மமதா நினைத்தபடி பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆகாமலேயே போனால் என்ன நடக்கும்?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

ஒருவேளை பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராகவே நீடித்தால்...?
டெல்லி: நாட்டின் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்படாமல் போய்விட்டால் அவர் தொடந்தும் நார்த் ப்ளாக்கில் நிதி அமைச்சராகவே நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் முதல் கட்டமாக தாம் மிகவும் எதிர்பார்க்கும் சிறப்பு நிதியை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மறந்தே ஆக வேண்டியதுதான்!

மேற்கு வங்க அரசானது தமது நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு நிதி உதவியை மத்திய அரசிடம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. மத்திய அரசு கொடுத்த ரூ22 ஆயிரம் கோடிக்கான வட்டியை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை நீட்டிக்க வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. சிறப்பு நிதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் நிதி அமைச்சராக பிரணாப் நீடிப்பார் எனில் தத்தளித்தாக வேண்டிய நிலைமைக்கே மேற்கு வங்கம் சென்றாகும்.

அண்மையில் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் கூட நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். பொருளாதார ரீதியான நெருக்கடி நிலைமையை மேற்கு வங்க அரசு எதிர்கொண்டு வருவதாகவும் மமதா பானர்ஜி மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு நிச்சயம் உதவ வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதுதான் மேற்குவங்கத்தின் நிலைமை.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஆலோசனைகள் நடைபெற்ற போதுகூட பிரணாப் முகர்ஜியை மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா சந்தித்துப் பேசியிருந்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் மேற்கு வங்க நிதி நிலைமை குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்திருந்த பிரணாப், மத்திய அரசு உதவும் என்றிருந்தார்.

ஆனால் குவளையில் அடைக்கப்பட்ட நண்டுகளைப் போல் ஒன்றின் காலை மற்றொன்று வாரிவிடும் கதைதான் மேற்கு வங்க அரசியலில் நடந்தேறியிருக்கிறது. நாட்டின் உயரிய பதவிக்கு பிரணாப் சென்றுவிடக் கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார் மமதா பானர்ஜி. இரண்டு மேற்கு வங்கத்தாரிடமும் சிக்கிக் கொண்டிருக்கிறது மேற்குவங்கத்தின் நிதிநிலைமைதான்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If Pranab does not go to Raisina Hills, West Bengal financial package can go downhill | ஒருவேளை பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராகவே நீடித்தால்...?

In an era where politics has become vindictive, if Pranab Mukerjee stays in North block as Finance Minister, Mamata can forget her West Bengal financial package.
Story first published: Thursday, June 14, 2012, 15:48 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns