12 பங்குகள் கொடுக்க போகும் செம சான்ஸ்.. வாங்க தயாரா இருங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், உலகப் பொருளாதாரம் என்பது தடுமாற்றத்தில் காணப்படுகிறது. தொடர்ந்து அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் இந்திய சந்தையிலும் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையற்ற காரணிகளுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 GDP: இந்திய பொருளாதாரம்.. பரபர கணிப்பு..! GDP: இந்திய பொருளாதாரம்.. பரபர கணிப்பு..!

இந்திய சந்தை ஏற்றம் காணலாம்

இந்திய சந்தை ஏற்றம் காணலாம்

இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், பட்ஜெட், உள்நாட்டு பொருளாதாரம் குறித்தான கணிப்புகள் என பலவும் சந்தைக்கு சாதகமாக வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவும் இந்திய சந்தைக்கு ஆதரவாக அமையலாம். இதற்கிடையில் இந்திய சந்தையில் முதலீடுகள் குவியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் வளர்ச்சி

கடன் வளர்ச்சி

தொடர்ந்து கடன் வளர்ச்சி விகிதமானது மேம்பட்டு வரும் நிலையில், இது தேவையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வங்கி அல்லாத நிதி நிறுவனம், கேப்பிட்டல் கூட்ஸ், உள்கட்டமைப்பு துறை, சிமெண்ட், ஹவுஸிங், பாதுகாப்பு, ரயில்வே என பல துறைகளின் வளர்ச்சி விகிதமானது மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

அந்த வகையில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 12 பங்குகளை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

லிஸ்டில் இருக்கும் முதல் நிறுவனம் ரிலையன்ஸ் CMP - ரூ.2514, வருமானம் எதிர்பார்ப்பு - 14.4%, இலக்கு விலை - ரூ.2875

ரிலையன்ஸ் டெலிகாம் துறை, புதிய எனர்ஜி என பல துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகின்றது. இதன் வருவாய் விகிதம் மற்றும் எபிட்டா விகிதம் முறையே 14% மற்றும் 16% ஆக 2022 - 24ம் நிதியாண்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சில்லறை வர்த்தக பிரிவு, டெலிகாம் பிரிவு மற்றும் வின்ட்பால் வரி காரணமாக இதுவும் இப்பங்கிற்கு சாதகமாக அமையலாம். எனினும் ஆயில் மற்றும் கேஸ் வணிகத்தில் பெரும் ஏற்ற இறக்கம் இருப்பதும் கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் CMP - ரூ.1475, வருமானம் எதிர்பார்ப்பு - 10.5%, இலக்கு விலை - ரூ.1630

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் விகிதமானது நடப்பு ஆண்டில் 15 - 16% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே மார்ஜின் விகிதத்தினை 21 - 22% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது. இதே இதன் 22 - 24ம் நிதியாண்டில் CAGR வருவாய் விகிதம் 9.6% ஆக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கியின் CMP - ரூ.879, வருமானம் எதிர்பார்ப்பு - 30.8%, இலக்கு விலை - ரூ.1150

ஐசிஐசிஐ வங்கியின் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, அதன் சகாக்களை காட்டிலும் டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் வணிக வளர்ச்சியும் கண்டு வருகின்றது. இதன் கடன் CAGR விகிதம் 20% இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

எஸ்பிஐ

எஸ்பிஐ

எஸ்பிஐ வங்கியின் CMP - ரூ.605, வருமானம் எதிர்பார்ப்பு - 3.3%, இலக்கு விலை - ரூ.625

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இந்திய பொருளாதாரமானது வளர்ச்சி பாதையில் உள்ள நிலையில் மேற்கோண்டு வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் இவ்வங்கி பங்கிற்கு அதிகரிக்க காரணமாக அமையலாம். இது வாரக்கடன் விகிதமானது குறைந்து வரும் நிலையில், சொத்தின் தரமும் அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு இந்த வங்கி பங்கு அதிகரிக்க காரணமாக அமையலாம்.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்லின் CMP - ரூ.807, வருமானம் எதிர்பார்ப்பு - 25.2%, இலக்கு விலை - ரூ.1010

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் FY22- 24 -லின் எபிட்டா CAGR 19% ஏற்றத்திலும், அர்பு விகிதமும் தொடர்ந்து மற்றும் ஆப்பிரிக்கா வணிகமும் வளர்ச்சி கண்டு வருகின்றது. இதுவும் இதன் வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம்.

ஐடிசி

ஐடிசி

ஐடிசி நிறுவனத்தின் இலக்கு விலை 400 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இதன் தற்போதைய சந்தை விலை 333 ரூபாயாகும். எதிர்பார்க்கும் வருமானம் 20.2%.

இதன் முக்கியமான வணிகமான எஃப்.எம்.சி.ஜி வணிகம் என பல காரணிகளுக்கு மத்தியில் வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ளது. இது நீண்டகால நோக்கில் இப்பங்கு அதிகரிக்க காரணமாக அமையலாம்.

டைட்டன்

டைட்டன்

டைட்டன் நிறுவனத்தின் CMP - ரூ.2566, வருமானம் எதிர்பார்ப்பு - 13.4%, இலக்கு விலை - ரூ.2910

டைட்டன் நிறுவனம் எப்போதும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தினை தூண்டும் ஒரு லார்ஜ் கேப் பங்காக உள்ளது. இது வலுவான வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், இதுவும் இந்த பங்கிற்கு சாதகமாக அமையலாம்.

அல்ட்ராடெக் சிமெண்ட்

அல்ட்ராடெக் சிமெண்ட்

அல்ட்ராடெக் சிமெண்ட் CMP - ரூ.7011, வருமானம் எதிர்பார்ப்பு - 7.1%, இலக்கு விலை - ரூ.7510

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் நிலையில் வளர்ச்சி அதிகரிக்கலாம். இதற்கிடையில் 9% வளர்ச்சியினை நிறுவனம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிமெண்ட் தேவையானது தொடர்ந்து விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோல் இந்தியா

கோல் இந்தியா

கோல் இந்தியா CMP - ரூ.218, வருமானம் எதிர்பார்ப்பு - 49.1%, இலக்கு விலை - ரூ.325

கோல் இந்தியாவில் நிலக்கரியின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதன் வளர்ச்சி விகிதமும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தஸ்இந்த் வங்கி

இந்தஸ்இந்த் வங்கி

இந்தஸ்இந்த் வங்கியின் CMP - ரூ.1216, வருமானம் எதிர்பார்ப்பு - 19.2%, இலக்கு விலை - ரூ.1450

இவ்வங்கியின் கடன் வளர்ச்சியானது தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றது. இது PAT விகிதமானது, FY22 - 24ம் நிதியாண்டில் CAGR விகிதமாகவும், இதன் RoE விகிதமானது, Fy24E விகிதமானது 16% ஆக வளர்ச்சி காணலாம்.

அப்பல்லோ ஹாஸ்பிட்டல்

அப்பல்லோ ஹாஸ்பிட்டல்

அப்பல்லோ ஹாஸ்பிட்டல் CMP - ரூ.4428, வருமானம் எதிர்பார்ப்பு - 26.5%, இலக்கு விலை - ரூ.5600

இந்த நிறுவனத்தின் வருவாய் CAGR விகிதம் 15% FY22 - 24ம் நிதியாண்டில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பார்மா, ஹெல்த்கேர், AHLL பிசினஸ் என பலவும், அதன் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.

மேக்ரோடெக் டெவலப்பர்ஸ்

மேக்ரோடெக் டெவலப்பர்ஸ்

மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் CMP - ரூ.177, வருமானம் எதிர்பார்ப்பு - 42.1%, இலக்கு விலை - ரூ.1530

இந்த நிறுவனத்தின் CAGR விகிதமானது FY22 -25ல் 7% ஆக இருக்கலாம். இதன் RoE விகிதமானது, Fy24E விகிதமானது 16% ஆக வளர்ச்சி காணலாம்.இதன் PAT விகிதமானது மேன்மடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL, SBI and ICICI bank among 12 investments suggests for investors: Motilal oswal

RIL, SBI and ICICI bank among 12 investments ideas for investors: Motilal oswal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X