2022ல் லாபம் கொடுத்த டாப் 10 பங்குகள் எது.. நஷ்டம் கொடுத்த பங்குகள் எது எது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டு முடிவடைய இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் லாபம் கொடுத்த சந்தைகளில் இந்திய சந்தையும் ஒன்று எனலாம். சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் சந்தையில் நல்ல லாபம் கொடுத்த குறியீடுகளாக இருந்தன.

குறிப்பாக சர்வதேச சந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்திய சந்தைகள் நல்ல லாபம் கொடுத்துள்ளன எனலாம். இந்திய பங்கு சந்தைகள் இதவரையில் சுமார் 5% மேலாக ஏற்றத்தில் காணப்பட்டது.

நடப்பு ஆண்டில் வங்கி துறை, ஆயில் & கேஸ், வேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG), மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

2 நாட்களுக்கு பிறகு சர்பிரைஸ் கொடுத்த பங்கு சந்தை.. ரூ.2 லட்சம் கோடி லாபம்..! 2 நாட்களுக்கு பிறகு சர்பிரைஸ் கொடுத்த பங்கு சந்தை.. ரூ.2 லட்சம் கோடி லாபம்..!

நிஃப்டி 100ல் டாப் 10

நிஃப்டி 100ல் டாப் 10

நிஃப்டி 100ல் டாப் 10 பங்குகளில் அதானி எண்டர்பிரைஸ், அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பங்குகளும் அடங்கும். மொத்தம் நிஃப்டி 100ல் டாப் 10ல் 4 அதானி குழும நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் பங்கு விலையானது 54 - 135% அதிகரித்துள்ளது.
அதானி குழுமம் தவிர இந்த டாப் 10 பட்டியலில் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது காலாண்டில் இதன் லாபம் 44% அதிகரித்து, 1221 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஆர்டர் புத்தகத்தில் கிட்டத்தட்ட 8400 கோடி ரூபாய் மதிப்பிலான வலுவான ஆர்டரினை பெற்றுள்ளது.

கோல் இந்தியா

கோல் இந்தியா

இந்த டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு பொதுத்துறை நிறுவனம் கோல் இந்தியா ஆகும். இந்த நிறுவனம் 58% லாபத்தினை கண்டுள்ளது. இது நிலக்கரியின் தேவையானது பெரியளவில் உயர்ந்த நிலையில் அதனால் பலனடைந்துள்ளது.

இதேபோல ஆயில் & கேஸ் துறையும் வலுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது. இதன் மொத்த மார்ஜின் வரம்பானது 19.6% அதிகரித்துள்ளது. இது கடந்த 2021ம் நிதியாண்டில் 3.4% ஆக இருந்தது. எனினும் இது 2023ம் நிதியாண்டில் 16.1% ஆக சரிவடையலாம் என மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது.

நிஃப்டி 100ல் 2022ல் டாப் கெயினர்கள்?

நிஃப்டி 100ல் 2022ல் டாப் கெயினர்கள்?

அதானி எண்டர்பிரைசஸ் - 135%

பேங்க் ஆப் பரோடா - 130%

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் - 127%

அதானி டோட்டல் கேஸ் - 115%

கோல் இந்தியா - 58%

அம்புஜா சிமெண்ட்ஸ் - 56%

ஐடிசி - 55%

அதானி டிரான்ஸ்மிஷன் - 55%

அதானி கிரீன் எனர்ஜி - 54%

எம் & எம் - 52%

(டிசம்பர் 8 நிலவரப்படி எடுக்கப்பட்டது)

நிஃப்டி 100ல் 2022ல் டாப் லூசர்கள்?

நிஃப்டி 100ல் 2022ல் டாப் லூசர்கள்?

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் - பேடிஎம் - -62%

கிளாண்ட் பார்மா

சோமேட்டோ

பஜாஜ் பின்செர்வ்

நய்கா

சாம்வர்தனா மதர்சன்

விப்ரோ

டெக் மகேந்திரா

எம்பஸிஸ்

எல்டிஐமைண்ட் ட்ரீ

(டிசம்பர் 8 நிலவரப்படி எடுக்கப்பட்டது)

2023ல் என்ன செய்யலாம்?

2023ல் என்ன செய்யலாம்?

இதற்கிடையில் வரவிருக்கும் 2023ம் ஆண்டில் டெக் துறையில் நிலவி வரும் சரிவு போக்கு தொடரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எஃப் எம் சி ஜி பங்குகள் அடுத்த ஆண்டில் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து கமாடிட்டிகள் விலை மற்றும் தேவையானது மீண்டு வரும் நிலையில், சந்தையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஃப்டியின் போக்கு

நிஃப்டியின் போக்கு

இதற்கிடையில் நிஃப்டி 50 மீண்டும் 18000 - 19000 என்ற லெவலுக்குள் 2023ல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டிலேயே சர்வதேச சந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்திய சந்தையானது நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இந்த போக்கு வரும் ஆண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

year ender 2022: best and worst performing shares in 2022:do you have any?

Indian market is one of the profitable markets in the current year. Meanwhile, who are the top gainers and losers?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X