சிறு தொழில் செய்பவர்களுக்கு மோடியின் 12 அம்சத் திட்டம்... செம பிளான் இல்ல.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய MSME சமூகம் இந்தியாவின் மொத்த உற்பத்தி ஜிடிபியில் 6.11 சதவிகிதமும், சேவைத் துறை ஜிடிபியில் 24.63 சதவிகிதமும் தன் பங்காகக் கொடுத்து வருகிறது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ 12 கோடி பேருக்கு மேல் இந்த MSME சமூக வேலைகளைச் சார்ந்து இருக்கிறார்கள். இந்தியா ஏற்றுமதியில் 45 சதவிகிதத்தை இந்த MSME சமூகம் தான் செய்கிறது. தற்போது மோடி அறிவித்திருக்கும் திட்டம் கடன் திட்டத்தைச் சேர்த்து 12 அம்ச திட்டத்தை வெளியிட்டு இருக்கிறார் மோடி.

 

59 நிமிடம்

59 நிமிடம்

psbloansin59minutes.com என்கிற பெயரில் ஒரு வலைதளம் தொடங்கப்படும். இந்த வலைதளம் மூலம் வெறும் 59 நிமிடத்தில் இந்திய MSME தொழில் செய்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி

சரக்கு மற்றும் சேவை வரியில் தங்களை பதிவு செய்து கொண்ட MSME-களுக்கு இரண்டு சதவிகித வட்டி மானியம் வழங்கப்படும். இந்த இரண்டு சதவிகித மானியம் கூடுதலாக வாங்கும் கடன்களுக்கு (incremental loan) மட்டுமே பொருந்தும்.

TReDS

TReDS

Trade Receivables e- Discounting System என்பது தான் TReDS-ன் விரிவாக்கம். இனி 500 கோடி ரூபாய்க்கு கீழ் வியாபாரம் செய்யும் MSME-கள் இந்த TReDS-ல் பதிவு செய்து விவரங்களைத் சமர்பிக்கத் தேவை இல்லை. MSME-க்கள் இதை சமர்பிக்கும் நேரத்தில் நிம்மதியாக வியாபாரத்தைப் பெருக்கலாம்.

பொதுத் துறை நிறுவனம்
 

பொதுத் துறை நிறுவனம்

2014-க்குப் பிறகு மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப் பட்ட பின் ஒவ்வொரு பொதுத் துறை நிறுவனமும் தன்னுடைய மொத்த தேவையில் 20 சதவிகித தேவைகளை இந்திய MSME-களிடம் இருந்து வாங்க வேண்டும் என இருந்த சட்டத்தை இப்போது 25 சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறார்கள்.

அரசு நிறுவனங்கள்

அரசு நிறுவனங்கள்

பெண்கள் நடத்து MSME-களில் இருந்து கட்டாயமாக மூன்று சதவிகிதம் வாங்க வேண்டும். இதுவரை MSME-கள் என்று மட்டும் சொல்லி வந்த இடத்தில் தற்போது பெண்கள் MSME-களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் நடந்திருக்கிறது.

 Government e-Marketplace

Government e-Marketplace

இந்தியாவில் இருக்கும் அனைத்து Government e-Marketplace-க்களும் இந்த அரசு இ- சந்தையில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதோடு அவர்கள் யாரிடம் இருந்து பொருள் வாங்குகிறார்கள் என்பதையும் இந்த வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனால் யாரிடம் இருந்து என்ன மாதிரியான பொருட்கள் வாங்குகிறார்கள். அதற்கு இந்திய MSME-கள் எப்படி உள்ளே புகுந்து ஆர்டர்களை வாங்கலாம் என்று பார்கலாம்.

ஹப் & டூல் ரூம்

ஹப் & டூல் ரூம்

இந்திய MSME-களுக்கு 6000 கோடி ரூபாய் செலவில் 20 புதிய தொழில்நுட்ப ஹப் மற்றும் 100 சாதனங்கள் மற்றும் கருவிகளுக்கான கூட்டு அறைகள் அமைக்கப்படும். இதனால் தொழில்நுட்ப ரீதியாகவும், இயந்திரங்கள் முன்னேற்றங்கள் குறித்தும் தேவையான அறிவு கிடைக்கும்.

பார்மா க்ளஸ்டர்

பார்மா க்ளஸ்டர்

பார்மா துறை சார்ந்து தொழில் செய்யும் இந்திய MSME-க்களுக்கு பயன்படும் வகையில் ஒரு பெரிய பார்மா க்லஸ்டர் அமைக்கப்பட இருக்கிறது. இந்த க்ளஸ்டரின் செலவில் 70 சதவிகிதத்தை அரசே ஏற்க இருக்கிறது.

Inspection

Inspection

ஒரு MSME குறித்து ஆய்வு செய்த பின், அவர்களுடைய ஆய்வு அறிக்கையை அடுத்த 48 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும். இதை சாக்காக வைத்து இனி தொழில் முனைவோர்களை தொந்தரவு செய்யக் கூடாது.

 லேபர் சட்டங்கள்

லேபர் சட்டங்கள்

லேபர் சட்டப்படி தொழில் செய்பவர்கள் ஆண்டுக்கு எட்டு சட்டத்தின் கீழ் பல படிவங்களை ஆண்டுக்கு இரு முறை சமர்பிக்க வேண்டும். இதை சாக்காக வைத்து தலை எடுக்கும் லஞ்ச லாவண்யப் பிரச்னைகளை குறைக்க இனி இந்திய MSME நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அந்த 8 சட்டத்தின் கீழ் படிவத்தை சமர்பித்தால் போதுமானது.

சுற்றுச்சூழல் சான்றிதழ்

சுற்றுச்சூழல் சான்றிதழ்

இனி சுற்றுச்சூழல் சான்றுகளை (தண்ணீர் மற்றும் காற்று மாசுபாடு) குறித்த சான்றுகளை இனி அரசிடம் இருந்து வாங்க வேண்டிய அவசியமில்லை. சுய சான்றுகளாக எடுத்துக் கொண்டால் போதுமானது. ஆனால் அரசே 10 சதவிகித MSME-களை தேர்ந்தெடுத்து பரிசோதனை நடத்தி சான்றுகள் சரி பார்க்கப்படும்.

 நாமலே பாத்துக்கலாம்

நாமலே பாத்துக்கலாம்

இந்திய MSME-கள் செய்யும் சிறி தவறுகளுக்கு எல்லாம் நிறுவன விதிகள் 2013-ன் படி அடிக்கடி நீதி மன்றங்களுக்குச் செல்லத் தேவை இல்லாத படிக்கு நிறுவன சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஏடுகளில் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றன. நடந்தான் இன்னும் நன்றாக இருக்கும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

12 major announcement for msme loan by modi government

12 major announcement for msme loan by modi government
Story first published: Saturday, November 3, 2018, 12:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X