
அதே போல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் (sovereign wealth funds), பென்ஷன் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு மத்திய வங்கிகள் ஆகியவையும் இந்திய அரசின் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீட்டை அதிகரிக்க மாபெரும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜி மத்திய நிதியமைச்சர் பதவிலியிருந்து விலகி ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட உள்ள நிலையில் இந்த பெரும் நிதிச் சீர்திருத்த அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் அதிக வட்டிக்கு ரூபாயில் வாங்கும் கடன்களை அடைக்க வெளிநாடுகளில் இருந்து 10 பில்லியன் வரை டாலர்களில் கடனாக வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பலனைக் கொடுக்கும். இந்தியாவில் வாங்கப்படும் கடன்களுக்கு மிக அதிக வட்டியை வங்கிகள் வசூலித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் கடன்களுக்கு வட்டி மிகக் குறைவாகவே உள்ளது.
இப்போது இந்தியாவில் அதிக வட்டிக்கு வாங்கியக் கடனை அடைக்க வெளிநாடுகளில் இருந்து குறைந்த வட்டிக்கு வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த நிறுவனங்கள் பெரும் நிம்மதிப் பெருமூச்சை விடவுள்ளன.
அதே போல உற்பத்தி மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத்துறையில் உள்ள இந்திய நிறுவனங்கள், அவர்களுக்கு வெளிநாட்டு வருமானமும் இருந்தால், இந்தியாவில் ரூபாயில் வாங்கிய கடனை அடைக்க, வெளிநாடுகளில் இருந்து ரூ. 50,000 டாலர் வரை கடன் வாங்கிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இன்னொரு முக்கியத் திருப்பமாக இந்திய அரசு நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (foreign institutional investor-FII) ரூ. 1 லட்சம் கோடி வரை முதலீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 25,000 கோடி மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.
அதே போல அதே போல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், பென்ஷன் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு மத்திய வங்கிகள் ஆகியவையும் இந்திய அரசின் பங்குகளில் ரூ. 1 லட்சம் கோடி வரை முதலீடு செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவுக்குள் வரும் டாலரின் அளவு அதிகரிக்கும். இதனால் டாலருக்கு உள்ள தட்டுப்பாடு விலகி, அதற்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவதும் கட்டுப்படுத்தப்படும்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுபீர் கோகர்னுடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்திவிட்டு வந்த சிறிது நேரத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாயின. நாளை முகர்ஜி தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications