சமோசா விற்க கூகிள் வேலையை விடலாமா.. அதிரடி முடிவின் விளைவு.. மிகப்பெரிய வெற்றி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய இளைஞர்கள் பெரிய நிறுவனங்களில் வேலை, அதிகம் சம்பளம் ஆகியவற்றை விடத் தனது கனவுகளை அடையவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி.

 

இதில் என்ன விஷயம் என்றால் அவர்கள் இதில் வெற்றிபெறுவது மட்டும் அல்லாமல் 10 வருடத்தில் அடையே வேண்டிய வளர்ச்சி, பெற வேண்டிய பேர், புகழ் அனைத்தையும் ஒரு சில வருடங்களில் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கின்றனர்.

இதில் முனாப் காபாடியா-வும் ஒருவர்.

முனாப் கபாடியா

முனாப் கபாடியா

இந்தியாவில் பல மொழிகள் பல கலாச்சாரம் இருப்பதைப் போல் உணவிலும் பல வகைகள் உண்டு. இப்படி நாட்டில் இருக்கும் அனைத்தும் உணவுகளும் ஓரே ஊரில் கிடைக்கும் இடங்கள் சில மட்டுமே தான். அதில் மும்பை முக்கியமான ஒன்று.

தற்போது ஒட்டுமொத்த மும்பையைக் கலக்கி வரும் உணவு ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் போஹ்ரி கிட்சென். இதன் உரிமையாளர் தான் முனாப் கபாடியா.

கூகிள் முதல் சமோசா வரை...

கூகிள் முதல் சமோசா வரை...

2015ஆம் ஆண்டு முனாப் கபாடியா எம்பிஏ படித்து முடித்துவிட்டு கூகிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது தாய் நபிசா அவர்களை டிவி முன் தினசரி பார்ப்பதைத் தவிர்க வேண்டும் எனத் திட்டமிட்டு புதிய புட் பிராஜெக்ட்-ஐ தயாரித்தார்.

கபாடியாக்கள், போஹ்ரி சமூகத்தைச் சார்ந்தவர்கள், இவர்கள் பொதுவாக எச்சில் ஊறும் தின்பண்டங்களைச் செய்வதில் பிரபலமானவர்கள். இதில் முனாப் கபாடியா-வின் தாயார் நபிசா கைதேர்ந்தவர்.

அம்மா கையால் செய்த உணவு..
 

அம்மா கையால் செய்த உணவு..

தனது உறவினர்கள் மத்தியில் நபிசா உணவு மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக இருந்த நிலையில், இதனை வெளியுலகத்திற்கும் கொண்டு செல்ல முடிவு செய்தார் முனாப்.

சோதனை

சோதனை

முதலில் இந்த முயற்சியை நேரடியாகச் சந்தைக்குக் கொண்டு செல்வதை விட அதனை முறையாகச் சோதனை செய்து பார்க்க முடிவு செய்தார் முனாப்.

இதன் படி தனது தெரிந்த வெளிநபர்களை இரவு உணவிற்காக அழைத்தார். அப்போது தனது தாய் சமைத்த உணவை அனைவருக்கும் அளித்து அதன் ருசி, மக்கள் கருத்து, சந்தையில் இதன் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றைத் துல்லியமாக்க கணித்தார்.

பெண்களும்.. உணவு...

பெண்களும்.. உணவு...

அடுத்தக் கட்டமாக அறிமுகம் இல்லாதவர்களைத் தனது தாயின் உணவை ருரி பார்க்க வைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இணையத்தில் Word of Mouth என்ற பிரச்சாரத்தின் மூலம் சில பெண்கள் குழுக்களைச் சாப்பிடத் தனது வீட்டிற்கு அழைத்தார். இதற்கு அவர் நிர்ணயம் செய்த கட்டணம் ஒரு நபருக்கு 700 ரூபாய்.

இதின் பின்னரே தனது பிராஜெக்ட்-க்கு போஹ்ரி கிட்சென் எனப் பெயர் வைத்தார்.

கூகிள் வேலை...

கூகிள் வேலை...

உடனே பேஸ்புக்-இல் போஹ்ரி கிட்சென் என்ற பக்கத்தைத் திறந்தார். இதன் பின் தனது தாயைவிடவும் முனாப் மிகவும் பிசியாக இருந்தார்.

தனது கனவிற்கும் திட்டத்திற்கும் வேலை ஒரு தடையாக இருக்கும் காரணத்தால், கூகிள் போன்ற பெரிய நிறுவனத்தில் வேலை செய்தாலும் அதனை விட்டுவிட்டு உணவு சந்தையில் புதிய புரட்சியைச் செய்யக் களமிறங்கினார்.

ஒவர் நைட்-இல் ஒபாமா...

ஒவர் நைட்-இல் ஒபாமா...

இன்றைய நிலையில் இந்த உணவை நீங்கள் ருசிக்க ஆசைப்பட்டால், அதற்கு மூனாப்-ஐ உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவரின் நண்பர்களை யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லையாக நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் அந்த அளவிற்கு இவர் தற்போது மும்பையிலே பேமஸ்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

தற்போது இவர் வீட்டு உணவகத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் வந்த சாப்பிட்டுள்ள காரணத்தால், இந்திய மீடியா மட்டும் அல்லாமல் உலக மீடியாக்களிலும் இவர் இடம்பிடித்துள்ளார்.

மேலும் உணவு சந்தையில் இருக்கும் பல இவர் வெற்றியின் ரகசியத்தைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

டெலிவரி மட்டும்...

டெலிவரி மட்டும்...

தற்போது போஹ்ரி கிட்சென் தனது டெலிவரி அங்காடியை மும்பையின் வார்லி பகுதியில் திறந்துள்ளது. இந்நிலையில் முனாப் புதிய ரெஸ்டாரண்ட் திறக்குத் திட்டத்தில் தற்போது உள்ளார்.

மேலும் தனது மார்கெட்டிங் தந்திரத்தையும் யாருக்கும் பயப்படாமல் கூறிய முனாப், போஹ்ரி கிட்சென் என்பதை ஒரு பிராண்டாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

வெற்றி

வெற்றி

இதுகுறித்து முனாப் கூறுகையில், போஹ்ரி கிட்சென் திட்டத்தை ஒரு வர்த்தகமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் துவங்கவில்லை. இதன் வெற்றியே தற்போது அடுத்தடுத்த வளர்ச்சி திட்டத்திற்கு எங்களைக் கொண்டு சென்றுள்ளது என்று கூறினார்.

அம்மா..

அம்மா..

இந்தப் பிராஜெக்ட் முழுவதும் அம்மாவிற்காகத் துவங்கப்பட்டது, அவளின் எண்ணத்தின் படியே அனைத்தையும் வடிவமைக்கப்பட்டது. இதன் வெற்றிக்கு அம்மா-வின் பார்வையே முக்கியக் காரணமாக உள்ளது.

மேலும் அவர் கடையில் முக்கியமான மற்றும் பிரபலமான உணவு அல்லது தின்பண்டமாகப் பார்க்கப்படுவது மட்டன் சமோசா. இதை விற்பனை செய்வதற்காகலவே கூகிள் வேலையை விட்டுவிட்டு அதில் வெற்றிப் பெற்றுள்ளார் முனாப்.

பிராண்ட் அம்பாசிட்டர்..

பிராண்ட் அம்பாசிட்டர்..

எங்களுடைய வர்த்தகத்திற்கு அம்மா (நபிசா) தான் பிராண்ட் அம்பாசிட்டர் என முனாப் கூறினார்.

சாப்பிட வீட்டுக்கு வரும் அனைவரும் வயிறு நிறைந்து மகிழ்ச்சியுடனும், புன்னகையுடனும் செல்கின்றனர். இதுதான் எங்களின் வெற்றி.

பேஸ்புக்

பேஸ்புக்

இவ்வளவு பிரபலம் ஆன பின்பும் முனாப், போஹ்ரி கிட்சென் பேஸ்புக் பக்கத்திற்கு ஒரு வாரம் 700 ரூபாய் செலவு செய்து புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாமானியர்கள் கவனிக்க வேண்டியவை

சாமானியர்கள் கவனிக்க வேண்டியவை

பர்ஸை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.. சாமானியர்கள் ஜிஎஸ்டி-யில் கவனிக்க வேண்டியவை..!

கோயம்புத்தூர் பேராசிரியர்

கோயம்புத்தூர் பேராசிரியர்

கோயம்புத்தூர் அம்ரிதா பல்கலைக்கழக பேராசிரியரால் இந்திய ராணுவத்திற்கு ரூ. 20,000 கோடி சேமிப்பு..!

வீட்டு கடன்

வீட்டு கடன்

இனி குறைவான வட்டியில் வீட்டு கடன்.. ஆர்பிஐ அறிவித்த புதிய தளர்வுகள்..!

புதிய பார்மூலா

புதிய பார்மூலா

அதிகம் சம்பளம் வாங்க ஐடி ஊழியர்களுக்கு புதிய பார்மூலா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bohri Kitchen's Munaf quit his job at Google to sell mutton samosas

Bohri Kitchen's Munaf quit his job at Google to sell mutton samosas
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X