விஜய் சேகர் ஷர்மாவின் கனவெல்லாம் இப்படியாகிடுச்சே.. பேடிஎம் பங்கு விலை மீண்டும் ஆல் டைம் லோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜய் சேகர் ஷர்மாவின் கனவு நிறுவனமான ஓன் 97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பங்கான பேடிஎம் பங்கின் விலையானது, மீண்டும் அதன் புதிய குறைந்தபட்ச விலையினை எட்டியுள்ளது.

 

பேடிஎம் பங்கினை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது. ஏனெனில் பங்கு சந்தையில் இதன் நுழைவு விலையானது 2150 ரூபாயாகும். ஆனால் இன்று வரையில் அந்த விலையை எட்டவில்லை என்றே கூறலாம்.

சொல்லப்போனால் இந்த பங்கின் பொதுப் பங்கு வெளியீட்டில் நுழைந்தவர்கள் எல்லாம், இன்று வரையில் நஷ்டத்தில் தான் உள்ளனர். இப்பங்கின் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

மீண்டும் சரிவு

மீண்டும் சரிவு

கடந்த அமர்வில் பேடிஎம் பங்கின் விலையானது 10% சரிவினைக் கண்டு மீண்டும் புதிய குறைந்தபட்ச விலையினை எட்டியுள்ளது. இது 483.30 ரூபாயாகும். இப்பங்கானது கடந்த மே 12, 2022ம் ஆண்டில் 511 ரூபாயாக குறைந்தபட்ச விலையினை எட்டியிருந்தது. இது கடந்த அமர்வில் உடைக்கப்பட்டு மீண்டும் புதிய குறைந்தபட்ச விலையினை கண்டுள்ளது.

சென்செக்ஸ் ஏற்றம்

சென்செக்ஸ் ஏற்றம்

கடந்த அமர்வில் காலை நேரத்திலேயே 10.10 மணியளவில் 8% சரிவினைக் கண்டு 492.15 ரூபாயாக சரிவினைக் கண்டிருந்தது. இதே எஸ் & பி சென்செக்ஸ் 0.24% மட்டுமே ஏற்றம் கண்டிருந்த நிலையில், பேடிஎம் பங்கின் விலையானது பலத்த சரிவில் காணப்படுகின்றது.

இரண்டு வாரங்களில் இவ்வளவு சரிவா?
 

இரண்டு வாரங்களில் இவ்வளவு சரிவா?

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இப்பங்கின் விலையானது 26% சரிவினைக் கண்டுள்ளது. இதே கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலையானது பாதியாக 64% சரிவினைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் பெஞ்ச்மார்க் விகிதம் 4.8% ஏற்றத்தில் காணப்படுகின்றது.

வெளியீட்டு விலையில் இருந்து?

வெளியீட்டு விலையில் இருந்து?

இதே அதன் பங்கு வெளியீட்டு விலையில் விலை 78% சரிவில் காணப்படுகின்றது. இதன் வெளியீட்டு விலை 2150 ரூபாயாகும். இந்த பங்கானது பட்டியலிடப்பட்ட அன்று உச்ச விலையானது 1961 ரூபாயாக இருந்தது. இது நவம்பர் 18, 2021 ஆகும். பங்கு வெளியீட்டு விலையில் இருந்து தொடர்ந்து சரிவினை மட்டுமே கண்டு வரும் இபப்ங்கின் விலையானது, இனியாவது ஏற்றம் காணுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சாப்ட்பேங்க் குழுமத்தின் முடிவு?

சாப்ட்பேங்க் குழுமத்தின் முடிவு?

கடந்த நவம்பர் 17, 2022 அன்று சாப்ட்பேங்க் குழுமம் 4.5% பேடிஎம் பங்கினை 1630 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது. இதே சாப்ட்பேங்க் விஷன் பண்ட் இந்தியா ஹோல்டிங்ஸ் (Cayman)) 555.67 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது. இதனால் இந்த குழுமங்களின் பங்கு விகிதங்கள் முறையே 12.93% மற்றும் 17.45% சரிவினைக் கண்டன.

நிபுணர்களின் கணிப்பு என்ன?

நிபுணர்களின் கணிப்பு என்ன?

சமீபத்திய காலமாகவே இப்பங்கின் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில், இந்த பங்கின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் Bofa செக்யூரிட்டீஸ் ஆய்வாளர்கள், பேடிஎம்மின் பங்கில் நடு நிலையை பரிந்துரை செய்துள்ளனர், இதன் அடிப்படையில் நம்பிக்கையாக இருப்பதாகவும், ஆக பேடிஎம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறுகின்றனர். எனினும் பேடிஎம்முக்கு போட்டி அதிகம். எனினும் இதன் வலுவடைந்து வரும் அடிப்படையானது மெதுவாக ஏற்றம் காண வழிவகுக்கலாம் என தரகு நிறுவனங்கள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

vijay shekhar sharma's paytm hits news all time low: is it a right to buy?

Paytm share price has seen a 26% decline in the last 2 weeks. It again touched a new low in the last session
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X