நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் (HDFC bank) முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஆதித்யா பூரி, பேடிஎம் நிறுவனத்தின் வணிக மாடல் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம் 75% மேலாக சரிவில் காணப்படும் நிலையில், இன்னும் இப்பங்கின் விலையானது சரியலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் தான் ஆதித்யா பூரியின் கேள்வியும் வந்துள்ளது.
தமிழக அரசுடன் கைகோர்த்துள்ள எல்&டி.. காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய டேட்டா மையம்.. 1,100 பேருக்கு வேலை!

சலுகையால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு
பேடிஎம் அதன் கேஷ்பேக் சலுகை மூலமே வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. வங்கி சேவையால் அல்ல என ஆதித்யா பூரி கூறியுள்ளார். ஆதித்யா பூரி தனது பணியில் இருந்து ஓய்வுபெறும் போது, தனியார் வங்கித் துறையில் மிகப்பெரிய இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

லாபம் எங்கே?
மேலும் பேடிஎம் வணிக மாதிரியினை பற்றி கேள்வி எழுப்பியதோடு, இவ்வளவு கேஷ்பேக் சலுகைகளை கொடுத்தால் லாபம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இப்படி ஒரு மூத்த வங்கியாளரான பூரி பேடிஎம் குறித்து கேள்வி எழுப்பியிருப்பது, சற்று கவலையளிக்கும் விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது.

பணம் கொடுப்பது தான் - பெறுவதில்லை?
தொடர்ந்து இதுபோன்ற வணிக மாடல்கள் குறித்து கவலை எழுப்பி வரும் பூரி, பேடிஎம் பற்றி கூறியிருப்பது சற்றே கவலையளிக்கும் விஷயம் தான்.
பேடிஎம்மின் மும்பை பல்கலைக் கழகத்தில் IMC சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பூரி, பேடிஎம் அவர் பணம் செலுத்துகிறார். அவர் எப்போது லாபம் ஈட்டினார் ("Paytm... he makes payments, when did he make profit,") என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வங்கி சேவை தொடங்க முடியாது?
வங்கியை போல பேடிஎம் வாடிக்கையாளர்களை சேவை அளிப்பதன் மூலம் பெறவில்லை. அதன் கேஷ்பேக் சலுகை மூலமே மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
அமேசான் பே மற்றும் கூகுள் பே போன்ற பேமெண்ட் சேவை வழங்கி வரும் நிறுவனங்கள், வங்கி சேவையினை தொடங்க முடியாது. அவ்வாறு செய்தால் வணிக வங்கிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளால் அவர்கள் போராட வேண்டியிருக்கும்.

இன்றைய பங்கு நிலவரம் என்ன?
பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் தற்போது 3.10% அதிகரித்து, 541.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 549.05 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 529.05 ரூபாயாகும்.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலை 3.11% அதிகரித்து, 541.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 549.05 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 528.80 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2150 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 520 ரூபாயாகும்.