பிஎன்பி, எஸ்கார்ட்ஸ் இப்போதைக்கு வாங்க முடியாது.. எஃப்&ஓ-ல் தொடரும் தடை.. ஏற்கனவே ஆர்டர் இருக்கா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக பங்கு சந்தைகள் அதிக ஏற்றம் இறக்கம் இருக்கும்போது முதலீடுகள் அதிகரிக்கும். ஆனால் இப்படியான பங்குகள் சில சமயங்களில் எஃப் & ஓவில் தடை செய்யப்படும்.

 

ஏன் இந்த தடை? எதற்காக இந்த பங்குகள் தடை செய்ய செய்யப்படுகின்றது. இதனை எப்படி தெரிந்து கொள்வது?

மக்கள் கையில் பணத்தின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு..! #Demonetisation

தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் எஸ்கார்ட்ஸ் நிறுவன பங்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஏன் இந்த பங்குகள் தடை செய்யப்பட்டுள்ளது வாருங்கள் பார்க்கலாம்.

தடை ஏன்?

தடை ஏன்?

பொதுவாக பங்கு சந்தையில் குறிப்பாக F&O சந்தையில் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம் என்ற நிலை கிடையாது. அதற்கென வரம்பு உண்டு. ஆக அந்த வரம்பினை தாண்டி வர்த்தகமானால் அந்த பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யப்படுகின்றது.

MWPL (Market Wide Position Limited)

MWPL (Market Wide Position Limited)

எஃப் & ஓவில் வர்த்தகர்கள் லிமிட்டிற்குள்ளாகத் தான் ஆர்டர்களை செய்ய முடியும். அதற்கு MWPL லிமிட் இருக்கும். ஆக இந்த லிமிட்டினை தாண்டினால் எஃப் & ஓவில் அந்த நிறுவனம் தடை செய்யப்படும். அதனையும் மீறி இந்த தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் ஆர்டர்களை போட்டால், உங்களுக்கு ஒரு எச்சரிக்கை மெசேஜ் வரும்.

ஒபன் இன்ட்ரஸ்ட் வரம்பு
 

ஒபன் இன்ட்ரஸ்ட் வரம்பு

இதனை டெக்னிக்கலாக ஒபன் இன்ட்ரஸ்ட் என்பார்கள். இந்த ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டினால் தான் எஃப் & ஓவில் பங்குகள் தடை செய்யப்படும். இந்த பங்குகளின் ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது மீண்டும் 80% கீழாக குறையும்போது தான், இதில் மீண்டும் வர்த்தகம் தொடங்கும்.

புதிய ஆர்டர்கள் போட முடியாது?

புதிய ஆர்டர்கள் போட முடியாது?

தற்போது இந்த தடை பட்டியலில் தான் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் எஸ்கார்ட்ஸ் நிறுவனங்களின் பங்குகள் உள்ளது. இந்த நிறுவனங்களின் Market Wide Position Limited ஆனது 95% தாண்டியுள்ளது. இந்த நிறுவனங்களில் புதியதாக ஆர்டர்களை போட முடியாது. எனினும் ஏற்கனவே இருக்கும் ஆர்டர்களை முடித்துக் கொள்ளலாம்.

மீண்டும் வர்த்தகம்

மீண்டும் வர்த்தகம்

அதுல் லிமிடெட், பிர்லாசாப்ட், குஜராத் பெட்ரோநெட் லிமிடெட், லாரஸ் லேப்ஸ், எஸ்பிஐ கார்டுகள், வேர்ல்பூல் ஆஃப் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த அக்டோபர் இறுதியில் எஃப் & ஓவில் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வர்த்தகத்திற்கு திரும்பியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Punjab national bank, Escorts continue to be among stocks under F&O ban list

Punjab national bank, Escorts continue to be among stocks under F&O ban list./ பிஎன்பி, எஸ்கார்ட்ஸ் இப்போதைக்கு வாங்க முடியாது.. எஃப்&ஓ-ல் தொடரும் தடை.. ஏற்கனவே ஆர்டர் இருக்கா!
Story first published: Monday, November 8, 2021, 13:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X