கிரிப்டோவில் இன்சைடர் டிரேடிங்கா.. அமெரிக்காவில் 2 இந்தியர்கள் மீது குற்றம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்சைடர் டிரேடிங் என்றால் என்ன? எதற்காக அமெரிக்காவில் இரண்டு இந்தியர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். எதற்காக இந்த குற்றம் சாட்டப்பட்டுள்ளது? இதனால் யாருக்கு என்ன பிரச்சனை? இன்சைடர் டிரேங்க் என்றால் என்ன? வாருங்கள் பார்க்ககலாம்.

பங்கு சந்தையில் வணிகம் செய்பவர்களில் பலரும் இதனை பற்றி தெரிந்திருக்கலாம்.

பொதுவாக இன்சைடர் டிரேடிங் என்பது பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் உள்ள, ஒருவரின் துணை கொண்டு, அதாவது நிறுவனத்தினை பற்றி தெரிந்தவர்கள் மூலம், நிறுவனத்தின் தரவுகளை, ரகசியங்களை தெரிந்து கொண்டு வணிகம் செய்து லாபம் பெறுவது ஆகும்.

பெங்களூர் பெண்ணின் வழக்கில் எஸ்பிஐ தோல்வி.. 54.09 லட்சம் கடன் தள்ளுபடி.. 1 லட்சம் நஷ்டஈடு..! பெங்களூர் பெண்ணின் வழக்கில் எஸ்பிஐ தோல்வி.. 54.09 லட்சம் கடன் தள்ளுபடி.. 1 லட்சம் நஷ்டஈடு..!

இன்சைடர் டிரேடிங்

இன்சைடர் டிரேடிங்

உதாரணத்திற்கு ரிலையன்ஸ் குழுமத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர், ரிலையன்ஸின் காலாண்டு முடிவுகள், ஒப்பந்த அறிவிப்புகள் ஏதேனும் வரும் முன்பு, அதனால் பங்கு விலை அதிகரிக்கலாம் என்று தெரிந்துகொண்டு, அந்த ஊழியரை சார்ந்தவர் மூலம் வாங்கி விற்பனை செய்யலாம். இதன் மூலம் குறுகிய காலத்தில் நல்ல லாபம் பார்ப்பார்கள். இது இன்சைடர் டிரேடிங் என்று அழைக்கப்படுகிறது.

கிரிப்டோகரன்சியில் இன்சைடர் டிரேடிங்கிங்

கிரிப்டோகரன்சியில் இன்சைடர் டிரேடிங்கிங்

இதுபோன்ற இன்சைடர் டிரேடிங்கினை கிரிப்டோகரன்சியில் அமெரிக்காவில் முதல் முறையாக செய்துள்ளதாக, இந்தியாவினை சேர்ந்த இரு சகோதரரர்கள் மற்றும் அவரின் அமெரிக்க நண்பரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்ட விரோதமாக செய்யப்பட்ட வணிகம் மூலமாக, ஒரு மில்லியன் டாலர்களுக்கும் மேலாக லாபமும் ஈட்டியுள்ளனர்.

யாரிந்த இளைஞர்கள்

யாரிந்த இளைஞர்கள்

இஷான் வாஹி 32 மற்றும் அவரது சகோதாரர் நிகில் வாஹி 26 வயதான இந்திய இளைஞர்கள் சியாட்டலில் வசித்து வருகின்றனர். சமீர் ரமணி ஹூஸ்டனில் வசித்தும் வருகின்றனர்.

இந்த இளைஞர்கள் காயின்பேஸ் தளத்தில பட்டியலிடப்பட்டுள்ள கிரிப்டோகரன்ஸி சொத்துகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு, இன்சைடர் வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இந்திய இளைஞர்கள் கைது

இந்திய இளைஞர்கள் கைது

இதற்கிடையில் தான் அமெரிக்காவின் செக்யூரிட்டீஸ் மற்றும் பரிவர்த்தனை வாரியம், மேற்கண்ட மூன்று நபர்களுக்கு எதிராக குற்றசாட்டுகளை அறிவித்துள்ளது. இதன் காரணமாகத் தான் வாஹி சகோதரரர்கள் வியாழக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வாஷிங்டனின் மேற்கு மாவட்டத்திற்காக அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே முதல் முறை

இதுவே முதல் முறை

இதில் ரமணி இந்தியாவில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இவர்களில் இஷான் வாஹியும், ரமணியும் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயின்றவர்கள். நெருங்கிய நண்பர்களாகவும் உள்ளனர். இதுவரை பங்கு சந்தையில் இதுபோன்ற இன்சைடர் டிரேடிங் பற்றி தெரிந்திருக்கலாம். ஆனால் கிரிப்டோகரன்சியிலேயே இப்படி ஒரு டிரேடிங் செய்திருப்பது இதுவே முதல் முறை என அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மேலும்இதற்காக வாஹி சகோதரர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2 Indian brothers charged in US with insider trading in cryptocurrency

2 Indian brothers charged in US with insider trading in cryptocurrency/கிரிப்டோவில் இன்சைடர் டிரேடிங்கா.. அமெரிக்காவில் 2 இந்தியர்கள் மீது குற்றம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X