ரூ.152 - ரூ1524: 900% லாபத்தில் மல்டி பேக்கர் பங்கு.. நீங்க வாங்கி இருக்கீங்களா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கொடுக்கலாம் என்றாலும், சமீபத்திய தினங்களாகவே மேலும் கீழும் ஊசலாடி வருன்றது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் பங்கு சந்தை இல்லை என்றாலும், கடந்த சில அமர்வுகளாக மிக அதிகளவில் இருந்து வருகின்றது.

 

எது எப்படியிருப்பினும் திறமையான, நேரத்துக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டு செயல்படும் முதலீட்டாளர்கள் இன்றும் லாபகரமான முதலீட்டாளர்களாகவே உள்ளனர்.

இதற்கிடையில் 5 வருடத்தில் 900% லாபத்தில் உள்ள பங்கினை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

 ரூ.152 - ரூ.1524 ஆக ஏற்றம்

ரூ.152 - ரூ.1524 ஆக ஏற்றம்

இன்று நாம் பார்க்க இருக்கும் பங்கின் பெயர் ஹெக் லிமிடெட்(HEG Limited). இந்த பங்கின் விலையானது கடந்த டிசம்பர் 2016 அன்று 152 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று மும்பை பங்கு சந்தையில் 1,524 ரூபாயாக அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், 10.02 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கலாம்.

 52 வார உச்சம்

52 வார உச்சம்

இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் 114% தான் ஏற்றம் கண்டுள்ளது. மிட் கேப் பங்கான இது அதன் 52 வார உச்சத்தினை அக்டோபர் 5 அன்று எட்டியுள்ளது. எனினும் தற்போது 42% வீழ்ச்சியினை கண்டுள்ளது. இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்டுகிறது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை டிசம்பர் 21,2020 அன்று 805.90 ரூபாயினை தொட்டது.

ஓராண்டில் என்ன நிலவரம்
 

ஓராண்டில் என்ன நிலவரம்

இதற்கிடையில் இன்று 1.18% குறைந்து, 1524 ரூபாய் என்ற நிலையில் பிஎஸ்இ-ல் காணப்பட்டது. இதன் சந்தை மூலதனம் 6,021 கோடி ரூபாயாக உள்ளது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த பங்கின் விலையானது 64.14% அதிகரித்து காணப்படுகின்றது. இதே கடந்த ஒரு ஆண்டில் 78% அதிகரித்துக் காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

எப்படியிருப்பினும் ஒரு மாதத்தில் 25.89% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. இன்று காலை தொடக்கத்தில் 2.07% ஏற்றம் கண்டு, 1,574 ரூபாயாக தொடங்கியது. இன்று உச்சம் பிஎஸ்இல் 2.46% அதிகரித்து, 1580.05 ரூபாயாக காண்ப்பட்டது.

இந்த பங்கின் விலையானது லாபத்தில் காணப்பட்டாலும் வரவிருக்கும் நாட்களில் சற்று சரிவினைக் காணலலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

இந்த பங்கின் விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜிக்கும் கீழாக காணப்படுகின்றது. டெக்னிக்கலாக இந்த பங்கின் விலையானது சரிவில் காணப்பட்டாலும், இதன் ஃபண்டமெண்டல் காராணிகள் அனைத்தும் சந்தைக்கு சாதகமாக உள்ளது.

 நிகரலாபம்

நிகரலாபம்

இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 956% அதிகரித்து, 131.52 கோடி ரூபாயாக கட்னத செப்டம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 12.97 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர விற்பனை 60.28% அதிகரித்து, 517 கோடி ரூபாயால அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 322 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This multibagger stocks turned over 900% returns

This multibagger stocks turned over 900% returns This multibagger stocks turned over 900% returns/ரூ.152 - ரூ1524: 900% லாபத்தில் மல்டி பேக்கர் பங்கு.. நீங்க வாங்கி இருக்கீங்களா..?
Story first published: Tuesday, December 21, 2021, 22:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X