்பேக் ஆகும் போது வெளியேறலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

என்ன காரணம் தெரியுமா?

என்ன காரணம் தெரியுமா?

இது குறித்து GCL செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவி சிங்கால், நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்கள் ஒரு வருட லாக் இன் காலம் முடிவடைய உள்ளது. இதனால் பெரிய முதலீட்டாளர்கள் சந்தையில் இல்லை என சந்தையில் நம்புகின்றது. எனினும் டெக்னிக்கலாக பார்க்கும்போது இந்த பங்கு விலையானது டபுள் பாட்டம் உருவாகியுள்ளது. இதன் உச்சத்தினை உடைக்கும்பட்சத்தில் இப்பங்கானது சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல்

முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல்

இது தவிர முக்கிய மூவிங் ஆவரேஜ் லெவலை உடைக்கும்ப்போது, மேற்கொண்டு அதிகரிக்கலாம். இதற்கிடையில் அதன் உடனடி ரெசிஸ்டன்ஸ் லெவல் 240 ரூபாய் மற்றும் 280 ரூபாய் என்ற லெவலை எட்டலாம். இது எதிர்மறையாக செல்லும்போது 185 ரூபாய் என்ற முக்கிய லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாய்ஸ் புரோக்கிங் கணிப்பு

சாய்ஸ் புரோக்கிங் கணிப்பு

சாய்ஸ் ப்ரோக்கிங்கின் செயல் இயக்குனர் சுமீத் பகாடியா கூறுகையில், இந்த பங்கானது 230 - 240 ரூபாய் என்ற வலுவான தடையை எதிர்கொள்ளலாம். இது தற்போது 180 - 240 என்ற லெவலில் வர்த்தகமாகி வருகின்றது. இந்த நிறுவனத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் 180 - 190 ரூபாய் என்ற லெவலாக உள்ளது. ஆக புதிய முதலீட்டாளர்கள் வாங்குவதை தவிர்க்கலாம். எப்படியிருப்பினும் குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச லெவலில் புராபிட் புக்கிங் செய்யலாம்.

நய்கா பங்குகள்

நய்கா பங்குகள்

நய்கா பங்கு நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 19% ஏற்றம் கண்டு, 224.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இது நய்கா நிறுவனம் தற்போது போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது. அதன் போனஸ் ரெக்கார்டு தேதி நவம்பர் 11, 2022 ஆகும். கடந்த நவம்பர் 3 அன்று நய்கா நிறுவனம் 5:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை அறிவித்தது. இது அதன் ஆங்கர் முதலீட்டாளர்களின் லாக் இன் காலம் முடிவடையவுள்ள நிலையில், நிறுவனம் இத்தகைய அறிவிப்பினை கொடுத்துள்ளது. இதற்கிடையில் தான் இப்பங்கின் விலையானது இந்த அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

50% டிஸ்கவுண்ட் விலையில் நய்கா

50% டிஸ்கவுண்ட் விலையில் நய்கா

நய்கா நிறுவனத்தின் போனஸ் அறிவிப்பானது முதலீட்டாளர்களுக்கு, சற்றே ஆறுதலைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நய்கா நிறுவன பங்கின் விலையானது தற்போது அதன் 52 வார உச்ச விலையில் இருந்து, 50% சரிவில் காணப்படுகிறது. இது தற்போது 428.95 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: nykaa நய்கா
English summary

Nykaa shares jumped over 19% to Rs.207

Nykaa share price touched an intraday high of Rs.224.45 per share on the NSE. It has increased by more than 19% from the last session's closing price
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X