ரஷ்யா - உக்ரைன் போர், சீனா கொரோனா தொற்று, பணவீக்கம், சப்ளை செயின் பாதிப்பு எனப் பல இருந்தாலும் முதலீட்டாளர்கள் நேற்றைய சரிவில் இருந்து வாய்ப்பை தேட துவங்கியுள்ளனர். மும்பை பங்குச்சந்தையில் பல முன்னணி பங்குகளில் இருந்த முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றிய நிலையில், இந்த முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
குறிப்பாக நீண்ட கால அடிப்படையில் முதலீட்டை தேடும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை சரிவை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் வாயிலாகப் புதன்கிழமை வர்த்தகம் 400 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியுள்ளது.
Apr 20, 2022 3:57 PM
சென்செக்ஸ் குறியீடு 574.35 புள்ளிகள் உயர்ந்து 57,037.50 புள்ளிகளை எட்டியது
Apr 20, 2022 3:57 PM
நிஃப்டி குறியீடு 177.90 புள்ளிகள் உயர்ந்து 17,136.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 20, 2022 3:56 PM
இந்திய விமான பயணிகள் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 36.7% உயர்ந்து 1.07 கோடியைத் தொட்டது
Apr 20, 2022 3:56 PM
ரஷ்யாவிடம் இருந்து 2 மடங்கு அதிக நிலக்கரியை இறக்குமதி செய்தது சீனா
Apr 20, 2022 3:55 PM
மார்ச் 2021ல் நிலக்கரி ஏற்றுமதி 5,50,000 டன்னாக இருந்த நிலையில் மார்ச் 2022ல் 1.4 மில்லியன் டன்னாக உயர்ந்தது
Apr 20, 2022 3:55 PM
டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற 15 பில்லியன் டாலர் அளவிலான சொந்த பணத்தை முதலீடு செய்ய தயாரான எலான் மஸ்க்
Apr 20, 2022 3:54 PM
கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் இந்தியா முழுவதும் புதிய வீடுகளின் விலையை 10-15 சதவீதம் வரையில் உயர்த்த ரியஸ் எஸ்டேட் நிறுவனங்கள் முடிவு- CREDAI
Apr 20, 2022 3:54 PM
2030ஆம் ஆண்டில் உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் பொருளாதாரமாக இந்தியா விளங்கும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Apr 20, 2022 3:54 PM
ஜெப்டோ நிறுவனம் மும்பை-யில் 10 நிமிட டெலிவரியை துவங்கியுள்ளது
Apr 20, 2022 3:54 PM
சோமேட்டோ போல் உணவு டெலிவரி செய்யாமல், பேக் செய்யப்பட்ட ஸ்னாக்ஸ் பொருட்களை மட்டுமே டெலிவரி செய்கிறது.
Apr 20, 2022 3:53 PM
விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் திட்டத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
Apr 20, 2022 3:53 PM
மே 1ஆம் தேதி முதல் ஆட்டோ, டாக்ஸி, பஸ் -ன் குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த கேரள அரசு அனுமதி.
Apr 20, 2022 3:53 PM
ஆட்டோ கட்டணம்: 25ல் இருந்து 30 ரூபாயாக உயர்வு
Apr 20, 2022 3:52 PM
பஸ் கட்டணம் : 8ல் இருந்து 10 ரூபாயாக உயர்வு
Apr 20, 2022 3:52 PM
டாக்ஸி கட்டணம்: 200 ரூபாயாக உயர்வு
Apr 20, 2022 3:52 PM
மத்திய மாநில அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு 20000 ஹெக்டர் நிலத்தைக் கைப்பற்றியது
Apr 20, 2022 3:51 PM
அரசு நிலம் கையகப்படுத்தவும், நிர்வாகம் செய்யவும் LAATAN என்னும் அமைப்பு உருவாக்க உத்தரவு
Apr 20, 2022 3:51 PM
இந்தியாவில் 75 டிஜிட்டல் வங்கி மற்றும் NBFC உருவாக்க முடிவு - - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Apr 20, 2022 3:51 PM
டிவிட்டரை கைப்பற்றினால் நிர்வாக குழுவில் இருப்பவர்கள் அனைவருக்கும் {live-blog} சம்பளம்; வருடத்திற்கு 3 மில்லியன் டாலர் சேமிக்கலாம் - எலான் மஸ்க்
Apr 20, 2022 3:51 PM
ஓலா நிறுவனத்தின் MoveOS 2.0 மென்பொருள் கொண்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மியூசிக் சேவை அறிமுகம்.
Apr 20, 2022 3:51 PM
முதல் முறையாக மார்ச் காலாண்டில் 2 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்தது நெட்பிளிக்ஸ்.
Apr 20, 2022 3:50 PM
விளம்பரங்கள் உடன் புதிய மலிவு விலை திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு
Apr 20, 2022 3:50 PM
உணவு பொருட்களின் விலை உயர்வால் உணவகங்கள் 15 சதவீதம் வரையில் விலையை உயர்த்த முடிவு.
Apr 20, 2022 3:50 PM
5ஜி போன்களை அறிமுகம் செய்ய லாவா முடிவு; நீண்ட கால திட்டத்துடன் மீண்டும் களத்தில் இறங்கத் திட்டம்
Apr 20, 2022 3:50 PM
2023ஆம் நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சியை 9 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாகக் குறைப்பு - ஐஎம்எப்
Apr 20, 2022 3:50 PM
ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக தடை விதித்தால் ஒரு பேரல் 185 டாலராக உயரும் - ஜேபி மோர்கன்
Apr 20, 2022 2:11 PM
சென்செக்ஸ் குறியீடு 410.27 புள்ளிகள் உயர்ந்து 56,873.42 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 20, 2022 2:11 PM
நிஃப்டி குறியீடு 120.60 புள்ளிகள் உயர்ந்து 17,079.25 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 20, 2022 2:10 PM
ஐநாக்ஸ் விண்ட் நிறுவனம் 402 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க நிர்வாக குழு ஒப்புதல்
Apr 20, 2022 2:10 PM
JSW குரூப் 900 மெகாவாட் pumped storage hydel திட்டத்தை மேற்கு வங்காளத்தில் நிறுவ முடிவு செய்துள்ளது
Apr 20, 2022 2:09 PM
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பங்குகள் 3.06 சதவீதம் உயர்வு
Apr 20, 2022 2:09 PM
இந்தியா VIX குறியீடு 5.5 சதவீதம் சரிந்து 18.68 ஆக உள்ளது
Apr 20, 2022 12:58 PM
மார்ச் காலாண்டில் பீர் விற்பனை உயர்வு - யுனைடெட் ப்ரீவரிஸ்
Apr 20, 2022 12:58 PM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளுக்கு 2785 ரூபாய் டார்கெட் விலையை கொடுத்த மித்தேஷ் தாக்கர்
Apr 20, 2022 12:58 PM
ஏசிசி பங்குகள் 6 சதவீதம் வரையில் உயர்வு
Apr 20, 2022 12:57 PM
டிசிஎஸ் பங்குகள் 2.45 சதவீதம் உயர்வு
Apr 20, 2022 12:57 PM
மாருதி சுசூகி பங்குகள் 2.25 சதவீதம் உயர்வு
Apr 20, 2022 12:56 PM
டாடா மோட்டார்ஸ் 2.22 சதவீதம் உயர்வு
Apr 20, 2022 12:55 PM
52 வார உயர்வைத் தொட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்
Apr 20, 2022 11:17 AM
சென்செக்ஸ் குறியீடு 523.94 புள்ளிகள் உயர்ந்து 56,987.09 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 20, 2022 11:16 AM
நிஃப்டி குறியீடு 156.35 புள்ளிகள் உயர்ந்து 17,115.00 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 20, 2022 11:16 AM
ஹெச்டிஎப்சி கேப்பிடல் அட்வைசர்ஸ்-ன் 10% பங்குகளை ஹெச்டிஎப்சி அபுதாபி முதலீட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்தது
Apr 20, 2022 11:16 AM
அபுதாபி முதலீட்டு நிறுவனம் சுமார் 184 கோடி ரூபாய் முதலீடு செய்து 10 சதவீத ஹெச்டிஎப்சி கேப்பிடல் அட்வைசர்ஸ் பங்குகளை கைப்பற்றியது
Apr 20, 2022 11:16 AM
4வது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு எல் அண்ட் டி பங்குகள் 3.9 சதவீதம் சரிவு
Apr 20, 2022 11:16 AM
2வருட உயர்வில் கோல் இந்தியா பங்குகள்
Apr 20, 2022 11:14 AM
கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வரையில் சரிவு
Apr 20, 2022 11:14 AM
ஏர்டெல் நிறுவனம் பிப்ரவரி மாதம் 1.59 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றது
Apr 20, 2022 11:14 AM
ஜியோ, வோடபோன் வாடிக்கையாளர்களை இழந்தது
Apr 20, 2022 11:13 AM
Insecticides India பங்குகள் 9 சதவீதம் வரையில் உயர்வு
Apr 20, 2022 11:13 AM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்வு
Apr 20, 2022 11:13 AM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல் அபு ஜானி சந்தீப் கோசலா பேஷன் பிராண்டில் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது
Apr 20, 2022 11:13 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா சரிந்து 76.50 ரூபாயாக உள்ளது
Apr 20, 2022 11:13 AM
அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 10 மில்லியன் டாலர் வர்த்தகத்தைப் பெற்ற Cigniti Tech பங்குகள் 3 சதவீதம் உயர்வு
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed