ரூ.1.2 லட்சம் டூ 2.35 கோடி.. கோடியில் லாபம்.. லான்சர் கண்டெய்னர் கொடுத்த வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தையில் நீண்டகால நோக்கில் லாபம் பார்க்க கிடைக்க நல்ல வாய்ப்புகள் எனலாம். பங்கு சந்தையில் தான் லட்சக்கணக்கில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் லாபம் பெறலாம்.

அப்படி லாபம் கொடுத்த ஒரு பங்கு பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். அது லான்சர் கன்டெய்னர் லைன்ஸ் லிமிடெட் நிறுவனமாகும்.

இப்பங்கினை பொது பங்கு வெளியீட்டில் இருந்து பார்க்கும்போது கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல ஏற்றத்தினை கண்டு வருகின்றது.

இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் ஆகஸ்ட் மாதம் நடந்தது என்ன..? இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் ஆகஸ்ட் மாதம் நடந்தது என்ன..?

போனஸ் அறிவிப்பு

போனஸ் அறிவிப்பு

இப்பங்கானது கடந்த மார்ச் 2016ல் பொது பங்கு வெளியீட்டினை செய்தது. இது ஒரு ஈக்விட்டி பங்கானது 12 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த பங்கானது பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு இரண்டு முறை போனஸ் அறிவித்து வந்தது. இது 3:5 மற்றும் 2:1 என்ற விகிதத்தில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

2 முறை போனஸ்

2 முறை போனஸ்

லான்சர் கன்டெய்னர் லைன்ஸ் லிமிடெட் பங்கான அதன் பொதுப் பங்கு வெளியீட்டில் ஒரு லாட் என்பது 10,000 பங்குகளாக நிர்ணயம் செய்யபப்ட்டது. விலை 12 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த பங்கில் ஆரம்பத்தில் முதலீடு செய்திருந்தால், இன்று போனஸ் உடன் சேர்த்து 16000 பங்குகள் ஆக இருந்திருக்கும். இது இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்ட போனஸ்-க்கு பிறகு 48,000 பங்குகளாக இருந்திருக்கும்.

கோடிக் கணக்கில் லாபம்
 

கோடிக் கணக்கில் லாபம்

நீங்கள் பொது பங்கு வெளியீட்டில் ஒரு லாட் வாங்கி வைத்திருந்தால் அதன் மதிப்பு 1.2 லட்சம் ரூபாயாகும். அன்று 1.2 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு வேற லெவல் எனலாம். தற்போது இந்த பங்கு விலை 490.80 ரூபாய் என்ற நிலையில், உங்களது முதலீடானது 2.35 கோடி ரூபாய்க்கு மேல் ஆக அதிகரித்துள்ளது.

லாபம் எவ்வளவு தெரியுமா?

லாபம் எவ்வளவு தெரியுமா?

ஸ்மால் கேப் நிறுவனமான லான்சர் கென்டெய்னர், வலுவான காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. இதன் லாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 127% அதிகரித்து, 5.37 கோடி ரூபாயில் இருந்து, 12.22 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதன் வருவாய் விகிதமும் 5.37 கோடி ரூபாயில் இருந்து 121 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் மொத்த சொத்து மதிப்பு 192.33 கோடி ரூபாயில் இருந்து, 470.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இன்றைய பங்கு நிலவரம்?

இன்றைய பங்கு நிலவரம்?

பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது தற்போது 1.35% குறைந்து, 484.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 500 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 476.50 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 508 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 136.50 ரூபாயாகவும் உள்ளது. இது கிட்டதட்ட அதன் 52 வார உச்சத்தில் இருந்து சற்று குறைந்தே காணப்படுகிறது.

பி.எஸ்.இ-யில் மட்டுமே

பி.எஸ்.இ-யில் மட்டுமே

லான்சர் கன்டெய்னர் நிறுவனம் பி.எஸ்.இ-யில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இப்பங்கின் விலை 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கு மேலாகவே வர்த்தகமாகி வருகின்றது. இப்பங்கானது கடந்த 1 ஆண்டில் இப்பங்கின் விலை 209.14% ஏற்றம் கண்டும், 3 ஆண்டுகளில் 1180.03% ஏற்றமும், இதே இந்த ஆண்டில் இதுவரையில் 172.32% ஏற்றத்திலும், கடந்த 3 மாதத்தில் 83.76% ஏற்றத்திலும், கடந்த 1 மாதத்தில் 37.27% ஏற்றத்திலும் காணப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1466 கோடி ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs.12 to Rs.491: this multibagger stock turns Rs.1.2 lakh to Rs.2.35 crore in 6 years

If Lancer Container had bought one lot in the IPO, its value would have increased to over Rs 2.35 crore today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X