எம்எஸ்எம்இ பதிவு செய்வது எப்படி.. என்னென்ன ஆவணங்கள் தேவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களைத் தான் சுருக்கமாக எம்எஸ்எம்இ என்று கூறுகிறார்கள்.

நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 49 சதவீதம் இந்த எம்எஸ்எம்இக்கள் மூலம் செய்யப்படுகின்றது. மேலும் எம்எஸ்எம்இக்கள் மூலம் நாட்டில் 11 கோடி பேருக்கும் அதிகமானோர் வேலை பெற்றுள்ளனர். இந்த நிலையில் தான் இந்திய அரசு எம்எஸ்எம்இகளுக்கு என பல அதிரடியான சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது.

எம்எஸ்எம்இ பதிவு செய்வது எப்படி.. என்னென்ன ஆவணங்கள் தேவை..!

சமீபத்தில் அறிவித்த அறிவிப்பில் கூட பிணையம் இல்லா கடன், பெண்களுக்கு தனி சலுகை, பல மானிய சலுகைகள், கடன் சலுகைகள் பல சலுகைகளை எம்எஸ்எம்இக்களை ஊக்குவிப்பதற்காக வாரி வழங்கி வருகின்றது. ஆக இப்படி பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்கினை கொண்ட எம்எஸ்எம்இகளுக்கு சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு தினம் தான் எம்எஸ்எம்இ தினம், இது உலகம் முழுக்க ஜூன் 27 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நம் நாட்டின் மற்றொரு முதுகெலும்பாய் திகழும் எம்எஸ்எம்இகளுக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

இதற்கிடையில் எம்எஸ்எம்இயை எப்படி பதிவு செய்வது? இதற்கு எந்த மாதிரியான ஆவணங்கள் தேவை? அதை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

https://udyogaadhaar.gov.in/UA/UAM_Registration.aspx என்ற அரசின் இணையத்தின் மூலமாக நாம் பதிவு செய்து கொள்ள முடியும். இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் இரண்டிலுமே பதிவு செய்து கொள்ள முடியும். இதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவைப்படும்.

மேற்கண்ட இணையத்தில் பதிவு செய்ய உங்களது ஆதார் எண், மொபைல் எண், முகவரி, நீங்கள் செய்யவிருக்கும் தொழிலகத்தின் பெயர், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட பல விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இவற்றோடு சொந்த கட்டிடம் எனில் வீட்டு வரி ரசீது ஆவணம், வாடகை கட்டிடம் எனில் அங்கு உங்களது தொழிலை தொடங்குவதற்கு அந்த கட்டிட உரிமையாளரின் மறுப்பின்மை கடிதம், இதே நிறுவனம் யாரேனும் ஒருவரின் பேரில் பதிவு செய்யப்படுகிறதா? அல்லது அதற்கான பலர் கூட்டாக சேர்ந்து பதிவு செய்யப் போகிறீர்களா என்பதையும் முடிவு செய்து தேவையான விவரங்களை கொடுக்க வேண்டும். இவற்றை பதிவு செய்த பின்னர் உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் ஒன்று வரும். அதனை பதிவு செய்து உங்களது எம்எஸ்எம்இயை நீங்கள் பதிவு செய்து கொள்ள முடியும்.

எம்எஸ்எம்இ பதிவு செய்ய விரும்பும் சிறு நிறுவனங்கள்.. என்ன காரணம்?எம்எஸ்எம்இ பதிவு செய்ய விரும்பும் சிறு நிறுவனங்கள்.. என்ன காரணம்?

இவை எல்லாவற்றையும் நாம் பதிவு செய்வதற்கு முன்பே தயார் படுத்திக் கொண்டு, அவற்றை வைத்துக் கொண்டு பதிவு செய்ய வேண்டும். இவற்றை சரி பார்த்து ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சதில் உங்களுக்கென எம்எஸ்எம்இ எண் தனியாக ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to register MSME online in India? Which documents required for that?

Some important steps of MSMEs registration and required documents
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X