நாளை முதல் அமலுக்கு வரும் வங்கி இணைப்பு: வங்கி வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஆகஸ்ட் 2019 காலத்திலேயே இந்தியாவின் 10 பொதுத் துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்க இருக்கும் செய்தி வெளியானது.

Recommended Video

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைகிறது பொதுத்துறை வங்கிகள்..!

இதற்கு முன்பே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பல தனி வங்கிகளை ஒன்றாக இணைத்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என ஒரே வங்கியாக்கியது குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் இந்தியாவின் 10 பொதுத் துறை வங்கிகள் 4 பொதுத் துறை வங்கிகளாக இயங்கத் தொடங்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

ஜோடி 1

ஜோடி 1

நீரவ் மோடி புகழ் பஞ்சாப் நேஷனல் பேங்க் உடன் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளை இணைத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியாக உருவாக்க இருக்கிறார்களாம். மேலே சொன்ன வங்கிகள் எல்லாம் இனி பஞ்சாப் நேஷனல் பேங்கின் கிளைகளாக செயல்படத் தொடங்குமாம்.

ஜோடி 2

ஜோடி 2

தென் இந்தியாவில் குறிப்பாக கர்நாடகாவில் ஆழமாக கால் ஊன்றி இருக்கும் கனரா வங்கி உடன் சிண்டிகேட் வங்கியை இணைத்து இருக்கிறார்கள். இந்த இணைப்பால், இந்தியாவின் நான்காவது பெரிய வங்கியாக இந்த ஜோடி வலம் வரும். சிண்டிகேட் வங்கிக் கிளைகள் எல்லாம் இனி கனரா வங்கிக் கிளைகளாகச் செயல்படத் தொடங்கும்.

ஜோடி 3
 

ஜோடி 3

அலஹாபாத் வங்கி, இந்தியன் வங்கி உடன் சேர்க்கப்பட இருக்கிறது. நாளை முதல் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கியின் கிளைகளாக, அலஹாபாத் வங்கிக் கிளைகள் செயல்படும். அப்படி என்றால் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இனி அலஹாபாத் வங்கிக் கிளையில் கூட சென்று தங்கள் சேவைகளைப் பெற முடியுமா..? முடியும்.

ஜோடி 4

ஜோடி 4

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உடன் ஆந்திரா பேங்க் மற்றும் கார்ப்பரேஷன் பேங்க் இணைக்க இருக்கிறார்கள். ஆக இனி இந்த இரண்டு வங்கிக் கிளைகளும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளைகளாகச் செயல்படும். அப்படி என்றால் வாடிக்கையாளர்கள் என்ன ஆவார்கள்..?

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

உதாரணமாக அலஹாபாத் வங்கி வாடிக்கையாளர், இனி இந்தியன் வங்கி வாடிக்கையாளராக கருதப்படுவார். இந்தியன் வங்கியிலேயே அவருக்குத் தேவையான சேவைகளை எல்லாம் வழங்குவார்கள். இந்த சேவைகள் எல்லாம் நாளை (ஏப்ரல் 01, 2020, புதன் கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறதாம். இப்படி மேலே சொன்ன எல்லா வங்கி இணைப்புகளும் செயல்படும் என்கிறார்கள்.

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

இந்த இணைப்புகளுக்குப் பின், இந்தியாவில் மொத்தம் 6 பொதுத் துறை இணைப்பு வங்கிகள் (எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, பி என் பி, கனரா, யூ பி ஐ, இந்தியன் பேங்க்) மற்றும் 6 தனி பொதுத் துறை வங்கிகள் (ஐ ஓ பி, யூகோ, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த், பேங்க் ஆஃப் நிதியா, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா) இருக்குமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 public bank merger come into effect from 01 april 2020

The 10 public sector banks merged into 4 big banks comes into effect from tomorrow. The merging bank customers will be considered as the customers of the accepting bank.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X