
இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளையும் ரிசர்வ் வங்கி கேட்கத் தொடங்கியிருக்கிறது.
தலைவர்களின் படங்களுடன் மட்டும் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டால் சுபாஷ் சந்திரபோஸ், பால கங்காதர திலகர், ரவீந்திரநாத் தாகூர், வல்லபாய் படேல், அன்னி பெசன்ட் அம்மையார் போன்றோரின் படங்களையும் வெளியிட வேண்டும் என்று ஒருதரப்பு குரல் விடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் தலைவர்களின் படங்களுக்குப் பதிலாக நாட்டின் கலாசார பண்பாட்டு அடையாளங்கள் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டால் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பேருந்துகளுக்கு, மாவட்டங்களுக்கு தலைவர்கள் பெயர் சூட்டி பெரும் கலவரத்தையே கண்டது தமிழகம். இதை ரூபாய் நோட்டிலும் புகுத்தி ரண களப்படுத்திவிடாமல் அனைவரையும் சமாதானப்படுத்தக் கூடிய வகையிலான பொது உருவங்களை வெளிய்டுவதே சரியாக இருக்கும் என்பது மற்றொரு தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications