இந்திய பங்கு சந்தை இந்த வாரம் அமெரிக்க, சீனா இடையிலான வர்த்தகப் போர் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை போன்றவற்றால் ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இருந்த நிலையில் அடுத்த வாரம் ஜூலை 16 முதல் 20 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம் என்று வல்லுனர்கள பரிந்துரைத்ததினை இங்குப் பார்க்கலாம்.

கோடாக் மஹீந்தரா வங்கி
கோடாக் மஹீந்தரா வங்கி நிறுவன பங்கை 1,395 முதல் 1405 ரூபாய்க்குள் வாங்கினால் 1,470 ரூபாய் வரை உயரும் என்றும் ஸ்டாப் லாஸ் 1348 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

அப்போலோ டயர்ஸ்
அப்போலோ டயர்ஸ் நிறுவன பங்குகளை 266 முதல் 269 ரூபாய்க்குள் வாங்கினால் 284 ரூபாய் வரை உயரும் என்றும் ஸ்டாப் லாஸ் 258 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

ஐடியா செல்லுலார் லிமிட்டட்
டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லுலாரின் பங்குகளை 53 முதல் 54 ரூபாய் என்றால் விற்கலாம் என்றும், டார்கெட் 50 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 56.3 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

பாங்க் ஆப் இந்தியா
பொதுத் துறை வங்கி நிறுவனமான பாங்க் ஆப் இந்தியா பங்குகளை 81 முதல் 83 ரூபாய்க்குள் இருக்கும் போது விற்கலாம், டார்கெட் 76.5 ரூபாய், ஸ்டாப் லாஸ் 85.3 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

டிவி18 பிராட்காஸ்ட்
டிவி18 பிராட்காஸ்ட் நிறுவன பங்குகளை 46 முதல் 48 ரூபாய் வரையில் இருக்கும் போது விற்கலாம் என்றும், டார்கெட் 42.5 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 49.3 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

குறிப்பு
இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.