13 விமான நிலையங்கள் தனியாருக்கு விற்பனை.. மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சுமார் 13 விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கும் முடிவில் இறங்கியுள்ளது.

Airports Authority of India அமைப்பு நிர்வாகம் செய்து வரும் இந்த 13 விமான நிலையத்தை 6 பிரிவுகளாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம்.

மாறுபட்ட விற்பனை முறை

மாறுபட்ட விற்பனை முறை

இந்த 6 பிரிவில் ஒரு லாபம் அளிக்கும் விமான நிலையமும், ஒரு நஷ்டம் அதாவது under-performing விமான நிலையத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விமான நிலையங்களைக் கைப்பற்றும் நிறுவனங்கள் ஆப்ரேஷன், மேனேஜ்மென்ட், டெவலப்மென்ட், அக்ரிமென்ட் முறையில் மேம்படுத்த வேண்டும்.

சேலம் மற்றும் திருச்சி விமான நிலையங்கள்

சேலம் மற்றும் திருச்சி விமான நிலையங்கள்

உதாரணமாக 6 பிரிவுகளில் ஒன்றில் சேலம் மற்றும் திருச்சி விமான நிலையங்கள் உள்ளது. 2020ஆம் நிதியாண்டில் திருச்சி விமான நிலையம் 22.85 கோடி ரூபாய் லாபத்தை அளித்த நிலையில், சேலம் விமான நிலையம் 8.76 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளது.

லாபம் - நஷ்டம்
 

லாபம் - நஷ்டம்

இப்படி ஒரு லாபம் அளிக்கும் விமான நிலையம், ஒரு நஷ்டம் அளிக்கும் விமான நிலையத்தையும், ஒரு லாபம் அளிக்கும் விமான நிலையத்தையும் விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் விமான நிலையைத்தை வாங்கும் நிறுவனங்களுக்கு அதிகளவிலான நஷ்டம் இருக்காது.

6 பிரிவுகள் விற்பனை

6 பிரிவுகள் விற்பனை

திருச்சி, சேலம் விமான நிலையத்தைத் தொடர்ந்து, புவனேஷ்வர்- ஜார்ஸ்குடா இரண்டாவது பிரிவாகவும், இன்டோர் - ஜபல்பூர் மூன்றாவது பிரிவாகவும், ராய்பூர் - ஜால்குவான் நான்காவது பிரிவாகவும், அம்ரித்சர் - கான்கர் 5வது பிரிவாகவும், வாரனாசி - கயா - குஷிநகர் ஆகிய மூன்று விமான நிலையங்களையும் சேர்ந்து 6வது பிரிவாக விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2ஆம் தர நகரங்கள்

2ஆம் தர நகரங்கள்

தற்போது விற்பனை செய்யப்படும் பெரும்பாலான விமான நிலையங்கள் அனைத்தும் 2ஆம் தர நகரங்களில் இருக்கும் விமான நிலையங்கள் என்றால் இப்பகுதிகளில் விமானப் போக்குவரத்து மற்றும் சேவை அதிகரிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

கௌதம் அதானி களத்தில்..?!

கௌதம் அதானி களத்தில்..?!

விமான நிலையம் மற்றும் அதன் வர்த்தகத்தைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டி வரும் கௌதம் அதானியின் அதானி குழுமம் இந்த 13 விமான நிலையத்தைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.

அதானி வருவது சந்தேகம்

அதானி வருவது சந்தேகம்

இதுவரை அதானி கைப்பற்றிய அனைத்து விமான நிலையங்களும் அதிகம் லாபம் மற்றும் வர்த்தகம் பெறக்கூடிய விமான நிலையங்கள். தற்போது விற்பனை செய்யப்படும் 6 பிரிவுகளில் நஷ்டம் தரும் விமான நிலையங்கள் இருக்கும் காரணத்தால் அதானி குழுமம் இதைக் கைப்பற்றுவது சந்தேகம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

13 airports set for divestment: Ministry of Civil Aviation

13 airports set for divestment: Ministry of Civil Aviation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X