இந்திய பங்கு சந்தை சென்ற வாரம் வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிந்தது. மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 11.71 புள்ளிகள் என 0.03 சதவீதம் சரிந்து 34,415.58 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 1.25 புள்ளிகள் என 0.01 சதவீதம் சரிந்து 10,564.05 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பாட்டது.
எனவே இந்த வாரம் ஏப்ரல் 23 முதல் 27-ம் தேதி வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்ற வல்லுநர்கள் பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.

வோக்ஹார்டிட் லிமிடெட்
பார்மா மற்றும் பையோ டெக்னாலஜி நிறுவனமான வோக்ஹார்டிட் லிமிடெட் பங்குகளை 794 முதல் 799 ரூபாய் வரையில் வாங்கலாம் என்றும் 847 ரூபாய் வரை உயரும் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். ரூ.798 ரூபாய்க்கு இந்தப் பங்கை வாங்கினால் ஒரு வாரத்தில் 756 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளது.

ஆரக்கிள் ஃபினான்ஷியல் சர்வீசஸ்
ஆரக்கிள் ஃபினாஷியல் சர்வீசஸ் நிறுவன பங்குகளை 4285 முதல் 4310 ரூபாய் உள் இருக்கும் போது வாங்கலாம் என்றும் ஒரு வாரத்தில் 4,601.36 ரூபாய் வரை லாபம் அளிக்கும் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

பாட்டா இந்தியா லிமிடெட்
பாட்டா இந்தியா லிமிடெட் பங்குகளை 797 முதல் 803 ரூபாய் இருக்கும் போது வாங்கலாம் என்றும், 803 ரூபாய் கொடுத்து ஒரு பங்கை வாங்கும் போது 35.52 ரூபாய் வரை லாபம் அளிக்கும் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

பாங்க் ஆப் இந்தியா
பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் மோசடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் 102 ரூபாய் முதல் 104 ரூபாய் வரை இருக்கும் போது விற்கலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்
ரிலையன்ஸ் இண்ட்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவனப் பங்குகளை 449 ரூபாய் முதல் 453 ரூபாய் வரை இருக்கும் போது விற்கலாம் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இண்டர் குலோப் ஏவியேஷன்
இண்டிகோ ஏர்லைன்ஸ்-ன் தாய் நிறுவனமான இண்டர் குலோப் ஏவியேஷன் பங்குகளை 1,500 முதல் 1,505 ரூபாய் வரை வாங்கினால் 1,550 ரூபாய் வரை உயரும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எய்ச்சர் மோடார்ஸ்
எய்ச்சர் மோடார்ஸ் பங்குகளை 31,200 ரூபாய் கொடுத்து வாங்கினால் 1 மாதத்தில் 34,727 ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறிப்பு
இங்குப் பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் அனைத்தும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பங்குகளை வாங்குவதும், விற்பதும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.