MSMEக்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ஜிடிபியில் 40% வரை பங்களிக்கலாம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்துஸ்தான் டைம்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட (Hindustan Times Leadership Summit 2020) மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய MSMEக்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ஜிடிபியில் 40% வரை பங்களிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் கொரோனா வைரஸ் பற்றி பேசிய நிதின் கட்கரி, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்னும் சில காலங்களில் தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறேன். தற்போது தன்னம்பிக்கை மிக அவசியம். நான் நேர்மறையுடன் உணர்கிறேன். கொரோனாவுக்கு எதிராந போரில் தன்னம்பிக்கையே வெல்லும். ஆக மக்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

MSMEக்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ஜிடிபியில் 40% வரை பங்களிக்கலாம்.. !

மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 - 40% வரை எம்எஸ்எம்இ-க்கள் பங்களிப்பதை உறுதி செய்வதே, எங்கள் இலக்கு என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனை 130% அதிகரித்துள்ளது. அதோடு பிரதமர் மோடி அரசு மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அதோடு பழங்குடியினர், விவசாயம் மற்றும் கிராமப்புறங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதே புதிய வாகன சட்டத்தினை பற்றி கூறும் போது, புதிய மோட்டார் வாகனச் சட்டம் முழுமையான சாலைப் பாதுகாப்புத் திட்டத்திற்கு, ஒரு புதிய பார்வையை தரும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் சாலை விபத்துகளை குறைப்போம். சாலை விபத்துகள் பற்றிய தரவு இல்லை என்றாலும், இது போன்ற விபத்துகள் மூலம் 20% இறப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. இல்லையெனில் அபராதம்..!டிசம்பர் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. இல்லையெனில் அபராதம்..!

அதோடு அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் ஃபாஸ்டாக் நடைமுறையை கண்டிப்பாக கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்றும் கட்கரி கூறியுள்ளார்.

கட்டுமான உபகரணங்கள் உற்பத்தியாளர்களின் திறன் 80% அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட இரு மடங்காகும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்த கடினமான காலகட்டங்களில் கட்டடம் கட்டுபவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் நிலைமையை மேம்படுத்த முக்கிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

சாலை கட்டுமானம் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. சாலை கட்டுமான திட்டங்களில் கொரோனாவின் தாக்கம் இல்லை என்றும் பட்டியலிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nitin gadkari says MSMEs will contribute up to 40% in GDP in next five years

MSME updates.. Nitin gadkari says MSMEs will contribute up to 40% in GDP in next five years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X