இந்த மல்டி பேக்கர் பங்கினை வாங்கி வைக்கலாம்.. PSU-ஐ பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா பங்கு சந்தைகளில் பல்வேறு நிறுவன பங்குகள் இருந்தாலும், சில பொதுத்துறை நிறுவன பங்குகளுக்கு என்றுமே மவுசு அதிகம் எனலாம்.

 

அந்த பட்டியலில் கனரா வங்கிக்கும் ஒரு இடம் உண்டு. பொதுவாக இதுபோன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அதிக லாபம் கொடுக்காவிட்டாலும், பெரிய நஷ்டம் கொடுக்காது என்ற கருத்து டிரேடர்கள் மத்தியில் உண்டு.

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கு கனரா வங்கி. இவ்வங்கியின் பங்கு விலை தற்போதைய நிலவரம் என்ன? எவ்வளவு அதிகரிக்கும்? ஏன் நிபுணர்கள் வாங்க பரிந்துரை செய்கின்றனர்? வாருங்கள் பார்க்கலாம்.

முதலீட்டாளர்

முதலீட்டாளர்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யும் அனைவரும் அறிந்துள்ள ஓரு விஷயம் தான். இந்தியாவின் வாரன் பஃபெட் என அழைக்கப்படும் ராகேஷ், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்து வரும் மிகப்பெரிய முதலீட்டாளர் ஆகும். இவர் செய்யும் முதலீடுகள் பங்கு சந்தை முதலீட்டாளர்களிடம் கவனத்தினை ஈர்க்கும் பங்குகளாக உள்ளன.

கனரா வங்கி பங்கு

கனரா வங்கி பங்கு

கடந்த செப்டம்பர் காலாண்டில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, தனது போர்ட்போலியோவில் மூன்று பங்குகளை சேர்த்துள்ளார். அதில் கனரா வங்கியும் ஒன்று. 2021ம் ஆண்டில் இது ஒரு மல்டி பேக்கர் பங்கு எனலாம். ஏனெனில் கனரா வங்கியின் பங்கு விலையானது 95 ரூபாயில் இருந்து, 220 ரூபாயாக அதிகரித்துள்ளது. கிட்டதட்ட 135% லாபத்தினை கொடுத்துள்ளது எனலாம்.

பங்கு விலை அதிகரிக்கலாம்
 

பங்கு விலை அதிகரிக்கலாம்

ராகேஷ் ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில் உள்ள இந்த பங்கானது, அடுத்த ஒரு மாதத்தில் 250 ரூபாயினை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய சரிவுக்கு பிறகு கனரா வங்கியின் முக்கிய சப்போர்ட் லெவல் 205 ரூபாயாகும். இதனையே ஸ்டாப் லாஸ் ஆகவும் வைத்துக் கொள்ளலாம். ஆக இந்த வங்கி பங்கினை வாங்க இது சரியான நேரம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிகரலாபம் அதிகரிப்பு

நிகரலாபம் அதிகரிப்பு

இது குறித்து எம்கே குளோபல் நிறுவனம் கணித்துள்ள அறிக்கையில், இவ்வங்கியின் கடன் வளர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 6% வளர்ச்சி கண்டுள்ளது. இதன நிகரலாபம் 1,332.61 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இது வெறும் 444.41 கோடி ரூபாயாக இருந்தது.

ஜுன் ஜுன்வாலா வசம் எவ்வளவு பங்கு

ஜுன் ஜுன்வாலா வசம் எவ்வளவு பங்கு

ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம் செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி, 1.60% அல்லது 2,90,97,400 பங்குகள் உள்ளன. ஆக முதலீட்டாளர்களின் கவனத்தினை ஈர்க்கும் ஒரு பங்காக கனரா வங்கியும் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Stock recommendation! Experts recommend buying and holding shares in Canara Bank

Stock recommendation! Experts recommend buying and holding shares in Canara Bank/
Story first published: Monday, November 22, 2021, 20:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X