Paytm IPO: கேசினோ போன்ற ஐபிஓ வெறி.. இனி குறையலாம்.. பேடிஎம் 28% வீழ்ச்சி குறித்து ஆனந்த் மஹிந்திரா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மிகப்பெரிய பொதுபங்கு வெளியீடு என்ற பெயர், சில தினங்களுக்கு முன்பு வரையில் பேடிஎம் நிறுவனத்திற்கு இருந்தது.

ஆனால் நேற்று காலை பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் முன்பு வரை இருந்த அந்த பெயர். அதன் பிறகு அது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது எனலாம். சொல்லப்போனால் ஐபிஓ-வுக்கு முன்னதாக விண்ணப்பிக்காதவர்கள் நல்ல வாய்ப்பினை தவற விட்டு விட்டுமே என்று நினைத்த நிலையில், ஐபிஓவுக்கு பிறகு விலை குறைந்தால் வாங்கலாம் என்று நினைந்திருந்தனர்.

ஆனால் தற்போது ஒரே நாளில் 28% கண்டுள்ள நிலையில் கூட இந்த பங்கினை வாங்க யோசிக்கின்றனர். அந்தளவுக்கு பங்கு சந்தை முதலீட்டளர்களை யோசிக்க வைத்து விட்டது.

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

இதற்கிடையில் இந்த பங்கு வெளியீடு குறித்து, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் "my heart goes out to individual IPO investors". ஆக பேடிஎம் அதன் சரியான அளவைக் கண்டுபிடிக்கும் என நம்புகிறேன். கேசினோ போன்ற ஐபிஓ வெறியை இது மிதப்படுத்தலாம். இது உண்மையான மதிப்பிற்கான மதிப்பினை மீட்டெடுக்க உதவும் என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

விஜய் சேகர் ஷர்மா கருத்து

விஜய் சேகர் ஷர்மா கருத்து

கேசினோ போன்ற ஐபிஓ வெறி ஒரு உருவகமாக இருக்கலாம். எனினும் அது குறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துகளை பகிர்ந்ததையடுத்து, என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் பேடிஎம்மின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மா கூறியுள்ளார்.

பணக்காரர் ஆவதற்கு வழியா?

பணக்காரர் ஆவதற்கு வழியா?

நடப்பு நிதியாண்டில் நடந்து வரும் ஐபிஓ - யுத்தத்திற்கு மத்தியில், இந்தியா மக்கள் கேசினோ போன்று விரைவில் பணக்காரர் ஆவதற்கு ஒரு எளிய வழியாக ஐபிஓ-வினை பார்த்தனர். ஆனால் அவற்றை ஒரே நாளில் பேடிஎம் ஐபிஓ மாற்றிவிட்டது. இந்த நிலையில் தான் நாட்டின் முன்னணி தொழில் குழுமத்தின் தலைவரின் கருத்து வந்துள்ளது.

லாபம் கொடுத்துள்ளன

லாபம் கொடுத்துள்ளன

ஆனந்த் மஹிந்திராவின் கருத்தினை ஒப்புக் கொண்ட விஜய் சேகர் சர்மா, சந்தையில் அனைத்து வகையான நிறுவனங்களும் காணப்படுகின்றன. அந்த நிறுவனங்களில் பலவற்றை நாங்கள் அறிந்திருக்கவில்லை. கேள்விப்படவில்லை. ஆனால் அவற்றில் பலவும் நல்ல லாபம் கொடுத்துள்ளன.

பங்கு வீழ்ச்சி தான்

பங்கு வீழ்ச்சி தான்

பல நல்ல நிறுவனங்களும் ஐபிஓவில் நல்ல முடிவுகளை வழங்கியுள்ளன.அவை மக்களுக்கு பெரும் செல்வத்தை கொண்டு வருகின்றன.
ஆக பேடிஎம் பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட போது பலத்த சரிவு இருந்தபோதிலும், நிறுவனம் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பினைக் கைபற்றியுள்ளது என ஷர்மா கூறியுள்ளார்.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

இது குறித்து பல நிபுணர்களும் தங்களது கருத்துகளை கூறி வரும் நிலையில், பேடிஎம்-மின் விலையுயர்ந்த மதிப்பீடுகள் தான், அதன் முதல் வர்த்தக அமர்வில் பங்கு விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
இன்னும் சிலர் இந்த நிறுவனம் இன்று வரையில் நஷ்டத்தில் தான் உள்ளது. இன்னும் சம்பாதிக்கவே ஆரம்பிக்கவில்லை. இந்த நிறுவனம் இன்னும் சம்பாதிக்கவே ஆரம்பிக்கவில்லை. எதிர்கால வருவாய் விகிதத்தினை கருத்தில் கொண்டு, இந்த பங்கு விலையானது நிர்ணயம் செய்யப்பட்டது.

இது சரியான திசை அல்ல

இது சரியான திசை அல்ல

பேடிஎம் பிசினஸ் மாடலானது கவனம் மற்றும் திசை இல்லாதது. இது லாபத்தினை அடைவது மிக கடினமான ஒரு விஷயமாக உள்ளது. இதற்கிடையில் தான் பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவன, 18,300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டிருந்தது. இதில் 8,300 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரப்பட்டது. மீதம் உள்ள 10,000 கோடி ரூபாய் அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளார்களிடம் இருந்தும் விற்பனை செய்யப்பட்டது.

தொடக்கமே சரிவு தான்

தொடக்கமே சரிவு தான்

ஒரு பங்கிற்கு விலையாக 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இதன் விலை தொடக்கத்தில் பி.எஸ்.இ-ல் 1955 ரூபாயாக தொடங்கியது. இது வெளியீட்டு விலையானது 2150 ரூபாயில் இருந்து 9.07% சரிவில் காணப்பட்டது.

யோசிக்க வைக்கலாம்

யோசிக்க வைக்கலாம்

நேற்று பட்டியலிடப்பட்ட இந்த பங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் 27.40% சரிவினைக் கண்டு, 1560.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே பிஎஸ்இ-ல் 27.25% சரிவினைக் கண்டு, 1564.15 ரூபாயாக முடிவடைந்தது.
மொத்தத்தில் முதல் நாளே சந்தையில் முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தினை மாற்றியுள்ளது இந்த ஐபிஓ. ஆனந்த் மகேந்திரா சொல்வது போல இனி ஐபிஓ பற்றிய எண்ணம் குறையலாம். முதலீட்டாளர்களை இன்னும் பெரியளவில் யோசிக்க வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm IPO: Casino –like frenzy may be a metaphor: paytm CEO on anand Mahindra tweet

Paytm IPO: Casino –like frenzy may be a metaphor: paytm CEO on anand Mahindra tweet./ Paytm IPO: கேசினோ போன்ற ஐபிஓ வெறி.. இனி குறையலாம்.. பேடிஎம் 28% வீழ்ச்சி குறித்து ஆனந்த் மஹிந்திரா!
Story first published: Friday, November 19, 2021, 12:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X