சன் டிவிக்கு என்னாச்சு? பங்குகளின் அதிரடி விலை ஏற்றத்துக்கு காரணம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென் இந்தியாவின், மிக முக்கிய டிவி சேனல் குழுமங்களில் ஒன்று இந்த சன் டிவி.

21-ம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில், வீட்டில் கேபிள் எடுத்து இருக்கிறீர்களா? எனக் கேட்காமல், சன் டிவி இருக்கா என கேட்டார்கள். அந்த அளவுக்கு சன் டிவி தென் இந்தியாவில் பிரபலம்.

தமிழில் சன் டிவி, தெலுங்கில் ஜெமினி டிவி, கன்னடத்தில் உதயா டிவி, மலையாளத்தில் சூர்யா டிவி, மேற்கு வங்கத்தில் சன் பங்களா என பல முக்கிய சேனல்கள் இருக்கின்றன.

மற்ற சேனல்கள்

மற்ற சேனல்கள்

இது போக இசை, சினிமா, காமெடி, சுட்டி, க்ளாசிக், செய்திகள் என பல பிரிவுகளிலும் பல சேனல்கள் இயக்கிக் கொண்டு இருக்கிறது சன் டிவி குழுமம். குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் மேலே சொன்ன பிரிவுகளில் பல பிரிவுகளுக்கு தனி சேனல்களை நடத்திக் கொண்டு இருக்கிறது சன் டிவி குழுமம்.

பங்கு விலை ஏற்றம்

பங்கு விலை ஏற்றம்

கடந்த வெள்ளிக்கிழமை, சன் டிவியின் பங்கு விலை, 400 ரூபாய்க்கு நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை, என் எஸ் இ சந்தையில், வர்த்தக நேர தொடக்கத்திலேயே, சன் டிவியின் பங்கு விலை 412 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. அதிகபட்சமாக 444 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில் 426 ரூபாய்க்கு நிறைவடைந்து இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

சன் விடி கம்பெனியின், ஜூன் 2020 காலாண்டுக்கான கன்சாலிடேடட் PAT 257 கோடி ரூபாயாக இருக்கிறது. இது முந்தைய ஜூன் 2019 காலாண்டில் ஈட்டிய 386 கோடி ரூபாய் PAT-ஐ விட 33 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, சன் டிவி கம்பெனிக்கான மொத்த வருமானம், ஜூன் 2020 காலாண்டில் 714 கோடி ரூபாயாம். ஜூன் 2019 காலாண்டில் இது 1,137 கோடி ரூபாயாக இருந்ததாம்.

சப்ஸ்கிரிப்ஷன்

சப்ஸ்கிரிப்ஷன்

அட, இது என்னங்க காலாண்டு முடிவுகள் பாசிடிவ்வாக வராத போது கூட பங்கு விலை எப்படி அதிகரிக்கும்? வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? எனக் கேட்கிறீர்களா. இதோ சப்ஸ்கிரிப்ஷன் வழியாக வரும் வருவாய் 18 % அதிகரித்து இருக்கிறது. அதை காரணமாக வைத்து சன் டிவியின் பங்கு விலையில் தீபாவளி கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.

வருமான கணக்கு

வருமான கணக்கு

கடந்த ஜூன் 2019 காலாண்டில் 375 கோடி ரூபாயாக இருந்த சப்ஸ்கிரிப்ஷன் வருமானம், இந்த ஜூன் 2020 காலாண்டில் 18 சதவிகிதம் அதிகரித்து 442 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இன்று சன் டிவி பங்குகள் விலை அதிகரிக்க இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

மற்ற முக்கிய அறிவிப்புகள்

மற்ற முக்கிய அறிவிப்புகள்

சன் நெக்ஸ்ட் ஓடிடியில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறார்களாம். கம்பெனியின் நிகர ரொக்கம் (Net Cash) 2,800 கோடி ரூபாயில் இருந்து 3,000 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம். கடந்த 07 ஆகஸ்ட் 2020 கணக்குப் படி, இப்போதும் தமிழகத்தில் சன் டிவியின் நிகழ்ச்சிகள் தான் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளாக பார்க் ரேட்டிங்கில் டாப் 5 இடங்களைப் பிடித்து இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sun TV share price surged 10 percent but closed at 6.5 percent high

The sun tv share price has surged around 10 percent from previous close price and today closed at 6.5 percent than previous close price.
Story first published: Monday, August 17, 2020, 16:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X