சர்வதேச பொருளாதார நிதியத்துக்கு இந்தியா பங்களிப்பு செய்வது சரிதான்: பிரதமர் மன்மோகன்சிங்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

ஐரோப்பாவுக்கு இந்தியா தந்த ரூ. 50,000 கோடி நிதி உதவி சரியே: மன்மோகன் சிங்
டெல்லி: சர்வதேச சமூகத்தில் ஒரு உறுப்பு நாடாக இருக்கக் கூடிய இந்தியா, ஐரோப்பிய பொருளாதார சிக்கலை சமாளிக்க சர்வதேச பொருளாதார நிதியத்துக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் உதவி வழங்கியது சரியான நடவடிக்கைதான் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதார நிலைமையே படுமோசமாகி இருக்கக் கூடிய நிலையில் ஐரோப்பிய பொருளாதார சிக்கலை சமாளிக்க இந்திய நிதி உதவி அளிப்பதா? என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும் பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்துள்ளார்.

"சர்வதேச பொருளாதார நிதியத்துக்கான இந்தியாவின் பங்களிப்பு என்பதில் எந்தத் தவறுமே இல்லை. இன்னும் கூடுதலாக சொல்லப் போனால் இந்தியாவின் கையிருப்பாகவும் அது இருந்து வரும்" என்றார் அவர்.

இந்த நிதி உதவியை அறிவிப்பதற்கு முன்பாக ஜி-20 மாநாட்டின் போது பிரிக்ஸ் நாடுகளான ரஷியா, பிரேசில், சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது என்றார் அவர்.

மேலும் பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் இணைந்து மொத்தம் 75 மில்லியன் அமெரிக்க டாலரை சர்வதேச பொருளாதார நிதியத்துக்கு பங்களிப்பு செய்யவும் முடிவு செய்திருப்பதாகவும் கூறினார் மன்மோகன்சிங், ஐரோப்பிய பொருளாதார சிக்கலை சமாளிக்க மொத்தம் 430 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற தேவை நிலையில் பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு கணிசமான ஒன்றாக இருக்கும் என்றார் மன்மோகன்சிங்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Prime Minister defends India's contribution to IMF | ஐரோப்பாவுக்கு இந்திய தந்த ரூ. 50,000 கோடி நிதி உதவி சரியானதே: மன்மோகன் சிங்

Prime Minister Manmohan Singh said that it was the country's bounden duty as a responsible member of the international community to contribute 10 billion USD to help the International Monetary Fund (IMF) resolve the eurozone crisis.
Story first published: Monday, June 25, 2012, 10:32 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns