1000 ஊழியர்கள் பணிநீக்கம்.. சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் முடிவால் ஊழியர்கள் பீதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா காலத்தில் டெக் மற்றும் கிளவுட் சேவை நிறுவனங்கள் குறைந்த அளவிலான பாதிப்பை மட்டுமே அடைந்திருந்தாலும், அவர்களின் வருங்கால வர்த்தகத்தில் பெரிய அளவிலான தேக்கம் அடைந்துள்ளது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். உதாரணமாக இந்தியாவில் இருக்கும் டெக் நிறுவனங்கள் கொரோனா பாதிப்பின் ஆரம்பக்கட்டத்தில் ஊழியர்களைப் பெரிய அளவில் பணிநீக்கம் செய்யவில்லை, ஆனால் தற்போது வருங்கால வர்த்தகம் மற்றும் வருவாயில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கணிப்புகளைக் கணக்கில் கொண்டு தற்போது பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் உலகின் முன்னணி கிளவுட் மற்றும் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை சேவை அளிக்கும் சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டாலும் தனது லாபம் மற்றும் வர்த்தகத்தைத் தொடர்ந்து நிலையான வளர்ச்சிப் பாதையில் நிலைநாட்ட சுமார் 1000 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவு இந்தியாவில் இருக்கும் ஊழியர்களையும் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சேல்ஸ்போர்ஸ்

சேல்ஸ்போர்ஸ்

சான்பிரான்சிஸ்கோ நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் சந்தை கணிப்புகளை விடவும் அதிகமான வருவாய் பெற்று முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்றது மட்டும் அல்லாமல் 2021ஆம் நிதியாண்டுக்கான வருவாய் அளவீட்டையும் உயர்த்தியுள்ளது.

காலாண்டு முடிவுகளைப் பார்க்கும்போது இந்நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் வருமானத்தில் எவ்விதமான பாதிப்பும் இல்லை. ஆனாலும் கொரோனா-வால் புதிய வர்த்தகம் மிகவும் குறைவான அளவிலேயே இருக்கும் காரணத்தால் வருவாய் மற்றும் லாப அளவீட்டில் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

66 அலுவலகம்

66 அலுவலகம்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் சுமார் 66 அலுவலகத்தில் சுமார் 54,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ள சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இந்த வாரமே ஊழியர்கள் பணிநீக்க பணிகளைத் துவங்கியுள்ளது. தற்போது பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் உலக நாடுகளில் இருக்கும் அனைத்து அலுவலகத்திலும் இருக்கும் எனச் சேல்ஸ்போர்ஸ் தெரிவித்துள்ளது.

வருவாய் மற்றும் விற்பனை

வருவாய் மற்றும் விற்பனை


2021ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் விற்பனை அளவு மிகவும் குறைவாக இருக்கும் என அமெரிக்கச் சந்தை கணித்த நிலையில், அதைப் பொய்யாக்கும் படி 5.15 பில்லியன் டாலர் விற்பனையைப் பதிவு செய்தது சேல்ஸ்போர்ஸ்.

இதேபோல் 2021ஆம் நிதியாண்டின் வருவாய் அளவீட்டை 20 பில்லியன் டாலரில் இருந்து 20.7 முதல் 20.8 பில்லியன் டாலர் அளவில் இருக்கும் எனத் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது சேல்ஸ்போர்ஸ்.

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு

தற்போது செய்யப்பட்டும் ஊழியர்கள் பணிநீக்கம் நடவடிக்கையில் நிறுவனத்தில் பல ஊழியர்கள் புதிய பணியிடத்திற்கும், புதிய பதவியிலும், கூடுதல் பொறுப்புகளும் கொடுக்கப்படும். இவை அனைத்தும் நிறுவனத்தின் வளர்ச்சியை முக்கியமான பகுதிகளில் வளர்ச்சி அடையவும், தொடர்ந்து லாபகரமான நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுகிறது எனச் சேல்ஸ்போர்ஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

2000 ஊழியர்கள்

2000 ஊழியர்கள்

மேலும் அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனத்திற்கு வந்த ரகசிய செய்திகள் படி சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தில் 1000 முதல் 2000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள், இவை அனைத்தும் இந்த வாரத்திற்குள்ளேயே செய்யப்படும் என்றும், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் பெரும்பாலும் விற்பனை பிரிவு, specialists மற்றும் enablement பிரிவின் துணை பிரிவுகளில் இருந்து தான் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1000 employees laying off at cloud, CRM service giant Salesforce

1000 employees laying off at cloud, CRM service giant Salesforce
Story first published: Saturday, August 29, 2020, 16:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X