MSME நிறுவனங்களுக்கு சூப்பரான 5 அரசு கடன் திட்டம்.. பெண்களுக்கு சிறப்பு சலுகை.. முழு விபரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்குவதில் ஆதிக்கம் செலுத்தும் MSME நிறுவனங்களின் தினமான இன்று இத்துறைக்கு அளிக்கப்படும் 5 முக்கியக் கடன் திட்டங்களை இங்குப் பார்க்கப்போகிறோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சுமார் 40 சதவீதம் MSME நிறுவனங்களை நம்பி தான் உள்ளது. இதற்காகவே இத்துறையில் முதல்கட்டமாகச் சரிவில் இருந்து மீட்க வேண்டும் என ஒன்றிய அரசும், ஒன்றிய அரசின் நிதியமைச்சகமும் அதிகளவிலான நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது.

MSME நிறுவனங்கள்

MSME நிறுவனங்கள்

இந்தியாவில் பெரும்பாலான MSME நிறுவனங்களுக்கு முறையாக நிதியுதவி கிடைப்பது இல்லை, இதற்குப் பல காரணங்கள் உள்ளது. பொதுவாக MSME நிறுவனங்கள் தங்கள் வர்த்தகக் கணக்குகளை வைத்திருப்பது இல்லை எனக் குற்றச்சாட்டு வங்கிகளிடம் இருந்து எழுகிறது. இதை மாற்ற மத்திய நிதியமைச்சகம் பல சேவைகளை அறிமுகம் செய்து விரைவாகக் கடன் பெறுவதற்கான சேவைகளையும் திட்டங்களையும் அறிவித்துள்ளது.

MSME அரசு வர்த்தகக் கடன் திட்டம்

MSME அரசு வர்த்தகக் கடன் திட்டம்

MSME நிறுவனங்களுக்கான வொர்கிங் கேப்பிடல்-ஐ உருவாக்கும் விதமாக மத்திய அரசு உருவாக்கிய திட்டம் தான் இந்த MSME அரசு வர்த்தகக் கடன் திட்டம். இத்திட்டத்தின் மூலம் MSME நிறுவனங்கள் வெறும் 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் அளவிற்கான கடனுக்கு ஒப்புதல் பெற முடியும்.

இத்திட்டத்தின் கீழ் MSME நிறுவனங்கள் வெறும் 8 சதவீத வட்டியில் அதாவது வெறும் 66 பைசா வட்டியில் கடன் பெற முடியும். ஆனால் வெளியில் கடன் வாங்கினால் குறைந்தது 2 ரூபாய் வட்டியில் தான் பெற முடியும்.

முத்ரா பிஸ்னஸ் லோன்
 

முத்ரா பிஸ்னஸ் லோன்

இந்தத் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும். இத்திட்டத்தில் கீழ் பொதுத்துறை வங்கிகள் மட்டும் அல்லாமல் தனியார் வங்கிகளும் கடன் அளிக்கும் காரணத்தால் MSME நிறுவனங்கள் கடன் பெற அதிகளவிலான வாய்ப்பு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 3 பிரிவுகள் உள்ளது

சுசு கடன் - 50,000 ரூபாய் வரையில் கடன்
கிஷோர் கடன் - 5 லட்சம் ரூபாய் வரையில் கடன்
தருண் கடன் - 10 லட்சம் ரூபாய் வரையில் கடன்

கிரெடிட் கேரென்டி பண்ட் ஸ்கீம் பார் MSME

கிரெடிட் கேரென்டி பண்ட் ஸ்கீம் பார் MSME

MSME நிறுவனங்கள் பலன் பெற வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டம் இது. இத்திட்டத்தின் கீழ் MSME நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்திற்காகத் துணை ஈடு ( collateral) எதுவும் இல்லாமல் கடன் பெற முடியும். இந்தக் கடன் புதிதாக நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, ஆனால் ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

கிரெடிட் கேரென்டி பண்ட் ஸ்கீம் - Credit Guarantee Fund Scheme

உத்தியோகினி திட்டம்

உத்தியோகினி திட்டம்

இத்திட்டம் பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த கடன் கடன் திட்டம். பெண்கள் தொழில் துவங்க விரும்பினால் இதுதான் சரியான திட்டமாக இருக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் வரையிலான கடனை 18 முதல் 55 வயதுடைய பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கடன் 15 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகக் குடும்ப வருமானம் கொண்டவர்களுக்கு அளிக்கப்படுவது இல்லை.

Udyogini - உத்தியோகினி

நேஷனல் ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் கார்பரேஷன் மானியம்

நேஷனல் ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் கார்பரேஷன் மானியம்

MSME நிறுவனங்களுக்குப் பைனான்ஸ், மார்கெட், டெக்னாலஜி மற்றும் இதர சேவைகளை நாடு முழுவதும் இருக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே NSIC அமைப்பு இரு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

1. மார்கெட்டிங் சப்போர்ட் ஸ்கீம்
2. கிரெடிட் சப்போர்ட் ஸ்கீம்

மாதிரி வாடகை ஒப்பந்தச் சட்டம் 2021: மக்களுக்கு என்ன நன்மை..?!மாதிரி வாடகை ஒப்பந்தச் சட்டம் 2021: மக்களுக்கு என்ன நன்மை..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

100percent safest 5 Govt Backed Loan Schemes for SMEs, MSMEs in India Explained

100percent safest 5 Govt Backed Loan Schemes for SMEs, MSMEs in India Explained
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X