MSME-க்களுக்கான கடன் உத்தரவாத திட்டம்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு மத்தியில், பொருளாதாரத்தினை மேம்படுத்த அரசு பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிலும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது மத்திய அரசு.

MSME-க்களுக்கான கடன் உத்தரவாத திட்டம்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைப்பு..!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இரண்டு லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மற்றொரு திட்டத்தினை தொடங்கியுள்ளார். அது 20,000 கோடி ரூபாய் கடன் உத்தரவாதத்தினை வழங்கும் திட்டமாகும்.

இது கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று நோய்க்கு மத்தியில், முடங்கி போயுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது.

இத்திட்டத்தின் படி சிறு குறு மற்றும் நடுத்தரச் நிறுவனங்களுக்கான துன்புறும் சொத்துக்கள் நிதி- துணைக்கடன் என்றும் இது வழங்கப்படுகிறது.

ஆக இத்திட்டத்தின் மூலம் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கக்கூடிய நிறுவனங்களுக்கு, 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உத்தரவாதம் வழங்கப்படும். இதனை அவர்கள் தங்களது தொழிலை மேம்படுத்திக் கொள்ள மறு மூலதனமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது கொரோனாவால் வீழ்ச்சியினைக் கண்டுள்ள நிறுவனங்காள் முதலீடாகவோ அல்லது கடனாகவோ, பங்காகவோ திரட்டுவது என்பது சவாலான ஒன்றாக உள்ளது. மேலும் அவர்களுக்கு வலியுறுத்திய எம்எஸ்எம்இக்களில் பங்குகளாக முதலீடு செய்துகொள்ள முடியும். இது குறித்து கடந்த மே 13 அன்றே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார். அதில் நிதி உதவி தேவைப்படும் சிறு குறு நிறுவனங்களுக்கு 20,000 கோடி ரூபாய் துணைக்கடன் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

எம் எஸ் எம் இக்களின் விளம்பரதாரர்களுக்கு அவர்களின் பங்குகளில் 15% அல்லது 75 லட்சத்திற்கும் சமமான, இதில் எது குறைவாக உள்ளதோ அது கடனாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஊக்குவிப்பாளர்கள் இந்த தொகையினை எம் எஸ் எம் இக்களுக்கு ஈக்விட்டியாக செலுத்துவார்கள். இதன் மூலம் பணப்புழக்கத்தினை மேம்படுத்துவார்கள் மற்றும் கடன், ஈக்விட்டி விகிதத்தினையும் பாராமரிப்பார்கள்.

இந்த துணைக்கடனுக்கான 90 சதவீதம் உத்தரவாத பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மீதமுள்ள 10 சதவீதம் சம்பந்தபட்ட உரிமையாளர்களிடம் இருந்து பெறப்படும்.

இந்த அசல் தொகையை செலுத்துவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு செலுத்த தேவையில்லை. அதே நேரம் திரும்ப செலுத்துவதற்கான அதிகபட்ச கால அவகாசம் 10 ஆண்டுகள் ஆகும். ஆக இந்த திட்டம் 2 லட்சம் எம் எஸ் எம் இக்களுக்கு தேவையான ஆதரவினை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது முடங்கிபோயுள்ள பொருளாதாரத்தினையும் புதுபிக்க உதவும். அதோடு பல லட்சம் பேரின் வேலை வாய்ப்புகளை பாதுக்காக்கவும் உதவும். ஆக மொத்தத்தில் இந்த நிறுவனங்களுக்கு புத்துயிர் ஊட்ட இது பயன்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nitin Gadkari launches scheme to provide Rs.20,000 crore guarantee cover to MSMEs

Union minister Nitin Gadkari launches scheme to provide Rs.20,000 crore guarantee cover to MSMEs.
Story first published: Wednesday, June 24, 2020, 22:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X