‘ஜெயில்’-ஐ நோக்கி சசிகலாவின் கார்..! சரிவை நோக்கி தமிழக நிறுவனங்களின் பங்குகள்..!

தனது முதல்வர் கனவு களைந்ததை அடுத்து தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், 4 வாரங்களுக்குப் பிறகு சரணடைவாதகவும் சசிகலா தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுகக் கட்சித் தலைவர் வி.கே.சசிகலா எதிராக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பை அடுத்து உடனடியாகப் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதனால் தனது முதல்வர் கனவு களைந்ததை அடுத்து தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், 4 வாரங்களுக்குப் பிறகு சரணடைவாதகவும் சசிகலா தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இன்று கண்டிப்பாகச் சரணடையவேண்டும் என்றும் இல்லையெனில் கைது செய்யப்பட்டு அடைக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை தரையில் அடித்துச் சபதம் எடுத்துக்கொண்டு பெங்களூரில் உள்ள பாரப்பன அகரஹாரா மத்திய சிறையை நோக்கி காரில் தனது பயணத்தைத் துவங்கினார்.

இதற்கு இடையில் தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக இருந்து சசிகலா சிறைக்குச் செல்லும் நிலையில் அதிமுக கட்சியில் அடுத்த முதல்வர் யார் என்று பிரச்சனை எழுந்துள்ளது.

அதே நேரம் ஏற்கனவே ஜெயலலிதா இறந்ததை அடுத்து தமிழக அரசு முறையாகச் செயல்படாததால் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதாக இருந்ததில் மாற்றம் ஏற்பட்டு அண்டை மாநிலங்களான பெங்களூர், ஆந்திரா போன்ற இடங்களுக்குச் சென்றுவிட்டன.

இவை மட்டும் இல்லாமல் இன்று தமிழகத்தின் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் இன்று சரிவையே சந்தித்துள்ளன. எனவே நாம் தமிழக நிறுவனங்களின் இன்றைய பங்குள் நிலையை நீங்களே பாருங்கள்.

மனு தள்ளூபடி

மனு தள்ளூபடி

இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம் இன்று கண்டிப்பாகச் சரணடையவேண்டும் என்றும் இல்லை என்றால் கைது செய்யப்பட்டு அடைக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கியது.

சபதம்

சபதம்

இதனைத் தொடர்ந்து இன்று ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை தரையில் அடித்துச் சபதம் எடுத்துக்கொண்டு பெங்களூரில் உள்ள பாரப்பன அகரஹார மத்திய சிறையை வந்து சேர்ந்தார்.

சிறையில் அடைக்கபட்டார் சசிகலா

சிறையில் அடைக்கபட்டார் சசிகலா

சிறையில் அடைக்கபட்டு சசிகலாவிற்கு கைதி எண் 10711 வழங்கப்பட்டுள்ளது.

யார் அடுத்த முதல்வர்

யார் அடுத்த முதல்வர்

இதற்கு இடையில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க்க இருந்து சசிகலா சிறைக்குச் செல்லும் நிலையில் அதிமுகக் கட்சியில் அடுத்த முதல்வர் யார் என்று பிரச்சனை எழுந்துள்ளது.

அண்டை மாநிலங்களுக்கு சென்ற முதலீடுகள்

அண்டை மாநிலங்களுக்கு சென்ற முதலீடுகள்

அதே நேரம் ஏறகன்வே ஜெயலலிதா இறந்ததை அடுத்து தமிழக அரசு முறையாகச் செயல்படாததால் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதாக இருந்ததில் மாற்ற ஏற்பட்டு அண்டை மாநிலங்களான பெங்களூர், ஆந்திரா போன்ற இடங்களுக்குச் சென்றுவிட்டன.

தமிழக நிறுவனங்களின் பங்குகள் நிலை

தமிழக நிறுவனங்களின் பங்குகள் நிலை

இவை மட்டும் இல்லாமல் இன்று தமிழகத்தின் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் சரிவையே சந்தித்துள்ளன. எனவே நாம் தமிழக நிறுவனங்களின் இன்றைய பங்குள் நிலை என்ன என்று இங்குப் பார்ப்போம்.

அப்பல்லோ மருத்துவமனை

அப்பல்லோ மருத்துவமனை

அப்பல்லோ மருத்துவமனை பங்குகள் 0.62 சதவீதம் அதாவது 7.70 புள்ளிகள் சரிந்து 1240 ரூபாயாக வர்த்தகம் ஆனது.

டிவிஎஸ் மோடார் கம்பெனி

டிவிஎஸ் மோடார் கம்பெனி

டிவிஎஸ் மோடார் கம்பெனி நிறுவன 0.06 சதவீதம் அதாவது 0.25 புள்ளிகள் இன்று குறைந்து வர்த்தகம் ஆனது. நேற்றும் 416.45 ரூபாயாக இருந்த பங்குகளின் விலை 408.90 ரூபாயாகக் குறைந்தது.

எம்ஆர்எப்

எம்ஆர்எப்

மெட்ராஸ் ரப்பர் பேக்ட்ரி நிறுவனத்தின் பங்குகள் 0.44 சதவீதம் அதாவது 222.85 புள்ளிகள் சரிந்தது. நேற்றும் 50,590 ரூபாய்க்கு முடிந்த வர்த்தகம் இன்று 50,038.25 ரூபாயாகச் சரிந்தது.

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் அண்ட் ஃபினான்ஸ்

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் அண்ட் ஃபினான்ஸ்

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் அண்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.08 சதவீதம் சரிந்து அதாவது 10.25 புள்ளிகள் சரிந்து இன்று 938.95 ரூபாயாக வர்த்தகம் ஆனது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பங்குகள் 3.21 சதவீதம் அதாவது 3.21 புள்ளிகள் குறைந்து நேற்று 26.25 ரூபாய்க்கு வர்த்தகம் ஆன பங்குகளின் விலை இன்று 25.60 ரூபாயாகச் சரிந்தது.

ராஜ் டிவி

ராஜ் டிவி

நேற்று 12 சதவீதம் உயர்வைச் சந்தித்த ராஜ் டிவி பங்குகள் இன்று 1.62 சதவீதம் அதாவது 1.10 புள்ளிகள் சரிந்து 67 ரூபாயாக வர்த்தகம் ஆனது.

சன் டிவி நெட்வொர்க்

சன் டிவி நெட்வொர்க்

நேற்று 4 சதவீதம் உயர்ந்த சன் டிவி பங்குகளின் விலை இன்று 1.94 சதவீதம் அதாவது 14.25 புள்ளிகள் சரிந்து 711.95 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டது.

கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி

கருர் வைஸ்யா வங்கி நிறுவனப் பங்குகள் 2.76 சதவீதம் அதாவது 2.60 புள்ளிகள் குறைந்து 91.45 ரூபாயாக வர்த்தகம் ஆனது.

ஐடிஎஃப்சி

ஐடிஎஃப்சி

ஐடிஎஃப்சி நிறுவனம் 4.46 சதவீதம் அதாவது 2.45 புள்ளிகள் சரிந்து இன்று 52.45 ரூபாயாக வர்த்தகம் ஆனது.

டிஎன்பிஎல்

டிஎன்பிஎல்

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் நிறுவனப் பங்குகள் 1.25 சதவீதம் அதாவது 4.30 புள்ளிகள் சரிந்து 338.65 ரூபாயாக வர்த்தகம் ஆனது.

சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன்

சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன்

சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் 0.69 சதவீதம் அதாவது 2.50 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. இதனால் நேற்று 360.30 ரூபாயாக இருந்து பங்குகளின் விலை இன்று 357.80 ரூபாயாகக் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sasikala effect: Tamilnadu companies stocks are down

Sasikala effect: Tamilnadu companies stocks are down
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X