அரசு வங்கிகள் MSME தரப்பினருக்கு 12,201 கோடி கடன்! தமிழகத்துக்கு அதிக கடன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

MSME துறையினக்கு, மத்திய அரசு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு அவசர கடன் உத்தரவாத திட்டம் (Guaranteed Emergency Credit Line) அறிவித்து இருக்கிறார்கள் எனப்தை நாம் அறிவோம்.

அந்த திட்டத்தின் கீழ் கொடுக்க 09 ஜூன் 2020 வரை, அரசு வங்கிகள் 12,200.65 கோடி ரூபாயை கடனாக வழங்கி இருப்பதாக நிதி அமைச்சகம் நேற்று 11 ஜூன் 2020 வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

அரசு வங்கிகள் MSME தரப்பினருக்கு 12,201 கோடி கடன்! தமிழகத்துக்கு அதிக கடன்!

 

அரசு வங்கிகள் கடந்த 01 ஜூன் 2020 முதல் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கான கேரண்டி கடன் திட்டத்தின் கீழ் 24,260.65 கோடி ரூபாய் கடன்களை அனுமதித்து இருக்கிறார்களாம். ஆனால் 12,201 கோடி ரூபாயைத் தான் பணமாக கொடுத்து இருக்கிறார்களாம்.

கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் சுய சார்பு இந்தியா மிஷன் தொகுப்பு நிதியில், மிகப்பெரிய நிதி தொகுப்பே இந்த 100 % கேரண்டி கடன் திட்டம் தான்.

09 ஜூன் 2020 கணக்குப் படி, இந்தியாவிலேயே, நம் தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 2,637 கோடி ரூபாய் கடன் அனுமதி கொடுத்து இருக்கிறார்களாம். அதில் 1,727 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறதாம்.

தமிழகத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 2,547 கோடி ரூபாய் அனுமதி கொடுத்து இருக்கிறார்களாம். அதில் 1,225 கோடி ரூபாய் தான் பணமாக வழங்கப்பட்டு இருக்கிறதாம்.

வங்கி வாரியாகப் பார்த்தால், இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 13,363 கோடி ரூபாய் கடனுக்கு அனுமதி வழங்கி இருக்கிறதாம். 7,517 கோடி ரூபாயை பணமாகக் கொடுத்து இருக்கிறார்களாம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவைத் தொடர்ந்து, இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியான பேங்க் ஆப் பரோடா 1,893 கோடி ரூபாய்க்கு கடன் அனுமதி வழங்கி இருக்கிறார்களாம். ஆனால் 526 கோடி ரூபாயைத் Disburse செய்து இருக்கிறார்களாம். யூனியன் பாங்க் ஆப் இந்தியா 1,842 கோடிக்கு கடனை அனுமதித்துவிட்டு, 794 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt banks disbursed Rs 12,201 crore MSME Guaranteed Emergency Credit line

The public sector banks had disbursed around Rs 12,201 crore MSME Guaranteed Emergency Credit line loan to the needed people.
Story first published: Thursday, June 11, 2020, 23:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X