சரியான கொள்கைகளுடன் எம்எஸ்எம்இ-க்கள் ஏற்றம் காணலாம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் வர்த்தக சபையானது ஜூன் 27-ஐ சர்வதேச எம்எஸ்எம்இ-க்கள் தினமாக அறிவித்தது.

ஏனெனில் உலகளவில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது இந்த எம்எஸ்எம்இக்கள் தான்.

சரியான கொள்கைகளுடன் எம்எஸ்எம்இ-க்கள் ஏற்றம் காணலாம்.. !

 

உலகளவில் கொரோனா வைரஸினால் இந்த ஆண்டு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன, இதனால் கடுமையான பொருளதார சரிவினைக் கண்டுள்ளன. இந்த நிலையில் இது இந்தியாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நேரமாக கருதப்படுகிறது. ஏனெனில் வளர்ச்சியினை மேம்படுத்த நடவடிக்கைகள் பல தேவைப்படுகின்றன.

சமீபத்திய பொரூளாதார சர்வே வணிகத்தினை எளிதாக்குவது பற்றிய விரிவான பகுதியைக் கொண்டிருந்தது. ஆயினும் கூட அதில் மாற்றத்திற்கான முயற்சிகள் மிகக் குறைவானவை.

மேலும் எம் எஸ் எம் இக்களுக்கு மூன்று முக்கிய சவால்கள் உள்ளன. முதலாவது compliance landscape is huge மற்றும் மாநிலம் மற்றும் உள்ளூர் அரசாங்களால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை உள்ளடக்கியது. இரண்டாவது சிக்கலான சட்ட மொழி ஆலோசகர்களை உரை பெயர்ப்பாளர்களாக பணியமர்த்துவதற்கான செலவுகளை அவசியமாக்குகிறது. மூன்றாவதாக தாக்கல், உரிமம், புதுபித்தல் போன்றவற்றுக்காக அரசுத் துறைகள் முழுவதும் ஏராளமான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இப்படி பெரும் சவால்கள் எம் எஸ் எம் இக்களுக்கு காத்துக் கொண்டுள்ளன.

எம் எஸ் எம் இ நிறுவனங்களை மேம்படுத்த ஒரு விரிவான பார்வை அவசியம். குறிப்பாக சிறு நிறுவனங்கள் மீதான சுமையை எளிதாக்குவதற்கான விதிமுறைகளையும் எளிதாக்குதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் வேண்டும். செயல்பாட்டு நேரம் மற்றும் உற்பத்திறனை நோக்கி அவர்களின் செலவுகளை அதிகரிக்க வேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ப கட்டமைப்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

மேலும் தூண்டுதல் தொகுப்பு என்பது ஒரு நிதி தொகுப்பு மட்டும் அல்ல. ஒரு சீர்திருத்த தூண்டுதல் மன நிலையை மாற்றியமைத்தல் மற்றும் நிர்வாகத்தில் உந்துதல் என்று நிதியமைச்சர் முன்னதாக ஒர் அறிக்கையில் கூறியிருந்தார். எனவே இந்த எம் எஸ் எம் இ தினத்தில் வளர்ச்சியை தடுக்கும் கொள்கை முன்னுதாரணத்திலிருந்து விலகிச் செல்வதாக இந்தியா உறுதியளிக்க வேண்டும். வளர்ச்சியினை தூண்டும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மூலம் 2021ம் ஆண்டில் இந்தியாவில் எம் எஸ் எம் இக்களுக்கு ஒரு நல்ல ஆண்டாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

With rights policies, current year can see an MSME boom in india

Indian MSMEs need right policies. It can boom an MSME in india
Story first published: Friday, June 26, 2020, 17:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?