10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரவிருக்கும் விழாக்கால பருவத்தையொட்டி முன்னணி பெரிய வங்கிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் என அனைவரும் பல சலுகைகளை வழங்க தொடங்கியுள்ளனர்

கொரோனா காலத்தில் துவண்டு போன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், துறையை மீட்டெடுக்க பலவகையிலும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக முன்னணி வங்கிகள் தங்களது வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களில், வரலாறு காணாத அளவுக்கு குறைத்துள்ளனர். அதேசமயம் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் விதமாக, பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர்.

வட்டி விகிதம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு

வட்டி விகிதம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு


இந்த நிலையில் இந்த விழாக்களை பருவத்தில் தேவை அதிகரிக்கும் என்பதோடு, இது போன்ற பல சலுகைகளும் வழங்கப்பட்டு வருவது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலனாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் என்பது 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னணி வங்கிகள் வட்டி குறைப்பு

முன்னணி வங்கிகள் வட்டி குறைப்பு


குறிப்பாக நாட்டின் முன்னணி வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோடக் மகேந்திரா பேங்க், ஹெச்டிஎப்சி பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல வங்கிகள், தங்களது வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. வங்கிகள் இந்த விழாக்களை பருவத்தில் தேவை அதிகரிக்கும் என்பதையொட்டி இது போன்ற பல சலுகைகளை வாரி வழங்கியுள்ளனர்.

ரியல் எஸ்டேட் சலுகை

ரியல் எஸ்டேட் சலுகை

அதேசமயம் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இதே காலத்தில் சரிவினைக் மீட்டெடுக்கும் விதமாக, பல சலுகைகளை வழங்கி வருவதால் இந்த விழாக்களை பருவத்தில் நிச்சயம் தேவை என்பது அதிகரிக்கும் என்று பலதரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பில்டர்ஸ் வீடு வாங்குபவர்களுக்கு பல பரிசுகள், தள்ளுபடிகள் பணம் செலுத்தும் முறையில் பல்வேறு திட்டங்கள் என பலவிதங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான திட்டங்களை அறிவித்து வருகின்றன.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

ரியல் எஸ்டேட் துறை மட்டுமல்லாது நீடித்த நுகர்வோர் பொருட்கள் துறையை சார்ந்தவர்களும், ஆட்டோமொபைல் துறையினர் தங்களது துறைகளில் சலுகைகளை குறைத்துள்ளன. இந்த விழாவையொட்டி தேவை அதிகரிக்கும் என்ற நிலையில், பல சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு காத்துக் கொண்டுள்ளது எனலாம்.

இ-காமர்ஸ் நிறுவனங்கள் சலுகைகள்

இ-காமர்ஸ் நிறுவனங்கள் சலுகைகள்

குறிப்பாக இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள், பிக் பில்லியன் விற்பனை நாட்களில் பல அதிரடியான சலுகைகளை வழங்க திட்டமிட்டு உள்ளனர். ஆக மொத்தத்தில் நீங்கள் ஒரு வீடு வாங்க வேண்டும் என நினைத்திருந்தால், இது உண்மையில் சரியான தருணம் என்று சொல்லலாம்.

விற்பனை அதிகரிக்கும்

விற்பனை அதிகரிக்கும்

வட்டி குறைந்துள்ள நிலையில், வீடுகளின் விலையும் குறைந்துள்ளது. ஆக இது வாடிக்கையாளர்களுக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு நிறுவனங்களும் வீடு வாங்க இதுதான் சரியான தருணம் என்றும் கூறிவருகின்றன. குறிப்பாக இந்த விழாக்கால பருவத்தில் வீடு விற்பனையானது 30 - 35% அதிகரிக்கலாம் என கருத்து எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகள் வட்டி குறைப்பு

வங்கிகள் வட்டி குறைப்பு

குறிப்பாக இந்த விழா காலத்தையொட்டி நாட்டின் மிகப்பெரிய முன்னணி பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளும் தனது வட்டி விகித இதனை குறைத்துள்ளன. அதேபோல எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனமும் தனது வட்டி விகித குறைப்பு காலத்தினை நீட்டித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 year low interest rates, discounts, banks, builders hopes of revival on this festival season

Home loan updates.. 10 year low interest rates, discounts, banks, builders hopes of revival on this festival season
Story first published: Friday, September 24, 2021, 20:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X