ரூபாய்க்கு தொடர்ந்து நேரம் சரியில்லை... இன்று டாலருக்கு ரூ. 57 ஆனது!

இன்று படுவேகமாக மதிப்பு குறைந்து 67 பைசா வரை குறைந்து போய் விட்டது. இதனால் இதுவரை இல்லாத அளவாக 57 என்ற நிலைக்கு இறங்கிப் போய் விட்டது.
அமெரிக்க சந்தைகளில் பங்கு நிலவரம் பலவீனமாக இருந்ததாலும் பல்வேறு வங்கிகளின் தரத்தை மூடீஸ் அமைப்பு குறைத்து விட்டதாலும் இந்த நிலை.
ரூபாயின் மதிப்பு மேலும் சரியாமல் இருக்க ரிசர்வ் வங்கி தன் வசம் உள்ள டாலர்களை விற்க ஆரம்பித்தால்தான் உண்டு என்கிறார்கள். ஆனால் இன்று காலை வரை அந்த முடிவை ரிசர்வ் வங்கி செய்யவில்லை. ஆனால் இனிமேல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாயின் மதிப்பு இப்போதைக்கு உயரும் வழியில்லை என்று கூறும் பொருளாதார நிபுணர்கள் மேலும் மதிப்பு குறையும் வாய்ப்புகளே அதிகம் என்றும் கணிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications