ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு, சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் கடுமையான லாக்டவுன் உலக நாடுகளின் சப்ளை செயின் பாதிக்கப்பட்டுப் பணவீக்கம் மற்றும் விலைவாசி அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் இன்று காலை ஆசிய சந்தையில் உருவான மந்த நிலை வர்த்தகம் மும்பை பங்குச்சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் நேற்று மத்திய அரசு வெளியிட்ட வர்த்தகப் பற்றாக்குறை அளவீடு, மொத்த விலை பணவீக்கம், சமையல் எண்ணெய் இறக்குமதி அளவீடுகள் முதலீட்டுச் சந்தையைப் பாதித்துள்ளது.
Mar 15, 2022 3:50 PM
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 7 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் உள்ளது
Mar 15, 2022 3:49 PM
டாடா ஸ்டீல் பங்குகள் 5.24 சதவீதம் வரையில் சரிவு
Mar 15, 2022 3:49 PM
டெக் மஹிந்திரா பங்குகள் 3.13 சதவீதம் வரையில் சரிவு
Mar 15, 2022 3:49 PM
கோட்டாக் மஹிந்திரா பங்குகள் 3.05 சதவீதம் சரிவு
Mar 15, 2022 3:49 PM
ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ் பங்குகள் 2 சதவீதத்திற்கு மேல் சரிவு
Mar 15, 2022 3:40 PM
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 709.17 புள்ளிகள் சரிந்து 55,776.85 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 15, 2022 3:40 PM
நிஃப்டி குறியீடு 208.30 புள்ளிகள் சரிந்து 16,663.00 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 15, 2022 3:39 PM
ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான PLI திட்டத்திற்கு 75 நிறுவனங்களுக்கு ஒப்புதல்
Mar 15, 2022 3:39 PM
பேடிஎம் பங்குகள் 600 ரூபாய்க்கு கீழ் சரிவு
Mar 15, 2022 3:39 PM
ஏர் இந்தியா சில குறிப்பிட்ட வெளிநாட்டு வழித்தடத்தில் மட்டும் அதிகப்படியான கவனத்தை செலுத்த முடிவு செய்துள்ளது
Mar 15, 2022 3:39 PM
சோமேட்டோ மற்றும் பிளிங்க்இட் நிறுவனங்கள் இணைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது
Mar 15, 2022 2:23 PM
சென்செக்ஸ் குறியீடு 753 புள்ளிகள் சரிந்து 55,733.02 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 15, 2022 2:22 PM
நிஃப்டி குறியீடு 228.15 புள்ளிகள் சரிந்து 16,643.15 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 15, 2022 2:22 PM
பந்தன் வங்கி பங்குகள் 9 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 2:22 PM
பந்தன் வங்கி பங்குகள் இன்று அதிகப்படியாக 288.50 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது
Mar 15, 2022 2:22 PM
இன்று அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 176.5 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளது
Mar 15, 2022 2:22 PM
சீனாவில் கொரோனா தொற்றுக் காரணமாக ஐரோப்பிய பங்குகள் சரிவு
Mar 15, 2022 2:21 PM
பேடிஎம் மற்றும் PB பின்டெக் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருக்கும் சாப்ட்பேங்க் குரூப் உறுப்பினர்கள் வெளியேறினர்
Mar 15, 2022 1:08 PM
சென்செக்ஸ் குறியீடு 301.04 புள்ளிகள் சரிந்து 56,184.98 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 15, 2022 1:08 PM
நிஃப்டி குறியீடு 94.00 புள்ளிகள் சரிந்து 16,777.30 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 15, 2022 1:07 PM
அமேசான் - பியூச்சர் குரூப் மத்தியிலான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை
Mar 15, 2022 1:07 PM
பியூச்சர் குரூப் மீது புதிய வழக்கு தொடுத்த அமேசான்
Mar 15, 2022 1:06 PM
ஜூப்லியன்ட் புட்வொர்க்ஸ் பங்குகள் நேற்றைய பெரும் சரிவுக்குப் பின்பு 3 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 1:06 PM
ஸ்டீல் பங்குகள் அனைத்தும் சரிவு
Mar 15, 2022 1:06 PM
இந்தியாவுக்கும் சீனாவின் ஷென்சென் பகுதி வாயிலாக வரும் நிலக்கரி பாதிக்கப்பட்டு உள்ளது
Mar 15, 2022 1:06 PM
நிலக்கரி விலை 350-400 டாலரில் இருந்து 650-700 டாலர் வரையில் உயர்ந்துள்ளது
Mar 15, 2022 1:06 PM
ஷோபா பங்குகள் 3 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 1:06 PM
ஐரோப்பிய சந்தையின் வீழ்ச்சியால் சென்செக்ஸ் குறியீடு 340 புள்ளிகள் சரிவு
Mar 15, 2022 1:05 PM
ஜூன் 2012க்கு பின் ஹாங்காங் HANG SENG சந்தை மோசமான சரிவைப் பதிவு செய்துள்ளது
Mar 15, 2022 1:05 PM
HANG SENG சந்தை சுமார் 5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது
Mar 15, 2022 1:05 PM
சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக HANG SENG சந்தை மோசமான சரிவை பதிவு செய்துள்ளது
Mar 15, 2022 1:05 PM
கச்சா எண்ணெய் விலை 2 வார சரிவை எட்டியுள்ளது
Mar 15, 2022 1:05 PM
WTI கச்சா எண்ணெய் விலை 4.80 சதவீதம் சரிந்து 98.07 டாலராக உள்ளது
Mar 15, 2022 1:04 PM
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.93 சதவீதம் சரிந்து 101.6 டாலராக உள்ளது
Mar 15, 2022 11:12 AM
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பங்குகள் 7.11 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 11:12 AM
பிராமல் எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 5.08 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 11:12 AM
பந்தன் பேங்க் பங்குகள் 7.38 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 11:12 AM
லின்டே பங்குகள் 7.29 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 11:11 AM
ராமகிருஷ்ணா போர்ஜிங்க்ஸ் வருடத்திற்கு 750 மில்லியன் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது
Mar 15, 2022 11:11 AM
ரஷ்யா மீது 4வது பிரிவு தடையை விதிக்க உள்ளது ஐரோப்பா
Mar 15, 2022 11:11 AM
கச்சா எண்ணெய் விலை 140 டாலரில் இருந்து 103 டாலர் வரையில் சரிந்துள்ளது
Mar 15, 2022 11:11 AM
பேடிஎம் பங்குகள் 650 ரூபாய்க்குக் கீழ் முதல் முறையாகச் சரிவு
Mar 15, 2022 11:10 AM
பேடிஎம் பங்குகள் 52 வார சரிவை தொட்டது
Mar 15, 2022 11:10 AM
பேடிஎம் பங்குகள் ஐபிஓ விலையில் இருந்து 71 சதவீதம் சரிவு
Mar 15, 2022 11:10 AM
நிஃப்டி ரியல் எஸ்டேட் குறியீடு 1.3 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 11:10 AM
அலுமினியம் உற்பத்தியாளரான Speira நிறுவனத்திடம் இருந்து 5 வருட ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது
Mar 15, 2022 11:10 AM
அமெரிக்காவின் 10 ஆண்டு பத்திரம் 2 வருட உயர்வை தொட்டு உள்ளது
Mar 15, 2022 11:09 AM
அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது
Mar 15, 2022 11:02 AM
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பங்குகள் 13 சதவீதம் வரையில் உயர்வு
Mar 15, 2022 11:02 AM
பேடிஎம் பங்குகள் தொடர் சரிவு
Mar 15, 2022 11:02 AM
பேடிஎம் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான நஷ்டம்
Mar 15, 2022 11:02 AM
ஜேகே பேப்பர், பாலிபிலெக்ஸ், பிராமல் எண்டர்பிரைசர்ஸ், பந்தன் பேங்க், லின்டே பங்குகள் அதிகப்படியான உயர்வு
Mar 15, 2022 11:02 AM
கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவு
Mar 15, 2022 11:01 AM
இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் அன்னிய முதலீடுகளின் அளவு குறைந்தது
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed