லட்சங்களில் ஏலம் போன சரக்கு பாட்டில்.. என்ன ஸ்பெஷல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகமெங்கும் மதுபானங்களை அருந்தும் நபர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேபோல் மதுபானங்களின் விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் ஏலம் விடப்பட்ட ஒரு பாட்டில் மதுபானத்தின் மதிப்பு ரூபாய் 6 லட்சம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

1960ஆம் ஆண்டு மற்றும் 1990 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட இந்த மது வகைகள் தலா ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போனதாக வெளிவந்திருக்கும் செய்தி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

ஒரு பாட்டில் மது ரூ.6 லட்சம்

ஒரு பாட்டில் மது ரூ.6 லட்சம்

விருந்துகளின் போது, ​​மக்கள் தங்கள் பிரமாண்ட மது சேகரிப்புகளை தங்களுடைய சுற்றத்தார் மற்றும் நண்பர்களிடம் காட்ட விரும்புகிறார்கள். ஒவ்வொரு வகை மதுபானங்களும் வெவ்வேறு விலைகளில் கிடைக்கின்றன. குறிப்பாக பழைய மதுபானங்களின் விலை மிக மிக அதிகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், இரண்டு மினியேச்சர் சிங்கிள் மால்ட் பாட்டில்கள் லட்சக்கணக்கில் ஏலம் போனதுதான் அனைவரையும் திகைக்க வைக்கிறது.

 ஏலம்

ஏலம்

பிரிட்டனில் சமீபத்தில் நடந்த Islay விஸ்கி ஏலத்தில், இரண்டு ஒற்றை மால்ட் பாட்டில்கள் தலா 6 லட்சத்திற்கும் அதிகமாக ஏலம் போனதாக தகவல் வெளிவந்துள்ளது. இரண்டு விஸ்கிகளின் இந்த விலையில் ஒரு நல்ல காரையே வாங்க முடியும். இந்த மினியேச்சர்களில் ஒன்று ஜேம்ஸ் மக்ஆர்தரின் மால்ட் மில்லில் இருந்து வந்தது என்றும், இந்த மதுபாட்டில் 1990ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இன்னொரு மதுபாட்டில் கடந்த 1959 இல் காய்ச்சி வடிகட்டப்பட்டது என்றும் இந்த இரண்டு பழமையான மதுபாட்டில்கள் தலா ரூ. 6 லட்சத்திற்கும் அதிகமாக ஏலம் போனதாக கூறப்படுகிறது.

ரூ.7 லட்சத்திற்கு ஏலம்
 

ரூ.7 லட்சத்திற்கு ஏலம்

இந்த ஏலத்தில் விலைபோன இன்னொரு விஸ்கி ஸ்பிரிங்பேங்கிலிருந்து வந்ததாகவும் இந்த விஸ்கி கடந்த 1919ஆம் ஆண்டில் இருந்து பாதுகாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இன்னொரு மதுபாட்டில் 1969 ஆம் ஆண்டில் காம்ப்பெல்டவுனில் உள்ள ஸ்பிரிங்பேங்க் டிஸ்டில்லரியில் செய்யப்பட்டது. இந்த இரண்டு வகை மதுபாட்டில்களும் தலா ஏழு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக ஏலம் போனது.

ரூ.13 லட்சத்திற்கு சிறிய பாட்டில் மது

ரூ.13 லட்சத்திற்கு சிறிய பாட்டில் மது

ஸ்காட்லாந்தில் உள்ள ஐல் தீவில் உள்ள மால்ட் டிஸ்டில்லரி மில்லில் தயாரிக்கப்பட்ட மக்ஆர்தரின் விஸ்கியின் நான்கு பாட்டில்கள் மட்டுமே உலகில் இன்னும் பழமையான மதுபாட்டில்களாக உள்ளன. இந்த மது ஆலை 1962ஆம் ஆண்டு மூடப்பட்டது. ஆலை மூடப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காய்ச்சிய மதுபாட்டில்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றும், இந்த இரண்டு மதுவகைகளின் சிறிய பாட்டில்களின் மொத்த விலை சுமார் 13 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

 பெருமைக்குரிய விஷயம்

பெருமைக்குரிய விஷயம்

இந்த ஏலத்தில் பங்கேற்று மது பாட்டில்களை ஏலத்தில் வாங்கிய நபர்கள் தங்களது பெயரை வெளியிடவில்லை. மதுபாட்டிலை அதிக விலைக்கு ஏலத்திற்கு எடுத்த ஒருவர், 'நான் சில ஆண்டுகளுக்கு மது பானங்களை சுவைக்க மாட்டேன் என்றும், ஏலம் எடுத்த மதுவை அருந்தாததற்கு காரணம், மதிப்புமிக்க விஸ்கியை பெருமையுடன் வைத்திருக்க விரும்புகிறேன் என்றும், இவ்வளவு விலையுயர்ந்த விஸ்கியை வாங்குவது பெருமைக்குரிய விஷயம் என்றும் கூறினார்.

ரூ.17 கோடிக்கு மதுவகை

ரூ.17 கோடிக்கு மதுவகை

கடந்த ஆண்டு 72 ஆண்டுகள் பழமையான விஸ்கி பாட்டில் ரூ.40 லட்சத்துக்கு ஏலம் போனதாக விஸ்கி ஏலத்தின் இயக்குனர் இசபெல் கிரஹாம் கூறியுள்ளார். அதேபோல்
கௌட் டி டைமண்ட்ஸ் என்று பெயரிடப்பட்ட ஷாம்பெயின் பாட்டில் உள்ள மது, வைரங்கள் மற்றும் தங்கத்துடன் பதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ.17 கோடிக்கு மேல் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2 Miniature Single Malt Bottles Auctioned For Rs 13 Lakh In UK!

2 Miniature Single Malt Bottles Auctioned For Rs 13 Lakh In UK! |லட்சங்களில் ஏலம் போன் சரக்கு பாட்டில்.. என்ன ஸ்பெஷல்..!
Story first published: Wednesday, July 27, 2022, 13:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X