கஷ்ட காலம்.. கழுத்தில் கத்தியுடன் இருக்கும் 1 லட்சம் டெலிகாம் துறை ஊழியர்கள்!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சென்னை: இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் டெலிகாம் துறையில் உள்ள மோசமான சூழல் போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது 1,00,000 ஊழியர்களின் நிலை கேள்விக்குரியதாகியுள்ளது.

இப்படிப்பட்ட சூழில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன ஊழியர்கள் என்பது மட்டும் இல்லாமல் பிற முக்கிய டெலிக்காம் நிறுவங்களிலும் இதே நிலை தான் என்பது மட்டும் உண்மை.

பார்தி ஏர்டெல்

இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தில் 1,805 ஊழியர்கள் ஒரே வருடத்தில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆப்ரிக்கா

பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் ஆப்ரிக்கா கிளையில் இருந்த 4,058 ஊழியர்களின் எண்ணிக்கை 3,737 ஆகக் குறைத்துள்ளது.

ஊழியர்களின் நிலை

2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் ஏர்டெல் நிறுவனத்தில் 19,462 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். இதுவே 2017 செப்டம்பர் மாதம் 17,657 ஆக ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஊழியர்களின் வெளியேற்றத்தால் ஏர்டெல் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 14,189 வாடிக்கையாளர்களை நிர்வகிக்க வேண்டும் என்று இருந்த எண்ணிக்கை தற்போது 16,690 ஆக உயர்ந்து வேலை பழுவை கூட்டி வருகின்றது.

 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

கடனில் சிக்கி தவித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் டிடிஎ சேவை வணிகத்தினை அடுத்து 2ஜி மொபைல் வணிகச் சேவையில் இருந்தும் ஒரு மாதத்தில் வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் லாபம் வரும் வரை 3ஜி மற்றும் சேவையினை மட்டும் தொடர்ந்து அளிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆர்காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குர்திப் சிங் ஊழியர்களிடம் நாம் வயர்லெஸ் வணிகத்தின் இறுதிக் கட்டத்தினை அடைந்து விட்டோம், இன்னும் 30 நாட்கள் மட்டுமே இந்தச் சேவையினை ரிலையன்ஸ் அளிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

ஆர்காம் நிறுவனம் இனி என்ன சேவைகளை வழங்கும்?

லாபம் வருகின்ற வரை ஆர்காம் நிறுவனம் ஐஎல்டி குரல் சேவை, வாடிக்கையாளர் குரல் அழைப்பு சேவை மற்றும் 4ஜி டாங்கில் போஸ்ட்பெய்டு சேவை மற்றும் மொபைல் டவர் சேவை போன்ற வணிகத்தினைச் செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்த கேள்விக்கான மின்னஞ்சலுக்கு ஆர்காம் நிறுவனம் பதில் ஏதும் அளிக்கவில்லை.

 

டிடிஎ சந்தை நிலவரம்

ஆர்காம் நிறுவனத்தின் கீழ் 2 சதவீத டிடிஎ சந்தை மட்டுமே உள்ளது. டிஷ் டிவி நிறுவனத்திடம் 24 சதவீத சந்தையும், டாடா ஸ்கை நிறுவனத்திடம் 23 சதவீதமும் அதிகபட்சமாக உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்தாலும் அதிக

மூத்த ஊழியர்களுக்கு அபாயம்

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் 8 வருடங்களுக்கும் அதிகமான அனுபவம் உள்ள ஊழியர்களுக்கு வேலைக் கிடைப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகின்றது. அனுபவம் குறைந்த ஊழியர்களுக்கு டெலிகாம் சந்தை சிறப்பாக உள்ளபோது எளிதாக வேலை கிடைத்துவிடும்.

சவால்

நிறுவனத்தினை விட்டு வெளிவரும் ஊழியர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும், தாங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி வந்து வந்திருந்தாலும், எந்தப் பதவியை வகித்து வந்திருந்தாலும் கிடைக்கும் வேலையில் சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பணியார்கள் எண்ணிக்கை

ஆர்காம் நிறுவனத்தில் 3,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர், அவர்களில் 1,000 முதல் 1,200 நபர்கள் வரை வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். ஆனால் முறைமுக ஊழியர்கள் எனக் கணக்கு போட்டால் இந்தப் பட்டியல் 5,000 பேரைத் தாண்டும். ஆனால் இது குறித்த கேள்விக்கு நிறுவனம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.

ஜியோ மற்றும் பிற நிறுவங்கள்

முகேஷ் அம்பானியின் ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஏர்டெல், வோடாபோன், ஐடியா நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதை விட டாடா மற்றும் ஆர்காம் பாதிப்பு அதிகம் ஆகும்.

ஐடியா, வோடாபோன் நிறுவனங்களின் இணைவு, பார்தி ஏர்டெல் மற்றும் டெலினார் இணைவு, டாடா டெலிசர்வீஸ் நிறுவனம் இழுத்து மூடப்படுவது போன்ற காரணங்களும் வேலை வாய்ப்புகள் இழப்பிற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

 

வேலை வாய்ப்பு

மேலே உள்ள இந்தக் காரணங்களை வைத்து பார்க்கும் போது டெலிகாம் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1,00,000 ஊழியர்களின் வேலை வாய்ப்பு பறிபோவது தெளிவாகத் தெரிகின்றது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 35 முதல் 40 சதவீதம் வரை வேலை வாய்ப்பினை இழந்துள்ளதாகத் தேர்வாளர்கள் கூறுகின்றனர்.

சம்பளம் குறைப்பு

டெலிக்காம் நிறுவனங்களில் தக்க வைக்கப்படும் ஊழியர்களும் 20 முதல் 30 சதவீதம் வரை சம்பளம் குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். சிலருக்கு 50 சதவீதம் வரையிலும் சம்பள குறைப்பு நடந்துள்ளது.

டெலிகாம் துறையில் தேவை உள்ள வேலை வாய்ப்புகள்

டெலிகாம் துறையில் வேலை வாய்ப்பு இழப்புகள் அதிகமாக நடந்து வந்தாலும் ரேடியோ ஃப்ரீக்வன்சி இஞ்சினியர், கணினி ஆய்வாளர், சேப் அனலிஸ்ட் மற்றும் எம்பெட் ஹார்ட்வேர் டெவலப்பர் போன்ற பணிகளுக்கு 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை வரை சம்பளத்துடன் தேவையும் அதிகமாக இருக்கின்றது.

இந்தியர்களுக்கு அடித்த ஜேக்பாட்!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா எல்லாம் ஓரம் போங்க.. கனடா செல்ல இந்தியர்களுக்கு அடித்த ஜேக்பாட்!

டிரம்பின் தேர்வு யார் தெரியுமா?

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இல்லை.. டிரம்பின் தேர்வு யார் தெரியுமா?

மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

ஐடி நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

மக்களே..! உஷார்..!

மக்களே..! உஷார்..! நவம்பர் மாதம் இந்தப் பொருட்கள் எல்லாம் விலை உயரும்..!தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Slowdown in telecom sector puts 100,000 jobs face axe

Slowdown in telecom sector puts 100,000 jobs face axe
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns