நாளை தொடங்கவிருக்கும் பேடிஎம் ஐபிஓ.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் வளர்ச்சியானது ஒவ்வொரு துறையிலும் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. குறிப்பாக நிதித்துறையில் வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் அந்தளவுக்கு டிஜிட்டல் வளர்ச்சியானது உட்புகுந்துள்ளது. ஒரு காலத்தில் வங்கிகளில் கால் கடுக்க நின்று பணம் எடுத்த காலம் போய், இன்று கியூஆர் கோடினை ஸ்கேன் செய்து நொடிகளில் பணம் செலுத்தி விட்டு செல்லும் காலம் வந்து விட்டது.

அந்தளவுக்கு டிஜிட்டல் வளர்ச்சியானது மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில் டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைத் தளமான பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம்) நிறுவனம் நாளை தனது பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.

பங்கு வெளியீடு எப்போது?

பங்கு வெளியீடு எப்போது?


நவம்பர் 8 அன்று தொடங்கவுள்ள இந்த பங்கு வெளியீடானது நவம்பர் 10 அன்று முடிவடையவுள்ளது.
பங்கு ஒதுக்கீடானது நவம்பர் 15, 2021 அன்று செய்யப்படுகிறது.
பங்கு கிடைக்காதவர்களுக்கு நவம்பர் 16, அன்று பணம் திரும்ப கொடுக்கப்படுகிறது.
இதே டிமேட்களுக்கு பங்கு ஒதுக்கீடு நவம்பர் 17, 2021 அன்று தரப்படுகின்றது.
இதனை பங்கு சந்தையில் நவம்பர் 18, 2021 அன்று பட்டியலிடப்படுகிறது.

ஐபிஓ – விலை நிர்ணயம்

ஐபிஓ – விலை நிர்ணயம்

இந்த பங்கு வெளியீட்டில் விலை நிர்ணயமானது, ஒரு பங்கிற்கு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம், 18,300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட உள்ளது. இதில் 8,300 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரப்படவுள்ளது. மீதம் உள்ள 10,000 கோடி ரூபாய் அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளார்களிடம் இருந்தும் விற்பனை செய்யப்படுகின்றது.

 

எதற்காக இந்த நிதி

எதற்காக இந்த நிதி

இந்த நிதியானது வணிகத்தினை மேம்படுத்துவதற்காகவும், வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், தொழில் நுட்பத்தினை மேம்படுத்தவும், நிதி சேவையை இன்னும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இது தவிர புதிய வணிக முயற்சிகள், கையகப்படுத்தல்களுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

லாட் சைஸ் எவ்வளவு?

லாட் சைஸ் எவ்வளவு?

இந்த ஐபிஓவில் 6 பங்குகள் 1 லாட் ஆகும். ஆக அதிகம் வாங்க வேண்டுமெனில் 6-ன் மடங்கில் தான் வாங்க வேண்டியிருக்கும். ஆக 1 லாட் வாங்க சில்லறை முதலீட்டாளார்கள் 12,900 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஒருவர் அதிகபட்சம் 15 லாட்கள் அல்லது 1,93,500 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த ஐபிஓவில் 6 பங்குகள் 1 லாட் ஆகும். ஆக அதிகம் வாங்க வேண்டுமெனில் 6-ன் மடங்கில் தான் வாங்க வேண்டியிருக்கும். ஆக 1 லாட் வாங்க சில்லறை முதலீட்டாளார்கள் 12,900 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஒருவர் அதிகபட்சம் 15 லாட்கள் அல்லது 1,93,500 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம்.

யாருக்கு எவ்வளவு பங்கு?

யாருக்கு எவ்வளவு பங்கு?

இந்த பங்கு வெளியீட்டில் 75% தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், 15% நிறுவனமல்லாத முதலீட்டாளார்களுக்கும், மீதமுள்ள 10% சில்லறை முதலீட்டாளார்களுக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்திற்கு புரோமோட்டார்கள் என்று யாரும் இல்லை என தெரிவித்துள்ளது. இது புரபஷ்னலி மேனேஜ்டு (professional managed company) நிறுவனமாகும்.

நிறுவனம் பற்றி

நிறுவனம் பற்றி

2009 ஆண்டு இணைக்கப்பட்ட இந்த நிறுவனம், 2009ம் ஆண்டில் பேடிஎம்மினை தொடங்கியது. இது நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கான இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளமாக உள்ளது. ரெட்சீர் அறிக்கையின் படி, வருவாய் அடிப்படையில் இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் கட்டண தளமாகும். இந்த நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் சர்மா ஆகும். இது தவிர கிரெடிட் கார்டு, ஈ-காமர்ஸ், பை நவ் பே லேட்டர் உள்ளிட்ட பல திட்டங்களின் அடிப்படிடையிலும் வணிகம் செய்து வருகின்றது.

ஷேர்ஹோல்டிங் பேட்டர்ன்

ஷேர்ஹோல்டிங் பேட்டர்ன்

இந்த நிறுவனத்தின் Antfin (netherklands) holiding BV - 27.9% பங்கினையும்
SVF india holdings (cayman) limited - 17.3%
SAIF III Mauritius Company Limited - 11.4%
Mr. Vijay Shekhar Sharma - 9.1%
Alibaba .com Singapore E- commerce private limited - 6.8%
SAIF partners India IV limited - 4.8%
Axis Trustee Services Limited - 4.7%
BH International Holdings
SVF panther (Cayman) Limited 1.2% பங்கினையும் வைத்துள்ளனர்.

தொடர் நஷ்டம்

தொடர் நஷ்டம்

இதற்கிடையில் கடந்த 2020ம் நிதியாண்டில் 2,942.4 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்ட இந்த நிறுவனம், 2021ம் நிதியாண்டில் 1,701 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டது. இதற்கிடையில் கடந்த ஜூன் காலாண்டில் கூட 381.9 கோடி ரூபாய் நஷ்டத்தினையே கண்டு இருந்து. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 284.4 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm IPO opens tomorrow: key things to know about the issue

IPO Latest updates.. Paytm IPO opens tomorrow: key things to know about the issue/ நாளை தொடங்கவிருக்கும் பேடிஎம் ஐபிஓ.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X