கொரோனா தாக்கம்.. 82% சிறு தொழில்கள் பாதிப்பு.. ஷாக் கொடுக்கும் சர்வே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கு அடங்காமல் போயிக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவால் 82% சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இது கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக, அரசு லாக்டவுன் நடவடிக்கைகளை கடுமையாக்கி வருகின்றது.

குறிப்பாக தற்போது இரவு நேர ஊரடங்கு என்பது பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிறு நிறுவனங்களிடம் ஆய்வு

சிறு நிறுவனங்களிடம் ஆய்வு

இதனால் இரவு நேர பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் Dun & Bradstreet நடத்திய ஆய்வில் 82% வணிகங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வானது 250 நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட நிலையில், இது உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் என பலரிடமும் நடத்தப்பட்டது. குறிப்பாக இந்த சர்வேயானது 100 - 250 கோடி ரூபாய் வருடம் டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்களிடம் நடத்தப்பட்டது.

தேவை மீண்டு வர தாமதமாகும்

தேவை மீண்டு வர தாமதமாகும்

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இழந்த தேவையை மீட்டெடுக்க இன்னும் கிட்டதட்ட ஒரு வருடம் ஆகும் என பதிலளித்தவர்களில் 70% பேர் கூறியுள்ளனர். இந்தியா கடந்த ஆண்டே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

இதனால் பொருளாதாரமும் மிக மோசமான சரிவினைக் கண்டது. இதற்கிடையில் இந்த ஆய்வில் பதிலளித்த நிறுவனங்களில் 60% நிறுவனங்கள் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் கிடைக்குமா? அரசு ஆதரவு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கின்றன. இந்த ஆய்வானது 7 மெட்ரோ நகரங்களில் உள்ள நிறுவனங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

எவ்வளவு பாதிப்பு?

எவ்வளவு பாதிப்பு?

இவ்வாறு பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் சவால்களாக கருதியது, ஒன்று சந்தை அணுகல், உற்பத்தி திறன், நிதி அணுகல் என கூறியுள்ளனர். மேலும் கடந்த ஏப்ரல் 2020 காலகட்டத்தில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது, 95% நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதே ஆகஸ்ட் மாத நிலவரப்படி 70% பாதிக்கப்பட்டதாகவும், இதே பிப்ரவரி 2021 இறுதியில் இது 40% ஆக குறைந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எப்படி இருப்பினும் பாதிப்பு என்பது தொடர்ச்சியாக இருந்து கொண்டே தான் உள்ளது. உங்கள் வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளதா? எந்த வகையில் எப்படி? உங்களின் கருத்து என்ன? எங்களிடம் பகிருங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus pandemic impacted 82% of Small businesses

Coronavirus impact.. Coronavirus pandemic impacted 82% of Small businesses
Story first published: Thursday, April 22, 2021, 21:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X