ரேகா ஜுன்ஜுன்வாலா கைவசம் உள்ள 19 பங்குகள்.. சுமார் ரூ.10,000 கோடி.. இனி என்னவாகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ராகேஷ் ஜுன் ஜுன்வாலா கடந்த வாரம் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த நிலையில் அவரின் பங்கின் நிலை என்ன? என்பதே இதுவரையில் பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகின்றது.

இந்த நிலையில் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் உள்ள பங்குகளின் நிலை என்ன? என்னென்ன பங்குகள் அவரின் வசம் உள்ளது? அவற்றின் மதிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு.. கவனம் பெறும்  பில்லியன் டாலர் பங்குகள்.. ஏன் தெரியுமா? ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு.. கவனம் பெறும் பில்லியன் டாலர் பங்குகள்.. ஏன் தெரியுமா?

ரேகா ஜுன்ஜுன்வாலா வசம்

ரேகா ஜுன்ஜுன்வாலா வசம்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவின் வசம் 19 பங்குகள் உள்ளன. அவற்றின் மதிப்பு 9800 கோடி ரூபாயாகும். தரவுகளின் படி மெட்ரோ பிராண்டில் 3310 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடும், டைட்டன் நிறுவனத்தில் 2379 கோடி ரூபாயும், ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 1264 கோடி ரூபாயும் பெரியளவில் உள்ள ஹோல்டிங்குகளாக உள்ளன.

எவ்வளவு பங்கு?

எவ்வளவு பங்கு?

ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 3.10% பங்கும் உள்ளன. கிரிசில் நிறுவனத்தில் 613 கோடி ரூபாயும், தி இந்தியன் ஹேட்டல்ஸ் -ல் 393 கோடி ரூபாயும், டாடா கம்யூனிகேஷனில் 333 கோடி ரூபாயும், ஃபெடரல் வங்கி 231 கோடி ரூபாயும், ஜூபிலண்ட் பார்மாவாவில் 173 கோடி ரூபாய் மதிப்பிலும், வா டெக் வாபெக்கில் 125 கோடி ரூபாயும், ராலிஸ் இந்தியாவில் 117 கோடி ரூபாயும், ஆப்டெக்கில் 106 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் உள்ளன.

இதிலும் இருக்கும்?

இதிலும் இருக்கும்?

மேற்கண்ட பங்குகளை தவிர அக்ரோ டெக் ஃபுட்ஸ், டிபிப்ன் ரியால்டி, டிஸ்மேன் கார்போஜன் அம்சிஸ், Prozone Intu Properties, ஆட்டோலைன் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பில்கேர் உள்ளிட்ட பங்குகளிலும் 1% மேலாக பங்குகளை வைத்திருப்பதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

பிரித்து செய்யப்பட்ட முதலீடு

பிரித்து செய்யப்பட்ட முதலீடு

1987ம் ஆண்டு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ரேகா ஜுன்ஜுன்வாலாவை திருமணம் செய்து கொண்டார். தனது முதலீடுகளை பங்கு சந்தையில் எப்போதும், கணவன் மனைவி இருவர் பெயரிலும் பிரித்து செய்வது வழக்கமான ஒன்றாகும்.

ஜுன்ஜுன்வாலா  குடும்பம்

ஜுன்ஜுன்வாலா குடும்பம்

ரேகா ஜுன்ஜுன்வாலா செப்டம்பர் 12, 1963ல் மும்பையில் பிறந்தவர். மும்பை பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர். அவரின் மகள் நிஷ்தா ஜுன்ஜுன்வாலா 2004ல் பிறந்தவர். இரட்டை மகன்களான ஆர்யமன் மற்றும் ஆர்யவீர் 2009ல் பிறந்தவர்களாவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rakesh jhunjhunwala's wife Rekha holds these 19 stocks worth around Rs.10,000 crore

Rakesh jhunjhunwala's wife Rekha holds these 19 stocks worth around Rs.10,000 crore/ரேகா ஜுன்ஜுன்வாலா கைவசம் உள்ள 19 பங்குகள்.. சுமார் ரூ.10,000 கோடி.. இனி என்னவாகும்?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X