40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..? அந்த ஐந்து பங்குகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் வாரன் பஃபெட் என செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா தற்போது ஐந்து பங்குகளில் தன் முதலீட்டை அதிகரித்து இருக்கிறாராம்.

Federal Bank, VIP Industries, Agro Tech Foods, NCC and TV18 Broadcast தான் அந்த ஐந்து பங்குகள். இந்த ஐந்து பங்குகளும் கடந்த ஜனவரி 01, 2019-ல் இருந்து சுமாராக 09 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை விலை சரிந்து இருக்கின்றன. என் சி சி நிறுவனம் தான் கடந்த ஜனவரி 2019 முதல் இன்று வரை சுமார் 42 சதவிகிதம் இறக்கம் கண்டிருக்கிறது. இருப்பினும் நல்ல தரமான பங்குகள் என்கிற அடிப்படையில் இந்த ஐந்து பங்குகளில் தன் முதலீட்டை அதிகரித்து இருக்கிறார்.

40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..? அந்த ஐந்து பங்குகள்..!

 

கடந்த அக்டோபர் 18, 2019 அன்றைய நிலவரப்படி நம் ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவின் போர்ட்ஃபோலியோவை ஏஸ் ஈக்விட்டி (Ace Equity) என்கிற நிறுவனம் திரட்டி, வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த போர்ட்ஃபோலியோ பட்டியல் முழுமையானது எனச் சொல்ல முடியாது என்பதை மனி கண்ட்ரோல் என்கிற செய்தி நிறுவனம் சொல்லி இருக்கிறது. ஏஸ் ஈக்விட்டி நிறுவனம் வெளியிட்ட விவரங்கள் படி, மொத்தம் 25 பங்குகளில் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா முதலீடு செய்து இருக்கிறார். இதில் 20 பங்குகள் நஷ்டத்தில் இருக்கின்றனவாம். ஐந்து பங்குகள் மட்டுமே லாபத்தில் இருக்கின்றன.

ராகேஷ் ஜுன் ஜுன் வாலா முதலீடு செய்திருக்கும் பங்குகளிலேயே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இன்று வரைக்குமான விலை ஏற்றத்தைக் கணக்கிட்டால், DHFL 90 சதவிகிதம் வரை சரிந்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து Mandhana Retail 65 சதவிகிதம், Autoline Industries 60 %, Edelweiss Financial Services 52 % எனச் சரிவைச் சந்தித்து இருக்கின்றன.

ஒரு பக்கம் தன் முதலீட்டை சில பங்குகளில் அதிகப்படுத்தினார் என்றால் மறுபக்கம் CRISIL, Lupin, Firstsource Solutions, Titan Company, and Ion Exchange போன்ற பங்குகளில் தன் முதலீட்டைக் குறைத்து இருக்கிறார் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா.

இத்தனை களேபரமான சந்தை சுழலிலும் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா Fortis Healthcare, Escorts, Aptech, Geojit Financial Services, Edelweiss Financial Services, DHFL போன்ற 15 நிறுவனங்களில் செய்திருந்த முதலீடுகளைக் குறைக்கவோ அல்லது கூட்டிக் கொள்ளவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rakesh Jhunjhunwala increased stake in 5 stocks

Ace investor Rakesh Jhunjhunwala increased stake in 5 Indian company stocks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X