கோடீஸ்வரர்களுக்கு மத்தியில் தேர்தல்.. டெல்லியில் அமர்க்களம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி சட்டமன்ற தேர்தல் வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்பு மனு உடன் தங்களது சொத்து மதிப்பு விபரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். இதில் என்ன பெரிய விஷயம் என்று தானே கேட்குறீங்க, இருக்கு..

பொதுவாக மக்களுக்கு யார் பணக்கார வேட்பாளர்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் மிகப்பெரிய ஆர்வம் இருக்கும், ஆனால் டெல்லியில் யார் குறைவான சொத்து மதிப்பு வைத்துள்ள வேட்பாளர் எனத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். ஏனெனில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டிப்போடும் பெரும்பாலானோர் கோடீசுவரர்களாக உள்ளனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறிவைக்கும் சிறு நிறுவனங்கள்: மும்பை பங்குச்சந்தை..!வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறிவைக்கும் சிறு நிறுவனங்கள்: மும்பை பங்குச்சந்தை..!

கோடீஸ்வர வேட்பாளர்கள்

கோடீஸ்வர வேட்பாளர்கள்

2015ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி, பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் முன்னிறுத்தப்பட்ட நிலையில் சுமார் 143 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டிப் போட்ட நிலையில் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கணிப்புகளைப் பொய் ஆகிவிட்டது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுச் சற்றுக் கூடுதலாக 164 கோடிஸ்வர வேட்பாளர்கள் தேர்தலில் போட்டிப்போட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

 

50 கோடி ரூபாய் சொத்து

50 கோடி ரூபாய் சொத்து

164 கோடீஸ்வர வேட்பாளர்களில் சுமார் 13 பேர் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து வைத்துள்ளதாகச் சொத்து விபரங்களை வேட்பு மனு உடன் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் 4 பெரும் பணக்கார வேட்பாளர்களும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது அக்கட்சிக்குத் தனிப் பெருமையாக உள்ளது.

 

300 கோடி ரூபாய் வேட்பாளர்

300 கோடி ரூபாய் வேட்பாளர்

ஆம் ஆத்மி கட்சியின் Mundka வேட்பாளர் தர்மபால் லக்ரா தான் மிகப்பெரிய பணக்கார வேட்பாளராக உள்ளார். இவர் சுமார் 292.1 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து பார்மிலா டோகாஸ் என்பவர் ஆர்கே புரம் பகுதியில் இருந்து போட்டிப்போட்டு வருகிறார் இவருக்கு 80.8 கோடி ரூபாய் அளவிலான சொத்து மதிப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இப்படி முதல் 4 இடத்தையும் ஆம் ஆத்மி கட்சி பிடித்த நிலையில் 5வது இடம் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்குச் சென்றுள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

5வது இடத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சிங் 70.3 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கிறார்

பிஜேபி

பிஜேபி

இதன் பின்பு 6வது, 7வது, 8வது இடங்களைப் பிஜேபி கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். 66.3 கோடி ரூபாய் சொத்து உடன் பாரம் சிங் தன்வார், 64.1 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அனில் கோயல், 57.4 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் சாட் பிரகாஷ் ரானா ஆகியோர் பிடித்துள்ளனர். 9 மற்றும் 10 இடங்களை மீண்டும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் பிடித்துள்ளனர்.

ஏழை வேட்பாளர்கள்

ஏழை வேட்பாளர்கள்

காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர நகர் வேட்பாளர் ராக்கி துசீட் வெறும் 55,574 ரூபாய் பணத்துடன் மிகவும் ஏழை வேட்பாளராக இருக்கிறார். இவரிடம் வாகனம், நகை, நிலம், சொத்து என எதுவும் இல்லை. இவர் 2017ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர்.

இவரைத் தொடர்ந்து 55,900 ரூபாய் மதிப்புடன் பிஜேபி ராஜ் குமார் தில்லான், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராக்கி பிட்லான் 76,421 ரூபாய் பணத்துடன் 2வது மற்றும் 3வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

164 crorepatis in the fray for Delhi polls

In delhi assembly polls 143 candidates with assets worth Rs 1 crore or more fielded by AAP, BJP and Congress in 2015, the number has gone up to 164 in 2020 for the three parties or their allies. As many as 13 candidates have declared assets of over Rs 50 crore. The four richest candidates are from AAP.
Story first published: Sunday, January 26, 2020, 8:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X