கச்சா எண்ணெய் விலையோடு ரூபாய் மதிப்பும் சேர்ந்து சரிவதால் பெட்ரோல் விலை குறையாது!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

கச்சா எண்ணெய் விலையோடு ரூபாய் மதிப்பும் சேர்ந்து சரிவதால் பெட்ரோல் விலை குறையாது!
டெல்லி: சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஆனால், இதன் விலை உயரும் போது மட்டும் பெட்ரோல் விலையை உயர்த்தும் இந்திய நிறுவனங்கள் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் விலையை குறைக்க மறுத்து வருகின்றன.

கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரு பேரல் 90 டாலர் என்ற அளவுக்கு சரிந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலையை ரூ. 2.20 முதல் ரூ. 2.30 குறைக்க வேண்டும்.

ஆனால், ரூபாயின் மதிப்பும் சரிந்து வருவதால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அதிக டாலர்கள் செலவாவதாகக் கூறிக் கொண்டு பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க மறுக்கின்றன.

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் ரூபாயும் மதிப்பும் குறைந்து வருவதால் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது, உடனடியாக விலையைக் குறைக்கவும் முடியாது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்த பிறகே எந்த ஒரு முடிவுக்கும் வர முடியும் என்கிறார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Oil companies not to cut petrol prices despite 18-month low global rates | கச்சா எண்ணெய் விலையோடு ரூபாயும் சேர்ந்து சரிவதால் பெட்ரோல் விலை குறையாது!

Petrol prices should have been cut by Rs 2.20-2.30 a litre as global rates have fallen to 18- month low but oil companies will not reduce prices as they watch the volatile rupee that is making imports costlier. Rupee depreciating to an all-time low of Rs 57.30 to a US dollar has wiped away most of gains arising from oil dropping below $ 90 a barrel for the first time since December 2010.
 
Story first published: Friday, June 22, 2012, 17:56 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns