விவசாயிகளுக்கு ஜாக்பாட்..! நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் இதோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த இரண்டு நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதல் நாள் சிறு குறு தொழில்முனைவோர்களை கருத்தில் கொண்டும், இரண்டாவது நாள் விவசாயம் & புலம் பெயர் தொழிலாளர்களையும் கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிவித்தார்.

இன்றும் விவசாயம் தொடர்பாக பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அவைகளைத் தான் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

இவர்களுக்கு இன்று

இவர்களுக்கு இன்று

இன்று விவசாயம் மற்றும் அது சார்ந்த மீன் பிடித்தல், உயிரினங்களை வளர்ப்பது, பால் வளம் என பல துறைகளுக்கும் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தியாவில் கணிசமான மக்கள் இந்த துறையில் தானே வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பணம்

பணம்

விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 18,700 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யபப்ட்டு இருக்கிறது. அதோடு பிரதமர் ஃபசல் பீமா யோஜனா இன்சூரன்ஸ் திட்டம் வழியாக க்ளெய்ம் தொகைகள் 6,400 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது என்றார் நிதி அமைச்சர்.

தேவை சரிவு
 

தேவை சரிவு

இந்த லாக் டவுன் காலத்தில், பாலுக்கான தேவை சுமாராக 20 - 25 % சரிந்து இருக்கிறதாம். இருப்பினும் நாள் ஒன்றுக்கு 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறதாம். ஆனால் விற்பனை 360 லட்சம் லிட்டர் தான் ஆனதாம். இப்படி மொத்தம் 111 கோடி லிட்டர் கூடுதல் பாலுக்கு 4,100 கோடி ரூபாய் பேமெண்ட் உறுதி செய்யப்பட்டு இருக்கிறதாம்.

கடன்

கடன்

பால் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய திட்டம் வழியாக, வட்டி மானியம் ஆண்டுக்கு 2 % வழங்கப்படுமாம். முறையாக கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு கூடுதலாக 2 % வட்டி மானியம் வழங்கப்படுமாம். இதனால் சுமாராக 2 கோடி விவசாயிகளுக்கு, 5,000 கோடி ரூபாய் கூடுதலாக பணம் (Additional Liquidity) கிடைக்குமாம்.

1 லட்சம் கோடி

1 லட்சம் கோடி

விவசாயிகள் தங்கள் உற்பத்தியை நல்ல விலைக்கு விற்க, உதவியாக இருக்க, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு farm gate அடிப்படைக் கட்டமைப்புகளை அமைக்க இருக்கிறார்களாம். இந்த பணத்தில் garm gate விவசாய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களோடு, முதல் நிலை விவசாய கூட்டுறவு சங்கங்கள் போன்றவைகளுக்கும் நிதி கொடுக்க இருக்கிறார்களாம்.

10,000 கோடி நிதி

10,000 கோடி நிதி

சிறு குறு உணவு நிறுவனங்களுக்கு (micro food enterprises - MFEs) 10,000 கோடி ரூபாய் நிதி கொடுக்க இருக்கிறார்களாம். இதில் இந்த நிறுவனங்களுக்கான பிராண்டிங், புதுமைப்படுத்துதல், அவர்களின் கெபாசிட்டியை அதிகப்படுத்துவது எல்லாம் அடக்கம் எனவும் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.

மீனவர்களுக்கு 20,000 கோடி

மீனவர்களுக்கு 20,000 கோடி

Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY) என்கிற திட்டத்தின் வழியாக 20,000 கோடி ரூபாயை வழங்க இருக்கிறார்களாம். அதில் 11,000 கோடி ரூபாய் கடல் மற்றும் ஆறு மீன் பிடித்தலுக்கும் (Inland Fisheries), 9,000 கோடி ரூபாய் கட்டமைப்புகளுக்கும் வழங்க இருக்கிறார்களாம். இதனால் சுமாராக 55 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமாம். ஏற்றுமதி 1 லட்சம் கோடியாக அதிகரிக்குமாம்.

கால்நடைகள்

கால்நடைகள்

National Animal Disease Programme வழியாக 13,343 கோடி ரூபாய் செலவழிக்க இருக்கிறார்களாம். இந்த திட்டத்தின் மூலம் பசு, எருமை, ஆடு, பன்றி... என அனைத்து கால்நடைகளுக்கும், கால் மற்றும் வாய் வழியாக பரவும் நோய்கள் வராமல் இருக்க 100 % தடுப்பூசி போடுவது உறுதி செய்யப்படுமாம்.

15,000 கோடி

15,000 கோடி

Animal Husbandry Infrastructure Development Fund வழியாக 15,000 கோடி ரூபாயை செலவழிக்க இருக்கிறார்களாம். Niche products என்று சொல்லக் கூடிய சில தனித் தன்மை கொண்ட பொருட்களை தயாரிக்கும் விதத்தில் நிறுவப்படும் ஆலைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுமாம்.

ஹெர்பல்

ஹெர்பல்

ஹெர்பல் பொருட்கள் சாகுபடியை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறார்களாம். இதனால் லோக்கல் விவசாயிகள் 5,000 கோடி ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம் எனச் சொல்லி இருக்கிறார். இப்படி ஹெர்பல் & மருத்துவ தாவரங்களை வளர்க்க, கங்கை நதிக்கு அருகில் 800 ஹெக்டேர் நிலத்தை National Medicinal Plant Board தன் கீழ் கொண்டு வந்து கொள்ளும் எனவும் சொல்லி இருக்கிறார்.

தேனி வளர்ப்பு

தேனி வளர்ப்பு

500 கோடி ரூபாயை தேனி வளர்ப்புக்குச் செலவழிக்க இருக்கிறார்களாம். 2 லட்சம் தேனி வளர்ப்பவர்களின் வருமானத்தை அதிகரிப்பார்களாம். இந்த நிதி வழியாக தேனி வளர்ப்பு கட்டமைப்பு, தேனி வளர்ப்பின் கெபாசிட்டியை அதிகரிப்பது, மார்க்கெட்டிங், ஏற்றுமதி... போன்றவைகளும் அடக்கமாம்.

ஆபரேஷன் க்ரீன்

ஆபரேஷன் க்ரீன்

இந்த திட்டத்தின் வழியாக கூடுதலாக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க இருக்கிறார்களாம். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து காய்கறி போக்குவரத்து மற்றும் ஸ்டோரேஜ் செலவில் 50 % மானியமாக கொடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார். இது முதல் 6 மாதங்களுக்கு பைலைட் திட்டம் செயல்படுத்தப்படும். பைலைட் திட்டத்துக்குப் பின் எல்லோருக்கும் விரிவுபடுத்தப்படும்.

அத்தியாவசியப் பொருட்கள்

அத்தியாவசியப் பொருட்கள்

Essential Commodities Act (1955) என்று சொல்லப்படுகிற அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை அமல் படுத்த ஐருக்கிறாராம். இதனால் இருக்கும் தானியங்கள் (Cereal), எண்ணெய், எண்ணெய் வித்துக்கள், உருளைக் கிழக்கு மற்றும் வெங்காயம் போன்றவைகள் Deregularise செய்யப்படுமாம். அதே போல மேலே சொன்ன பொருட்களை கையிருப்பு வைத்துக் கொள்வதிலும் இருக்கும் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுகின்றனவாம்.

புதிய சட்டம்

புதிய சட்டம்

விவசாயிகள் தங்கள் விளைச்சல்களை நல்ல விளைக்கு விற்க ஒரு புதிய சட்டம் (Central Law) உருவாக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார். இந்த சட்டத்தின் வழியாக, விவசாயி தன் பொருளுக்கு ஏற்ற விலையை தானே நிர்ணயித்து விற்றுக் கொள்ளலாம். அதோடு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து எல்லாம் எளிமை படுத்தப்படும், விவசாய பொருட்களுக்கான e-trading வரையறைகள் கொண்டு வரப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.

வரையறைகள்

வரையறைகள்

விவசாயிகள் தங்கள் விளைச்சலுக்கு அவர்களே விலை சொல்லும் விதத்தில் சட்ட வரையறைகள் செய்யப்படுமாம். அதோடு விவசாயத்தில் பல புதிய டெக்னாலஜி வரவும், விற்பனை வாய்ப்புகள் வரவும் சட்ட வரையறைகளை உருவாக்க இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala sitharaman announcement about agriculture agri allied activities

The central finance minister nirmala sitharaman meet press and made announcements for the third day. Today Finance minister made many announcement about the agriculture and agri allied activities like fisheries, animal husbandry, etc.,
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X